Sunday, February 11, 2018

@avargal unmaigal
விதைப்பதோ விஷம் ஆனால் எதிர்பார்பதோ?

எந்த பொருளும் அது பயன்பாட்டில் இருக்கும் வரைதான் அதற்கு மதிப்பு அதன் பிறகு அது செல்ல வேண்டிய இடம் குப்பைதொட்டிதான் என்று அறிந்தோ அறியாமலோ நாம்  இளைய சமுதாயத்திற்கு தவறாக வழிகாட்டிவிட்டோம். அதனால்தான் என்னவோ அவர்கள் வயதான பெற்றோர்களை அவர்களால் இனி பயன் ஏதும் இல்லை என்று குப்பை தொட்டியில் தூக்கி போடுவது போல முதியோர்களுக்கான குப்பை தொட்டியான முதியோர் இல்லத்தில் தூக்கி ஏறிகின்றனர்

இதற்காக அவர்களை குறை சொல்லுவதா அல்லது அவர்களை அப்படி வளர்த்தவர்களை குறை சொல்லுவதா? நாம் வாழும் வாழ்க்கை முறையில் இருந்தே குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கின்றனர். முன்றைய கால கட்டத்தில்  இந்த காலத்தில் இருப்பது போல ஏதும் யூஸ் அண்ட் த்ரோ முறையில் இல்லை. அந்த காலத்தில் தூக்கி ஏரியப்பட்ட பொருட்கள் எல்லாம் மறு சுழற்சி முறையில் மீண்டும் பயனுக்கு வந்தன. அந்த காலத்தில் குப்பைகள் விவசாய நிலங்களுக்கு உரங்களாக மாற்றப்பட்டன. அது போல வீட்டு உபயோகப் பொருட்கள் (பாத்திரங்கள்) மண்ணால் செய்யப்பட்டு  பயன்பாட்டிற்கு இருந்தன அது போல ஈயம் பித்தாளை போன்ற உலோகங்களை கொண்டும் பாத்திரங்கள் செய்யப்பட்டன அது ம்றுபயன்பாட்டிற்குள்ளும் வந்தது. ஆனால் எப்போ பளபளவென்று சில்வர் பாத்திரங்கள் வர ஆரம்பித்தனவோ அப்போதுதான் நமக்கு கேடு காலம் ஆரம்பித்தது. அதன் பின் வந்த வண்ணமான பிளாஸ்டிக் பொருட்களும் அதன் பின் எலக்ட்ரானிக் சாதனங்களும் வந்து நம்ம் வாழ்க்கையை அப்படியே மாற்றிப் போட்டுவிட்டன. இது போலத்தான் பளபளப்பான மேலைநாட்டு நாகரிகத்தை பின்பற்றி நம் நாகரிகத்தை பின் பற்ற ஆரம்பித்து வாழ்க்கையை நடத்தியதை பார்த்த இளம் சமுகத்தினர் நமக்கு வயதானவுடன் முதியோர் இல்லம் என்ற குப்பை தொட்டியில் நம்மை தூக்கி ஏறிகின்றனர்.


இப்படி செய்யும் அவர்களை தூற்ற நமக்கு என்ன உரிமை இருக்கிறது. நாம் விதைத்ததோ விஷம் ஆனால் எதிர்பார்பதோ  அதற்கு எதிரனானதைத்தான்.


முன்பு எல்லாம் வயதாகிவிட்டால் அவர்களை பயனற்றவர்களாக கருதமாட்டார்கள் அவர்கள் மிகவும் பயனுள்ளவர்களாக கருதப்பட்டு வீட்டில் வைத்து மரியாதை செய்யப்பட்டு வந்ததால் அவர்கள் வீட்டில் இருந்து பேரன் பேத்திகாளை கவனித்து வந்தனர். அப்படி அவர்கள் செய்ததால் குழந்தைகள் மன அழுத்தம் இல்லாமல் வாழ்ந்தனர்.. மனக்கஷ்டம் வந்தால் அம்மா அப்பாவிடம் முறையிடுவார்களோ இல்லையோ தாத்தா பாட்டியிடம் சொல்லி மன அழுத்ததை குறைத்து கொள்வார்கள் அவர்கள் சொல்லும் ஆறுதலை வைத்து. அதுமட்டுமல்லாமல்  தாத்தா பாட்டிகள் வீட்டிலே இருந்து வந்ததால் இந்த கால பருவ குழந்தைகள் செய்யும் தவறுகளை அந்த காலத்தில் செய்ய முடியாது இருந்தது. இன்றோ அம்மா அப்பா ஆபிஸில் இருந்து வர லேட்டாகும் அல்லது அவர்கள் வெளியூர் சென்றுவிட்டாலோ நிச்சய்ம அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் பல தவறுகளை செய்ய ஆரம்பிக்கின்றனர். இதற்கு காரணம் வயதானவர்களை பயன் அற்றவர்களாக கருதி குப்பை தொட்டியான முதியோர் இல்லத்தில் விடுவதால்தான்  .


அந்த காலத்தில் வயதானவர்கள் வீட்டிலே இருந்ததால் வீட்டிற்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது அதுமட்டுமல்லாமல் வீட்டின் கதவுகள் காலையில் திறக்கப்பட்டு இரவில்தான்  சாத்தப்படும்  அதனால் இன்றைய காலத்தில் உள்ளது போல கள்ளக் காதலுக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக இருந்தது ஆனால் மேலை நாட்டு கலச்சாரத்தை பின்பற்றி அக்கல் பக்கம் பழகாமல் வீட்டுக் கதவுகளை என்னெறமும் சாத்திவிடுவதால் தவறுகளும் திருட்டுகளும் செய்ய வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன்

இப்படி எல்லாம் நாம் மாறிவிட்டு காலம் கெட்டுச்சு கலாச்சாரம் கெட்டு இளைய சமுதாயம் கெட்டுடுச்சு என்று புலம்பி கொண்டிருக்கிறோம்

@avargalunmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்
11 Feb 2018

7 comments:

  1. அருமையான, அட்டகாசமான பதிவு,..நிறைய சொல்லலாம்,,இன்னும் வாசித்துவிட்டு வரென்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உடனடியாக பதில் அளிக்காதற்கு மன்னித்து கொள்ளுங்கள் கீதா உண்மையிலே நேரமில்லை

      Delete
  2. மதுரை கை கொடுங்க!! ஓ நீங்க கை கொடுக்க மாட்டீங்க...சரி பரவால்ல...ரொம்பவே ஆழ்ந்து வாசித்தேன். நிச்சயமாக நாம் தான் விஷத்தை விதைக்கிறோம். யூஸ் அண்ட் த்ரோ கல்சர்!!!...

    நான் கல்லூரி படித்த காலத்தில் எங்கள் கல்லூரியில் வெல்த் ஃப்ரம் வேஸ்ட் என்று ஒரு போட்டி வைத்தார்கள். அதன் பின் நான் அதைப் பற்றி எனக்கென்று இருந்த ஒரு குழுவில் சொன்னேன்.. அதில் ஒரு நல்ல ஆசிரியர் உண்டு எங்களை வழி நடத்த...அறிவு பூர்வமாகப் பேசப்படும் ஒரு குழு. இது கல்லூரிக்கு அப்பாற்பட்டது. அதை பேஸ் செய்து இதில் ஒரு வாழ்வியல் தத்துவமே இருக்கு என்று சொல்லி எப்படி என்பதை எங்களிடமே கேட்டார் அந்த ஆசிரியர்.....ஒரு பேப்பரில் சிறு கட்டுரையாக எழுதச் சொன்னார்...அப்போது நான் எழுதியது..வாழ்வில் எதுவுமே வேஸ்ட் என்பது இல்லை....காந்திக் கணக்கு என்று சொல்லி எங்கள் வீட்டில் ஸாரி தாவணி ஆவதும், தாவணி சிறிய சிறிய டவல் ஆவதும், ஆண்களின் பேன்ட்கள் பைகள் ஆவது, மிதியடிகளாவதும்..இப்படிக் கடைசிப் பயன்பாடு வரை பயன்படுத்தப்படும். அது போல நமக்கு வயதாகும் போது அந்த நிலையில் என்னென்ன செய்ய முடியுமோ அதை நம் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டும். குழந்தைகளும் பெரியவர்களை அந்த வயதில் அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய அனுமதித்து அவர்களைச் சுயமாக விட்டாலே அவர்களுக்குச் சுதந்திரமாக மகிழ்வாக இருக்கும்...நமக்கும் உதவியாக ஒரு சுய மரியாதோயோடு வாழ்வார்கள்...நாமும் அவர்களைப் பேணிக் காக்க வேண்டும்..கடைசி வரை..சிறு துணியைக் கூடக் கடைசி வரை பாதுகாப்பது போல்..பெரியவர்களை நாம் பாதுகாத்தால் அவர்களுக்கு வயதானாலும் வெல்த் ஃப்ரம் வேஸ்ட்!!!... .என்று சொல்லியதை அவர் மெச்சினார்...என் மகனுக்கும் இதை அப்படியே கடத்தினேன்..

    கீதா

    ReplyDelete
    Replies

    1. சகோ கீதா செளக்கியமா? உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... உங்களின் அனுபவ கருத்துகளையே பதிவுகளாக இடலாம் போல இருக்கே.... கதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்காமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களின் அனுபவங்களை பதிவுகளாக தொடர்ந்து எழுதுங்கள்

      Delete
  3. என் பாட்டி (அப்பா வழிப் பாட்டி) என்னுடன் தான் தனது 92 வது வயதில் மரணம் தழுவும் வரை இருந்தார். அவர் 85, 86 வயதில் பாத்திரம் தேய்க்கிறேன் என்று தேய்த்தால் நான் விட்டு விடுவேன். அவருக்கு அது சுதந்திரம். மகிழ்ச்சி. ஹப்பா என்னை லாயக்கத்தவ, முடியாதுனு ஒரு இடத்துல உக்காத்தி வைக்கலை என் பேத்தி என்பார். அவரால் செய்ய்ய முடிந்தவற்றைச் செய்ய விட்டுவிடுவேன். அவருக்கு அது புத்துணர்ச்சி. எனக்கும் நிறைய ரெசிப்பிஸ் சொல்லிக் கொடுப்பார். என் மாமியாரையும் அப்படியே...எல்லோரும் கேட்பார்கள் என்ன நீ, பாட்டி, மாமியாரை வேலை வாங்குகிறாய் என்று....இது வேலை வாங்குதல் அல்ல..அவர்களுக்கு அளிக்கும் மரியாதை, சுதந்திரம்...அவர்களும் இந்த வீட்டவர்கள் என்ற ஃபீலிங்க்....அவர்களுக்கும் இருக்கும்...இல்லை என்றால் அவர்களுக்கு....நம்மை ஒன்னுத்துக்கும் உதவாக்கரைனு ஒதுக்கிட்டாங்கனு ஒரு மனப்பான்மை வந்துவிடும்....அவர்களது ஹெல்த் பாதிக்கப்படும்...அவர்கள் செய்வதில் குறை இருந்தாலும் நான் கண்டு கொள்ள மாட்டேன்...பாட்டி, மாமியார் பாத்திரம் கழுவும் போது சில சமயம் பாவம் அவர்கள் வயது காரனமாகக் சரியாகக் கழுவி இருக்க மாட்டாங்க ஆனால் அது பெரிய விஷயமே இல்லை....நாம் கழுவுக் கொண்டால் போச்சு...இப்படிப் பல வற்றிலும்..அதே சமயம் அவர்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்து ஹெல்த் எல்லாம் கவனித்துக் கொண்டல்...அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்துக் கொண்டால் போதும்..

    பெரியவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல் கொஞ்சம் தங்களை மாற்றிக் கொண்டு, குழந்தைகள் வேலை காரணமாக இருக்கும் ஊருக்குச் சென்று அவர்களோடு இருக்க வேண்டும். அல்லாமல் எனக்குச் சரிவாரது என்று சொல்லி தாங்கள் இருக்கும் இடத்தில் தான் இருப்போம் என்ற பிடிவாதமும் கூடாது. குற்றம் கண்டு பிடிப்பது குறை கண்டு பிடிப்பது போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும்...வின் வின் சிச்சுவேஷன் இருந்தால் குடும்பம் வெற்றி க்ரரமாகச் செல்ல்லும்...இன்னும் சொல்லலாம்...
    ரொம்ப நீண்டுருச்சு.அப்புறம் நீங்க சொல்லுவீங்க கலாய்ப்பீங்க ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
  4. ஹலோ ! பிரண்ட் எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு உங்க பதிவுகள் பார்த்து இன்னிக்குதான் டைம் கிடைச்சது நானும் பிளாக்ஸ் பக்கம் வர டாஷ் போர்டில் பதிவு பார்த்ததும் மகிழ்ச்சி .

    நல்ல பதிவு ஆனால் வெளிநாட்டினர் பலர் அவங்களா விரும்பி தானே முதியோர் ஹோம்ஸுக்கு போறாங்க அடுத்தது அவங்ககிட்டா பணம் எப்பவும் இருக்கும் நம்ம நாட்டு மக்கள்தான் எல்லாவற்றையும் பிள்ளைங்ககிட்ட கொடுத்திட்டு தனக்கான தேவைகளுக்குக்கூட காசில்லாம கடைசிக்காலத்தில் அவதிப்படறாங்க .

    ReplyDelete
    Replies

    1. ஹலோ ஏஞ்சலின் என்னை ஞாபகம் வைச்சிருக்கீங்களா? மறந்துட்டீங்க என்று நினைத்தேன்.... நான் பதிவுகள் எழுதுவதையும் இணையம் வருவதையும் தற்காலிகமாக குறைத்து இருக்கிறேன் மீண்டும் சிக்கிரம் வருவேன் அதை வரைக்கும் மறந்திடாம ஞாபகம் வைச்சிக்கோங்க ஸ்வீட் சிக்ஸ்டின் நம்மை சுத்தமாக மறந்துட்டாங்க. அவங்கிட்ட பேசினால் ஹாய் சொன்னேன் என்று சொல்லுங்க

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.