Wednesday, February 14, 2018

@avargalunmaigal
ஜெயலலிதாவின் படத்தை வைப்பதில் தவறு ஒன்றுமில்லையே?

ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில்  வைப்பது தவறு என்று சொல்லுபவர்களே நல்லா சிந்தித்து பாருங்கள் அங்கு அவர் படத்தை வைப்பதில் எப்படி தவறு இருக்க முடியும்.களவாணிகள் கூடும் இடம்தான் சட்டசபை என்று ஆகியப் பின் அங்கு அம்மையாரின் படத்தை வைக்கமால் புத்தர் ஏசு இராமர் படத்தையா அங்கு வைக்க முடியும் அப்படி வைத்தாலும் அது அவர்களை  இழிவுபடுத்துவது போலத்தானே இருக்கும்.

அதனால்தான் திருட்டு கூட்டம் அதன் முன்னால் தலைவியான அம்மாவின் படத்தைத்தான் வைத்து அழகு பார்க்கிறார்கள்.


தவறுகள் எல்லோரும்தான் செய்கிறார்கள் அது சிறிய தவறாக இருக்கலாம் அல்லது பெரிய தவறாக கூட இருக்கலாம் ஆனால் அந்த தவ்றுகள் வெளியே தெரியதாவரை பிரச்சனை இல்லை அல்லது தெரிந்தும் நிருபிக்கப்பாடமல் இருந்தாலும் பிரச்சனை இல்லை ஆனால் அந்த தவறுகள் தெரிந்து அது நிருபிக்கப்பட்ட பின்பும் தவ்ரு செய்தவரை புனிதமானவராக கருதுவது என்ன மனநிலை?

குழந்தைகள் சிறுவர்கள் இளைஞர்கள்  பெற்றோர்கள் கணவன் மனைவிகள், அதிகாரிகள் சாமியார்கள் இப்படி பலரும் தவறு செய்கின்றனர் அவர்களும் மாட்டிய பின் அதற்குரிய தணடனையை அனுபவிக்கதானே செய்கின்றனர்... அப்படி இருக்க ஜெயலலிதா மட்டும் அதில் இருந்து விதிவிலக்கா என்ன? இல்லை தமிழ் சமுகத்திற்கு அப்படி யாரும் செய்ய முடியாத சாதனையை செய்துவிட்டாரா என்ன? அதற்காக அவரை மன்னிப்பதற்கு....

இதுல வேற விஜயதரணி என்ற ஒரு எம் எல் ஏ ஜெயலலிதா என்ற பெண்மணி  சாதனை ஏதோ புரிந்துவிட்டது மாதிரியும் அதற்காக தன் கட்சி தலைமை என்ன சொன்னாலும்  அதை எதிர்ப்பேன் என்று வீர முழக்கம் இட்டு இருக்கிறார் டிவி விவாதத்தில். இது போல பலரும் ஜெயலலிதா படத்தை வைப்பதில் என்ன தவ்று என்று கேள்விகள் எழுப்புகின்றனர்.


அப்படி என்ன ஜெயலலிதா சாதனை புரிந்துவிட்டார்? அவர் என்ன பெண்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு பொது கழிப்பறைகளை கட்டிக் கொடுத்தாரா? பெண்கள் எல்லாம் டாஸ்மாக்கால் குடும்பங்கள் அழிகின்றனவே அதை தடுக்க குரல் கொடுத்த போது செவி சாய்த்தாரா? சென்னையில் வெள்ளம் வந்த போது ஒடோடி வந்து உதவி செய்தாரா? தனது அரசியல் வாரிசாக அல்லது கழ்கத்தில் தனக்கு அடுத்து கட்சியை வழி நடத்தி தமிழகத்தை ஆள வேற் தலைவர்களை ஏதும் வள்ர்த்துவிட்ட்டாரா என்ன?

அவர் செய்தது எல்லாம் தன் சாதிக்கார ஆண்களை தவிர மற்ற சாதிக்கார அடிமைகளை மட்டும் தன் காலில் விழச் செய்து சந்தோஷப்பட்டார் அதை தவிர வேறு ஏதும் அவர் செய்யவில்லை.

அடிமைகளை தன்னை சுற்றி வைத்து இருந்ததால் அந்த அடிமைகள் இன்று அடிமைகளாகி யாரோ ஒருவரின் ஆசைகளுக்காக தமிழகத்தை நாசம் பண்ணிக் கொண்டி இருக்கிறார்கள் அந்த களவாணி அடிமைகள்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.