ராமர் வாய்விட்டு பேச ஆரம்பித்தால்.........
ஹரே பக்தாஸ் எனக்கு கோவில் கட்டமாட்டோம் என்று நேரடியாக சொல்லுவதற்கு பதில் அயோத்தியில்தான் கட்டுவோம் என்று தலைமுறை தலைமுறையாக சொல்லி பஜனை பாடிக் கொண்டிருக்கிறீர்களே அது நியாம்மாடா
ஹரே பக்தாஸ் எனக்கு கோவில் கட்டமாட்டோம் என்று நேரடியாக சொல்லுவதற்கு பதில் அயோத்தியில்தான் கட்டுவோம் என்று தலைமுறை தலைமுறையாக சொல்லி பஜனை பாடிக் கொண்டிருக்கிறீர்களே அது நியாம்மாடா
ஹரே பக்தாஸ் சிவ பக்தன் ஒருவன் தமிழகத்தில் உள்ள காட்டை அழித்து மிக பிரமண்டாமாகசிவனுக்கு சிலை எழுப்பி அட்டகாசமாக பூஜைகள் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஆனால் தேர்தல் வரும் போது மட்டும் ரதயாத்திரை நடத்தி அதன் பின் என்னை மறந்தே போவிடுகிறீர்களே அது நியாமாடா
அடே நீங்கள் எல்லாம் பிறந்த இடங்களைவிட்டு வசதியான நகரங்களில் கார் வீடு பங்களா ஏசி என்று சொகமாக வாழுறீங்க ஆனால் எனக்கு மட்டும் பாழப் போன நான் பிறந்த இடத்தில்தான் கோவில் கட்டுவேன் என்று ஒத்தைக் காலில் நிக்கிறீங்களே அடேய்.....
அடே என் பெய்ரை சொல்லி ஆட்சியை பிடித்தவர் கூட அவன் இனத்துகார பயல் படேலுக்கு உலகிலே மிக பிரமாண்டமாக சிலை எழுப்புகிறான் அந்த இடத்தில் எனக்கு மிகப் பிரமாண்டபமான கோவில் கட்டி என்னை வணங்கினால் நான் உங்களுக்கு கேட்டதை எல்லாம் தரமாட்டேனா என்ன? அல்லது எனக்கு அங்கு பவர் இருக்காதா என்ன?
அதுமட்டுமில்லைடா அமெரிக்கா சென்ற பக்தாஸ் எல்லாம் அங்கு பிரமாண்டமாக பாலாஜி கோவில் கணபதி கோவில் துர்கா கோவில் ஐயப்பன் கோவில் மீனாட்சி அம்மன் கோவில் என்று பல கோவில் கட்டி வழி படுகிறார்கள். ஆனால் ராமா ,ராம பிரபு என்னை காப்பற்றுங்கள் என்ரு என்னிடம் கதறி அழுது ஐஐடியில் படித்து அல்லது மெடிக்கல் காலேஜில் படித்து மேலை நாடு போய் மிக வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நீங்கள் எனக்கொரு கோவில் கட்டாமல் மற்ற கோவிலுக்கு செல்லுகிறீர்களே இது நியாம்மாடா?
அன்புடன்
மதுரைத்தமிழ்ன்


 
 
 
 Posts
Posts
 
 
நம் நாட்டில் ஹிந்துக்களின் கொம்புசீவி இருக்கும் இடத்தை தகர்த்து அங்குதான் கோவில் கட்டுவோம் எனப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டுஇருப்பவர்கள் எப்படியாவது ராமர் (இவர்களே பிரசவம் பார்த்ததுபோல் ) பிறந்த இடமிது என்று மக்களை நம்பவைத்து அங்கேயே கோவில் கட்டாதிருந்தால்தான் ஆச்சரியம் ராமரே வந்தும் தடுப்பது கடினம்
ReplyDeleteஅல்லேலூயா Ramaa
ReplyDelete