Wednesday, March 28, 2018

@avargalunmaigal
இந்தியாவில் தீர்ப்புக்கள் அளிக்கப்படுவதில்லை  வாசிக்கமட்டும் படுகின்றன..

வழக்கமாக மோடி எழுதி தரும் தீர்ப்பைத்தான் கடந்த நான்கு வருடங்களாக இந்திய நீதிபதிகள் வாசித்து கொண்டிருந்தார்கள் ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தங்கள் சொந்த மூளையை உபயோகப்படுத்தி தீர்ப்பு அளித்திருப்பதால் மோடி  அந்த தீர்ப்பை திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார். அதனால் தமிழ் மக்களே அவசரப்படாமல் பொறுத்துதான் இருக்க வேண்டும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் மோடி எழுதும் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்காது அதை மாற்ற இப்போது மாற்ற நம்மால் ஒன்றும் செய்ய இயலாது ஆனால் தேர்தல் ஒன்று வரும் அப்போது உங்கள் தீர்ப்பை வழங்குங்கள். ஆனால் மோடியின் தீர்ப்பு வந்ததும் அமைதியாக மட்டும் இருக்க வேண்டாம் அதன் பின் தமிழகத்தில்  எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்பிக்கள் தமிழகத்தில் நடமாட முடியாத படி செய்ய வேண்டும்.. அப்படி நீங்கள் செய்தால்தான் தமிழன் என்று நீங்கள் பெருமை கொள்ளலாம்



இப்படி செய்யுங்கள் அல்லது செத்து மடியுங்கள்

டிஸ்கி இந்தியாவில் தீர்ப்புக்கள் மக்களின் நலனுக்காக அல்ல நாடாளும் தலைவரின் நலனுக்காக வழங்கபடுகிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

உச்ச நீதிமன்ற நீதிபதி : அமைதி அமைதி... இந்த கோர்ட் வழங்கிய  காவிரி மேலாண்மை வாரியம் தீர்ப்பை மோடி ஒத்துக் கொள்ளாததால் இப்போது தீர்ப்பு மோடியால் திருத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது அது வந்தவுடன் அந்த தீர்ப்பை நான் உங்களுக்கு வாசித்து காட்டுவேன் அது வரை மக்கள் அமைதி காக்க வேண்டும்

4 comments:

  1. வெட்கக்கேடு_ உண்மை

    ReplyDelete
  2. ஒரு வேளை இது பெர்செப்ஷனாகக் கூட இருக்கலாம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.