Monday, March 5, 2018

#avargalUnmaigal
I'm not MGR  என்ற நாடகத்தை யுனிவர்சிட்டியில் ரஜினி நடித்த நடிப்பு மிக அபாராம்.  @superstarrajini

பல்கலைகழக விழா அதில் நான் அரசியல் பேசக் கூடாதுன்னு நினைச்சேன் ஆனால் சண்முகம் சார் பத்த வைச்சிட்டாருன்னு ரஜினி சொல்லுறாரு அப்ப அடுத்தவன் பத்த வைச்சா வெடிக்கிற ஆளுன்னு ஒத்துகிறாயா என்ன. இதை தைரியமா சொன்ன நீங்க மோடி பத்த வைச்சாரு அதனாலதான் வெற்றிடத்தில் வெடிக்க ஆரம்பிச்சு இருக்கிறேன் என்று சொல்ல தைரியமில்லையே அது ஏன் ரஜினிகாந்த சார்

நான் ரஜினியின் ரசிகந்தான் சிவாஜிபடத்திற்கு அப்புறம் ரஜினி ஒரு நல்ல படம்கூட தரலைன்னு நினைச்சுகிட்டிருந்த போது இன்று யுனிவர்சிட்டியில் நடித்த நடிப்பை பார்த்து அசந்துட்டேன். சினிமாவில் தன்னை  தாக்க வரும் எதிராளிகளை தனியொருவனாக சமாளிப்பது போலத்தான் எம்ஜியார் கலைஞர் ஜெயலலிதாவை புகழ்வது போல தன்னை தாக்க வரும் அவர்களின் தொண்டர்களை புகழ்ச்சி என்ற ஆயுதத்தால் தாக்கி சாமாளித்துவிட்டார். இதைதானய்யா சாணிக்கியம் என்பது.


நடிகன் ஏன் அரசியலுக்கு வருகிறான் என்று கேள்வி கேட்ட்கிறார்கள் தமிழக அரசு அவர்கள் வேலையை ஒழுங்காக செய்யாததால்தான் தான் அரசியலுக்கு வருகிறேன் என்று பேசுகிறார். அப்படி பேசும் அவர் இப்படி அதிமுக அரசை ஒழுங்காக வேலை செய்யவிடாமல் மிரட்டி தன் சொன்னபடி செய்ய வைக்கும் மோடியை ஒரு வார்த்தை சொல்லவில்லை காரணம் மோடி செத்தால்தான் அவரை பற்றி பேச இவருக்கு வாய் வரும்.

 மிஸ்டர் ரஜினி நீங்கள் உங்கள் வெற்றுப்பாக்கெட்டை நிரப்பவந்தேன் என்ற உண்மையை மறைத்தது ஏன் வெற்றிடத்தை நிரப்ப வந்தேன் என்று மாயஜால வார்த்தைகளை பேசுறீங்க?


தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று ஒரு போலிதனமான பேச்சு உங்கள் பேச்சு உண்மையென்றால் இனிமே அப்படி உங்க கட்சியில் வைக்கிறவனை கட்சியில் இருந்து நீக்குவீர்களா?


கல்லூரியில் அரசியல் பேசக் கூடாது என்ரு வந்தாராம் ஆனால் அவரை பேச வைச்சிட்டாங்களாம் அங்கே நீங்கள் பேசியது சுயபுராணம்தான் அதுக்கு பேரு அரசியல் அல்ல மக்களுடையை பிரச்சனைகளை தைரியமாக பேசி அதை தீர்ப்பதற்கான வழி வகைகளை அல்லது போராட்டங்களை நடத்துவதுதான் அரசியல்

மாணவர்களுக்கு அடவைஸ் பண்ணுகிறாரம் . மாணவர்களே உங்கள் கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்கனும் தேர்தல் வந்தால் வோட்டுமட்டும் போடனும் அதன் பின் கவனம் எல்லாம் படிப்பில் மட்டும்தான் இருக்கணுமாம் அப்ப என்னதிற்கு  கல்லூரி விழாவிற்கு வந்து அரசியல் பேசணும்.



தமிழ் பேசினா வளராது; தமிழன் வளந்தால்தான் தமிழ் வளரும்'  தாய்மொழ்யில்யில் படித்து தாய்மொழியில் சிந்திப்பவன்தான் வெற்றி பெறுகிறான். இது கூட புரியாமல் மாணவர்களுகு அட்வைஸ் பண்ண வந்துட்டாரு இந்த தலைவரு\\\தமிழன் ஆங்கிலம் படிக்கமாட்டேன் என்று என்றுமே சொல்லவில்லை அப்பதுல் கலாம் பிச்சைமுத்து போன்றவர்கள் தமிழைகற்று படித்தோடமட்டுமல்லாமல் ஆங்கிலத்தையும் கூட சேர்த்துபடித்தார்கள் அதனால்தான் அவர்கள் தமிழில் சிந்தி
த்து ஆங்கிலத்தில் தங்கள் எண்ணைங்களை உலகாலாவில் பதிந்ததினால் வெற்றி வாகை சூடினார்கள் இதுதான் உண்மை அதனால் லூசுத்தனமா தமிழ் பேசினால் வளராது
என்று எல்லாம் திரித்து பேச வேண்டாம்

ஆன்மிக அரசியலுக்கு அருமையான விளக்கம் சொல்லுகிறார் அதாவது உண்மையான் நேர்மையான அறவழியில் தூய்மையான இது எல்லாம் மோடி கடந்த பொது தேர்தலின் போது ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல் இந்துத்துவா அரசியல் என்று சொல்லிக் கொண்டிருந்தார் அவரின் ஏவலின் படி நீங்கள் பேசுவதுதான் சிரிப்பாக இருக்கிறது


கட்சி ஆர்ம்பிக்கப் போறேன் என்றதும்  உங்கள் கொள்கை என்ன என்று கேட்டது தப்பா? அப்படி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் தலையை சொறிந்தால் கிண்டல் பண்னாமல் வேற என்ன பண்ணுவாங்க? அதற்காக அழுமூஞ்சியாட்டம் ஒரு விளக்கம் அந்த விளக்கமாவது உருப்படியா சொல்ல முடியதா என்றால் இல்லை.கொள்கை என்னா என்று கேட்டதும் தலையை சொறியாமல் உடனே என்  கட்சி கொள்கையை என் மனைவியும் மோடியும் சேர்ந்து எழுதாறாங்க என்று சொல்ல வேண்டியதுதானே

ஜனங்க முன்னாடி பேசும் போது ஜாக்கிரதையாக பேசனுமாம் அது தலையை சொறிந்த பிந்தான் இவருக்கு தெரிகிறது போல

ரஜினி பக்கம் ஆண்டவனே இருக்கிறாராம் ஆமாம் அந்த ஆண்டவன் மோடிதானே ?

அண்ணே ரஜினி உங்கள் பேச்சில் எனக்கொரு சந்தேகம் இருக்கிறது.
மக்களுக்கே புரிந்துவிட்டது அப்புறம் அதில் என்ன சந்தேகம்?
இதை எழுதி பேசியது நீங்களா அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி கொடுத்ததை நீங்கள் பேசினிங்களா?
நான் நானேதான் எழுதி பேசினேன்
அப்படியென்றால் உங்கள் பேச்சின் உட்பொருள் என்ன?
தமிழர்கள் இயற்கையாவே மிக வடிகட்டின முட்டாள்கள் என்பதுதான்
ஒருபோதும் இல்லை தமிழக மக்களுக்கு எக்காலத்தும் இயற்கையிலே முட்டாள்கள் இல்லை உங்களைப் போல உள்ள  நடிகர்களின் படங்களை பார்த்தும் பேச்சுகளையும் பார்த்துதான் முட்டாள்களாக ஆகி இருக்கின்றார்கள்







எஸ்பிபி மண்ணில் இந்த காதல் என்று மூச்சுவிடாமல் எழுதி வைத்த பாடலை பாடியது போலத்தான்  ரஜினி கல்லூரியில்  பேசி இருக்கும் நீண்ட  முதல் வசனம். நல்ல மனப்பாட சக்தி இந்த வயசில் இருப்பதையும் நாம் பாரட்டத்தான் வேண்டும்


கொசுறு :
ரஜியினியின் பேச்சை கேட்டதும் தமிழக கிழவிகள் கொண்டாட்டம் ஏன் தெரியுமா?

ரஜினி எம்ஜியார் ஆட்சியை தரப் போகிறார் என்றதும் தமிழகத்தில் உள்ள கிழவிகள் எல்லாம் கொண்டாட்டம்  காரணம் மேடையில் கட்டிப்பிடி வைத்தியம் கிடைக்குமே என்றுதான்

ஒருவேளை ரஜினி ஆட்சியை பிடித்து எம்ஜியார் ஆட்சியை தந்தால்  13 வருஷ்த்திற்கு அப்புறம்தான் ஸ்டாலினுக்கு ஆட்சியை பிடிக்கும் வாய்ய்பு கிடைக்கும் பாவம்
ஸ்டாலின்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி:  சமுக வலைதளங்களில் ரஜினியின் நேற்றைய பேச்சை மிகவும் சூப்பருன்னு சொல்லுறவங்க ஐடியை பாருங்க எல்லாம் பக்தால்ஸ் ஐடியாகவே இருக்கும். குடுமியை மறைக்க முடியல...


3 comments:

  1. வாஜ்பேயி ஆட்சி காமராஜர் ஆட்சி என்பது போல் எம் ஜி ஆர் ஆட்சி என்று பேசுகிறாரோ

    ReplyDelete
  2. இன்னும் எதையெல்லாம் நாம் எதிர்க்ள்ளவேண்டியுள்ளதேர்?

    ReplyDelete
  3. எவ்வளவு அழகாக எம்ஜிஆருக்கு ஜாஸ்ரா அடிக்கிறான்.
    நடிகை லதா பிரச்சனையில் கோவையில் வைத்து எம்ஜிஆரால் வாங்கிய அடியை மறந்து விட்டு மெண்டல் என்ற பெயர் எடுத்ததை மறந்து பேசுறானே...

    கன்னடன் ஓட்டு வாங்க மலையாளி தயவு தேவை ஓட்டு போடுவது முட்டாள் தமிழர்கள் நாசமாப்போச்சு தமிழ்நாடு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.