Friday, February 23, 2018

@avargal unmaigal
ரஜினி சொல்ல நினைத்ததும் சொல்லி சென்றதும் Modi's vehicle

ரஜினிகாந்த் சொல்ல நினைத்தது மனைவி சத்தம் போட்டால் போடட்டும் என்றுதான். ஆனால் அப்படி சொல்லிவிட்டு வீட்டிற்கு செல்ல முடியாது என்ற காரணத்தால் மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம்  என்று சொல்லி சென்று இருக்கிறார் இதெல்லாம் தப்பா என்ன? கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணும் நாம் இப்படி எத்தனி தடவை சொல்லி சமாளிச்சு இருப்போம். இதற்கு  ரஜினிகாந்த் என்ன விதிவிலக்கா?# போங்க்ய்யா போங்க

 ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை பொத்திக்கொண்டு இருந்துவிட்டு இப்போது வாயை திறக்கும் ரஜினியும் கமலும் மோடி போன பின்பு நிச்சயம் மத்திய அரசை பற்றி வாய் திறப்பார்கள் அதுவரை மக்கள் அமைதி காக்க வேண்டும்




பேஸ்புக்கில் ஒருவர்  (கமல்ஹாசன்)ஒரு மனைவியுடன் ஒற்றுமையாய் குடும்பத்தை நிர்வாகம் செய்யத் தெரியாதவர்களால் ஒரு மாநிலத்தை எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? என்று கேட்கிறார்.

அதற்கு நான் "அப்ப ஒரு மனைவியுடன் ஒற்றுமையாய் குடும்பத்தை நிர்வாகம் செய்கின்ற எடப்பாடி & பன்னீர் செல்வம   மாநிலத்தை மிக நன்றாக  நிர்வாகம் செய்யகிறார்கள் என்று சொல்ல முடியுமா என்ன? என்று கேட்டேன்# நான் கேட்டது தவறாய்யா


இஸ்லாமியர்கள் இறந்த வீட்டை பற்றி பேசும் போது அதை மய்ய வீடு என்று சொல்லுவார்கள்..  மய்யத்திற்கு எனக்கு தெரிந்த் அர்த்தம் இதுதான்


பிக்பாஸின் இன்னொரு வெர்ஷன்தான் மக்கள் நீதி மய்யம் அதனால்தான் இதில் சினேகன் ஸ்ரீப்ரியா, பரணி உள்ளிட்ட பிரச்சார பீரங்கிகளும் படையில் சேர்ந்துள்ளனர்.. விஜய் டீவியின் பிக்பாஸ் போல அந்த மக்கள் நீதீ மய்யம் ஷோ பிரபலம் அடையுமா என்ன?


கமலின் கட்சியில் அதிக அளவு உறுப்பினர்கள் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஏர்செல் சதி செய்கிறதாமே அதனாலதான் அது வொர்க் ஆகமாட்டேங்கிறதாமே# இப்படி ஏதாவது உளறிவைப்போம்

 என் மனைவி வெளிநாட்டுல மிக வசதியாக இருக்கிர இந்திய மாப்பிள்ளைதான் வேணும் என்று  அவளின் தோழி வீட்டார்கள் கேட்கிறார்களாம் அப்படிப்பட்ட மாப்பிள்லையை எப்படி கண்டுபிடிக்கிறது என்று என்னிடம் கேட்டாள்.

அதற்கு நான் சொன்னேன் அதெல்லாம் ரொம்ப ஈஸியம்மா இந்தியாவிலே  எவன் ஒருத்தன்  பேங்குல அதிக அளவு லோன் வாங்கி இருக்கிறானோ அவந்தான் வெளிநாட்டி வசிக்கும் வசதி  நிறைந்த நல்ல மாப்பிள்ளை என்று சொன்னேன் # அதை கேட்ட என் மனைவி உங்ககிட்ட போய் கேட்டேனே என்று அவள் தலையில் அடித்து கொள்வதற்கு பதிலாக என் தலையில் பூரிக்கட்டையால் அடித்து செல்கிறாள். அப்படி நான் என்ன தப்பா பேசிட்டேன்


என்னைப் பொறுத்தவரை மோடி ரஜினிகாந்த கமல்ஹாசன் மிகபெரிய அறிவாளிகள். நம்மபாதவர்கள் கிழே உள்ள வரியை படித்தால் நிச்சயம் நம்பூவீர்கள்

 நான் பார்த்த வரையில் கெட்டவர்கள் அறிவாளியாக இருந்து கொண்டு மற்றவர்களை எளிதாக ஏமாற்றுகிறார்கள் அதே சமயத்தில் நல்லவர்கள் முட்டாள்களாக இருந்து கொண்டு மற்றவர்களிடம் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.