Wednesday, February 28, 2018

மரபுகள் உடைக்கப்படுவது புதிய மரபுகளை உருவாக்கதானோ?


மரபு மரபு என்று நாம் பேசிக் கொண்டிருக்கும் சமயங்களிலே அந்த மரபுகள் நம் கண்முன்னால் உடைந்து கொண்டு புதிய மரபுகள் உருவாகி கொண்டே இருக்கின்றன. நாம் மரபு பண்பாடு கலாச்சாரம் என்ற ஒன்றை இறுக கட்டிபிடிக்கும் சமயத்திலே அது நம்மைவிட்டு நழுவிக் கொண்டிருக்கிறது,

நமது வாழ்க்கையை பார்க்கும் போது ஆச்சிரியமாக இருக்கிறது. மனித நாகரிகங்கள் மாற மாற நமது பண்பாடும் கலாச்சாரமும் நமது கொள்கைகளும் மாறிக் கொண்டே வருகின்றன.  இது நாம் கடைபிடித்து வந்த மரபு என்று இன்றைய நாடகளில் நாம் சொன்னால் கேட்பவர்கள் சிரிக்க தொடங்குகிறார்கள். இப்படித்தான் நாம் செயல்பட வேண்டும் என்றால் ஏன் என்ற கேள்விகள்  கணைகள் வந்து விழுகின்றன

ஒடி வரும் வெள்ளத்தின் முன்பாக ஏதும் எதிர்த்து நிற்காததது போல இந்த கால  வாழ்க்கை சூழ்நிலைகளில் மதம் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் எல்லாம் இந்த கால சமுதாயத்தின் முன் நிற்காது மாறிக் கொண்டே இருக்கிறது


நம் முன்னோர்கள் செய்தவைகள் தவறு என்று சொல்லி ,நாம் இப்போது செய்வதுதான் சரி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் போது நமக்கு பின் வருபவர்கள் நாம் செய்வதையும் தவறு என்று சொல்லி ,அவர்கள் செய்வதுதான் சரி என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை  உற்று நோக்கி பார்க்கும் பொழுது
மாறுதல் இயற்கைதான் அப்படி மாறுவதே மரபு அந்த மாறுதலே வாழ்க்கை என்பதாகத்தான் இருக்கிறது.


ஒரு காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறுவது என்ற மரபு இருந்தது அதை பார்த்து வருந்திய சமுகம் அப்படி செய்வது தவறு என்று சொல்லி கணவன் இறந்த பின் மொட்டை அடித்து அலோகங்கலப்படுத்தி வீட்டின் உள்ள்ளேயே அதுவும் பின் புறத்திலே வாழ வைத்தது .அதையும் தவறு என்று கருதி அந்த மரபை உடைத்து வெள்ளை சேலை அணிந்து நெற்றியில் குங்குமம் வைக்காமல் எந்த வீட்டு விசேஷங்களிலும் முன் நிறுத்தாமல் இருந்தாலே போது என்று புது மரபை உருவாக்கியது


அதை பார்த்து வளர்ந்த சமுகம்  பொட்டு வைக்காமல் இருந்தால் போதும் வெள்ளை சேலை எல்லாம் அணிய வேண்டாம் என்று மரபை மாற்றியது. இப்போது அந்த மரபுகளும் மாற்றப்பட்டு எப்படியும் இருக்கலாம் யாரையும் திருமண்ம செய்து கொள்ளலாம் என்று இன்றைய தலைமுறைகள் மரபை மாற்றி அமைத்தன. இப்ப சொல்லுங்க மரபை இடைத்து மாற்றி அமைப்பது தவறா அல்லது பழைய மரபையே கட்டிக் கொண்டு அழுவது சரியா?

அது போலவே முன்பு ஒரே ஊருக்குள் ஒரே சாதிக்குள் ஒரே மதத்திற்குள் ஒரே இனத்திற்குள் நடந்த திருமணங்கள் இப்போது அப்படியே தலைகிழாக மாறிக் கொண்டே வருகிறேது அதுமட்டும்மல்லமல் ஒரு ஆணும் பெண்னும்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மரபும் இப்போது உடைக்கப்பட்டு ஒரு பெண்ணும் பெண்ணும் அல்லது ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்ளும் காலத்திற்குள் நுழைந்து விட்டோம்.

இது போல நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இதை நாம் சரி என்று ஏற்றுக் கொண்டாலும் அல்லது தவ்று என்று பேசிக் கொண்டிருந்தாலும் மாறுதல்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன்.


டிஸ்கி: என்னடா மதுரைத்தமிழன் இப்படி ஒரு பதிவை எழுதி இருக்கிறானே என்று ஆச்சிரியம் வேண்டாம் இப்படி எழுத நினைத்தது  ஸ்ரீதேவி உடல்மீது தேசியகொடி போர்த்தப்பட்டது என்ற இந்த செய்தியே .

முன்பு  நாட்டை ஆண்ட தலைவர்கள் மறைந்த போதும் நாட்டிற்ககாக தியாகங்கள் செய்தவர் மறைந்த போதும் நாட்டிற்காக உயிரைக் கொடுத்த ராணுவ வீரர்களின் மறைவின் போதும் தேசியக் கொடி போர்த்தப்பட்டு கெளரவிக்கப்படும் என்ற மரபு இருந்தது.... ஆனால் அந்த மரபு உடைக்கப்பட்டு நடிகையின் மறைவுக்கும் அப்படி செய்யலாம் என்ற மரபு புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது


அன்புடன்
மதுரைதமிழன்

11 comments:

  1. மரபுகளை மீறல் என்பதே மரபாகிப்போகும் நிலை என்பது வேதனையே.

    ReplyDelete
    Replies
    1. சில மரபுகள் உடைக்கப்படுவதும் நல்லதற்கே உதாரணமாக இந்த சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அந்த சாதியினர் போகக்கூடாது இந்த சாதியினர்களுக்கு என தனி டீ க்ளாஸ் கணவன் சாப்பிட்ட தட்டில்தான் மனைவியும் சாப்பிட வேண்டும் ஆண்கள் சாப்பிட்ட பின் தான் பெண் சாப்பிட வேண்டும் இது போன்ற ஏராளமான செல் அரித்துபோன மரபுகளை சொல்லாம்

      Delete
  2. ஹலோ எப்போ ஞானியானிங்க !! ரொம்ப யோசிக்கக்கூடாது .எந்த மாறுதலும் நம்மை கேட்டு நடப்பதில்லை யாரோ தீர்மானிக்கிறார்கள் யாரோ யாரோ முடிவெடுக்கிறார்கள் யாரோ நடத்தி முடிக்கிறார்கள் .நாமெல்லாம் ஜோக்கர்ஸ் .
    எனக்கும் கூட அரசு மரியாதை தேசியக்கொடி இவற்றில் நேற்று உடன்பாடில்லை .
    அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது அதனால் அரசு மரியாதை கொடுக்கப்பட்டதோ என்று நினைக்கிறேன் .
    ஆனானப்பட்ட மார்க்ரெட் தாட்சருக்கே அரசு மரியாதை அடக்கம் கொடுக்கணுமா வேண்டாமான்னு டிபேட் போனது இங்கே .


    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் பண்னிய அன்றில் இருந்தே நான் ஞானியாகிவிட்டேன்.... அட உங்க பதிலும் ஞானியின் தத்துவம் போல இருக்கிறதே....

      ஸ்ரீதேவி விருது பெற்றதனால்தான் அவருக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டத்து என்றால் நடிகர் சிவாஜி கணேசனுக்கும் ஏன் அப்படி செய்யவில்லை இவர் Padma Shri from மற்றும் Padma Bhushan விருது பெற்றவர்தானே அது போல எத்தனையோ பேர் இப்படி விருதுகளை வாங்கி இருக்கிறார்களே அவர்களுக்கு எல்லாம் இப்படி கெளரவம் செய்திருக்கிறார்களா என்ன?

      Delete
    2. ஹலோ ஞானி aka கனம் கோர்ட்டார் அவர்களே :)


      சிந்திக்க வைச்சிட்டிங்க :) இது பத்ம விருதுகளுக்காக இருந்திருக்காது யாரவது உயர் அதிகாரிகள் பரிந்துரை பேரிலும் அரசு மரியாதை செய்யப்பட்டிருக்கலாம் .என்னை பொறுத்தவரை அரசு மரியாதை எல்லையில் குளிரிலும் பனி யிலும் மனைவி மக்களை பார்ப்போமா அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கை வாழும் இராணுவ வீரர்களுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் மற்றும் தன்னலம் கருதாது ஆபத்து நேரத்தில் பொதுமக்களை காக்கும் மக்களுக்கும் மட்டுமே தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்ய்ய வேண்டும் .

      நாம //Father, forgive them, for they know not what they do//னு சொல்லிட்டு போவோம்

      Delete
  3. கேரளத்தில் ஆடிங்கல் என்னும் இடத்தில் பொங்கல் ( சாரி பொங்கால்) வழிபாடு நடக்கும் போது சிறுவர்கள் உடலில் கம்பி சொருக குத்துவதை எதிர்த்து ஒர் போலிஸ் அதிகாரி முறையிட அது பல ஆண்டுகள் மரபு என்று சொல்லி தப்பிக்கிறார்கள்

    ReplyDelete
    Replies

    1. மரபு என்ற் பெயரில் பல கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன

      Delete
  4. இலக்கிய வாதியா மாறிட்டீங்க போல இருக்கே. அற்புதமான நடையில எழுதி இருக்கீங்க.தேர்ந்த எழுத்தாளரின் கட்டுரை மாதிரி இருக்கு. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. என்னது இப்படி எழுதவதுதான் இலக்கியாம? அப்ப நான் விளையாட்டுக்கு வரலை.... நான் நையாண்டி நக்கலோட நிறுத்திகிறேன்.....ஆமாம் நீங்கள் எழுதவது என்னாச்சு?

      Delete
  5. மதுரை தமிழன் சத்தியமாக இந்தப் பதிவை வாசித்ததும் நக்கல் நையாண்டி நகைச்சுவை என்று பரிமாணத்தில் போகும் மதுரைத்தமிழன் இப்படியும் அழகாக எழுதுவார் என்று சொல்லிய பதிவு!! அருமை!! ரொம்ப ரசித்தோம்...

    சில மரபுகள் மாற்றப்படுவதில் மீறப்படுவதில், தகர்க்கப்படுவதில் தவறே இல்லை. குறிப்பாக நீங்கள் சொல்லியிருக்கும் பெண்கள் விஷயம். அது போன்று திருமணங்கள். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லப்படுகிறதுதானே!! மனிதனின் வளர்ச்சியே அதில்தானே இருக்கிறது...

    அதில் சில மரபுகள் மீறப்படும் போது நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லைதான்...நீங்க சொல்லிருக்கீங்க பாருங்க...நம்ம முன்னோர்கள் சொன்னதை நாம் மீற நாம் செய்வதை நம் அடுத்த தலைமுறையினர் கேள்வி கேட்க...ஆம் இதுதான்...இதில் மனிதன் சிந்திக்கிறான் என்றும் சொல்லலாம் அலல்து கண்மூடித்தனமாகச் சிந்திக்கும் மனிதர்கள் தங்கள் வேண்டாத மரபின் மீது வெறித்தனமான பற்றுதல் வைத்து முரண்டிக் கொள்வது...சாதிச் சண்டை, கௌரவக்கொலைகள்...மதச் சண்டை இப்படியானவை மனிதன் ஒரு பக்கம் வளரவில்லை என்றும் சொல்லுகிறது.
    இப்படிச் சில மரபுகள் மீறபப்டுவது நலல்து ....சில மரபுகள் என்ற பெயரில் ரொம்பவே கொடுமைகளும் நடக்கின்றன....மொத்தத்தில் பதிவு செம!!!!

    இருவரின் கருத்தும்...

    ReplyDelete
    Replies
    1. இங்கு பதிந்திருக்கும் படத்தை பேஸ்புக்கில் பதிந்துவிட்டு சற்று யோசித்த போது மனதில் தோன்றியது அப்படி எழுதும் போது நாம் படித்த புத்தங்கள் & பெரியவர்கள் இளைஞ சமுகத்தினர் சொன்னது மனதில் நினைவுக்கு வந்ததால் அதை அப்படியே பதிவாக்கி தந்து இருக்கிறேன். நீங்கள் சொல்லவது போல அருமையான பதிவுகள் எழுதுவதற்கு பல புத்தங்களை பலரின் பேச்சுக்களை கேட்டு இருந்தால் மட்டுமே எழுத முடியும்.... அதுதான் உண்மை

      உங்கள் இருவரின் கருத்துக்கும் நன்றி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.