Wednesday, March 28, 2018

@avargalunmaigal
காவரி மேலாண்மை வாரியம் பற்றி மோடியும் எடப்பாடியும் நடத்திய நகைச்சுவை கலந்துரையாடல்


மோடி : நான் உங்கிட்ட என்ன சொன்னேன்.

எடப்பாடி :  கோர்ட் அவமதிப்பு வழக்கு என்று உங்கள் அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சொன்னீங்க?

மோடி: அந்த   ஆமாம் அந்த வழக்கு எதுக்காக தொடர்கீறீங்க?


எடப்பாடி : நீங்க சொன்னாதால தொடர்கிறோம்

மோடி : யோவ் உம்ம்பேரை எடப்பாடி என்பதற்கு பதிலாக எருமைப்பாடின்னு மாற்றி வைச்சுக்கோய்யா? ஹும் உங்களை எல்லாம் வைச்சு எப்படிய்யா மேய்கிறது சரி இப்ப க்ரெக்ட்டா சொல்லு  எதுக்காக வழக்கு தொடர்கீறீங்க

எடப்பாடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படா விட்டால்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரகிறோம்

மோடி : அப்படி வழக்கு தொடர்ந்தா என்ன நடக்கும்?

எடப்பாடி : நீங்க உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு இடுவீங்க


மோடி : யோவ் உன்னைய எல்லாம் அந்த ஜெயலலிதா எப்படியா வைச்சு மேய்ச்சாங்க.. இங்க பாருய்யா நீங்க அப்படி வழக்கு தொடர்ந்தா அதை சாக்காக வைத்து  கோர்ட்டில் இதை பற்றிய வழக்கு நடப்பதால் மத்திய அரசால் இப்போதைக்கு காவரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி பேசமுடியாது என்று அடுத்த 10 ஆண்டுகள் வரை வழக்கை இழுத்துட்டு போய்விடுவோம் இது கூட தெரியாமல் நீயும் முதலமைச்சராக இருக்கிறாய்..


எடப்பாடி:  ஆஹா தலைவரே நீங்க ரொம்ப சாமர்த்தியசாலி..


மோடி;; என்னை பாராட்டுவது இருக்கட்டும்... நான் சொன்னபடி உங்கள்   எம்.பி நவநீதகிருஷ்ணன் மிக நல்லா பேச ரெடி பண்ணியதற்கு  நன்றி.

எடப்பாடி: ஆமாங்கய்யா நீங்க கொடுத்த காசுக்கும் அதிகமாக கூவிட்டாறு அதனால் கொஞ்சம் பார்த்து செய்யுங்கய்யா?

மோடி : எனக்கு வாய்த்த தமிழக அடிமைகள் மிக நம்பிக்கையானவர்கள் அவர்களுக்கு செய்யாமலா ? நல்லா செய்யுறேன் கவலைப்படாதீங்க
-------------------------------


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்: அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்

எம்.பி நவநீதகிருஷ்ணன் நடிப்புக்கு பத்மபூஷன் விருது கிடைக்குமா அல்லது ஆஸ்கர் விருது கிடைக்குமா அல்லது விஜய்டிவியில் சிறந்த நடிகருக்கான அவார்ட் கிடைக்குமா?


நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்ததால்  அவர்களை சமாளிக்க அரசியல்வாதிகள் அவர்களை மிஞ்சும் அளவுக்கு நடிக்கின்றனர்



அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாதென்றுமத்திய நீர்வளத்துறை அமைச்சர் பேசியதாக நினைவு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.