Friday, February 23, 2018


கழக உடன் பிறப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்

வருகிற தேர்தலில் திமுக ஜெயித்து வந்திடுமோ என்றுதான் மோடி ஆதாரவாளர்களும் ஜெயா ஆதாரவாளர்களும் பயப்படுகிறார்கள் என்று சொல்லுங்க மக்கள் நம்புவாங்க  அதுதான் உண்மையும் கூட ஆனால் அதற்கு பதிலாக திமுக ஜெயித்து வந்து மக்களுக்கு நல்லது செய்துவிடுமோ என்று மோடி ஆதாரவாளர்களும் ஜெயா ஆதாரவாளர்களும் பயப்படுகிறார்கள் என்று சொல்லமட்டும் செய்யாதீங்கய்யா ராசாக்களா.....அப்படி சொல்லுவது  நம்பும்படியாக இல்லை ...காமெடியாகவே இருக்கிறது


கொசுறு :


எனக்கென்னவோ சினிமா தயாரிக்க கந்துவட்டி கொடுக்கும் அன்பழகன் மீதுதான் சந்தேகமாக இருக்கு.. சினிமா தயாரிக்க கந்துவட்டி தந்தவர் இப்போ மிக குறைந்த வட்டி விகித்ததில் கட்சிகள் ஆரம்பிக்க கடன் கொடுக்கிறாரோ என்னவோ....அதுனாலதான் அவனவன் கட்சி ஆரம்பிக்கிறான்


கமலும் நானும் வேறுவேறு பாதையில் சென்றாலும் இணையும் இடம் ஒன்றுதான். #ரஜினி
மோடியின் காலடிதானே


#BreakingNews நீரவ் மோடி எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க எல்லா ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் அவர் படம் ஒட்டப்பட்டு இருக்கிறதாமே?

கமல் வாங்கும் வாக்குகள் திமுகவை பாதிக்கும்- H. ராஜா

நிச்சயம் பாஜகவை பாதிக்காது ஏனென்றால் ஏதாவது வாங்கினாத்தானே பாதிப்பதற்கு



Global Business Summit ல  கார்ப்பரேட் சாமி ஜக்கி வாசுதேவுக்கு அங்க என்ன வேலை அப்படினு நம்ம கேட்கிறார்கள்.
ஆன்மிக பிஸினசில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை மற்றவர்களுக்கு சொல்லிதர போயிருக்கலாம் அல்லவா

எடப்பாடிக்கும் பன்னீர் செல்வத்திற்கும் அரசியல் வாரிசுகள் யார் என்று பார்த்தால் அது கமலஹாசனும் ரஜினிகாந்தாகத்தான் இருக்கும் ஏன்னா இந்த இரண்டும்தான் மோடியின் புதிய அடிமைகள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
23 Feb 2018

6 comments:

  1. அடிமைகள் புதிய வடிவமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. ஆட்சி.. ஆச்சி.. ஹா ஹா ஹா ஒரு எழுத்துத்தானே வித்தியாசம்... அது ஆச்சியின் வீடோ ட்றுத்?:) அழகா இருக்கு.. அழகை ரசிக்கத் தெரியோணும் அதிராவைப்போல:)..

    ReplyDelete
    Replies
    1. எப்பவும் இல்லாதவர்கள்தான் தன்னிடம் இல்லாததை ரசிக்க முடியும் சரிதானே

      Delete
  3. பகிர்வுக்கு நன்றி..😂😂

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.