Thursday, February 15, 2018

@avargalUnmaigal
இப்படியும் சில மனிதர்கள்

நம் வாழ்க்கையில் தினம் தினம் பல நபர்களை பார்த்து கொண்டிருக்கிறோம். அப்படி பார்க்கையில் அவர்களை நாம் சற்று கூர்ந்து நோக்கினால் சில விஷயங்கள் நம்கண்ணிற்கு புலப்படும்.

மரியாதையாக அழகாக நாசூக்காக பேசுவர்கள் மனதில் விஷமும் அதே  உங்காத்தா உங்கம்மா என்று கெட்டவார்த்தைகளை வரிக்கு வரி கொட்டுபவர்களிடம் உண்மையான நேசமும்  இருக்கிறது இதை நானும் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.

படித்தவர்கள் மரியாதையாக அழகாக நாசூக்காக பேசுவர்கள் சமுகத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொண்டு முதுகில் குத்தும் வேலைகளை செய்வார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒருவருக்கு உதவி செய்கிறார்கள் என்றால்  ஏதோ ஒரு பலனை மனதில் கொண்டுதான் அதை செய்வார்கள். இதில் நல்ல வேஷம் போடும் நம் பதிவர்களும் அடங்கும்.

இதே சமயத்தி மிகவும் கொச்சையாக பச்சையாக எதையும் பேசுபவர்கள் தங்களை சமுகத்தில் மோசமாக காட்டிக் கொண்டாலும் உங்களுக்கு ஒரு  கஷ்டம் என்று வரும் போது தங்கள் நிலைமைக்கு மேலாக உதவி செய்து நமக்கு கை கொடுப்பார்கள்.


இதை என் வாழ்க்கையில் நேரிடையாகவே கண்டு இருக்கிறேன்..


உங்கள் வாழ்க்கையில் நீங்களும் கண்டு இருக்க கூடும்தானே?


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. என்ன ஆச்சி மதுர... ?

    ReplyDelete
    Replies
    1. ஒரு பதிவரின் பதிவிற்கு கருத்துக்கள் இட்டேன் அது தொடர்பான சிந்தினைகள் மனதில் எழுந்ததால் விளைந்த பதிவுதான் இது அவ்வளவுதாங்க்

      Delete
    2. அப்போ நீங்க அழல்லியா கர்ர் :) என் டிஸ்யூவை திரும்ப கொடுங்க :) அது சூப்பர் செலிப்ரிட்டி ஜப்பனீஸ் டிஸ்யூவாக்கும்

      Delete
  2. இப்போது தான் இது புரிந்ததோ.. ? எழுத்தை வைத்தும் பதிவுகளை வைத்தும் இன்னார் இப்படி என எப்படி முடிவெடுக்க முடியாதோ அப்படித்தான் நேரில் காண்பவர்களும்,. ஒய்யாரக்கொண்டையாம் தாழம் பூவாம். உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என ஏன் சொல்லிட்டு போனாங்களாம்?

    ReplyDelete
  3. ஆமாம் ! நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன் பார்த்திருக்கிறேன் .நாம் யாரை மோசமானவர்கள் என்று நினைத்தோமோ அவர்தான் எதிர்பாராத தருணத்தில் நமக்காக உதவி செய்ய ஓடி வருவார் ..பேஸிக்கா எல்லா மனிதர்களுக்கு ஒரு சிறு பொறாமைக்குணமுண்டு அது நம் கண்ணுக்கு தெரிவதேயில்லை தெரியவரும்போது மனசை உடைச்சிடும் .அதனால் எந்தவித எதிர்பார்ப்பையும் வளர்த்துக்கொள்ளக்கூடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளணும் .என்னைப்பொறுத்தவரை நேருக்குநேர் மோதும் எதிரி எனக்கு பிடிக்கும் .பின்னாலிருந்து குத்துபவர்களை ஆரம்பத்தில் கண்டு மெதுவா விலக்கி விடுவது நமக்கு நல்லது :)

    ReplyDelete
  4. ஓகே சரி அது என்ன //நல்ல வேஷம் போடும் //
    கூல் டேக் இட் ஈஸி .உங்ககிட்டருந்து கலாய்த்தல் மற்றும் காமெடி பதிவுகள் வந்தா ஜாலியா இருக்கும் இது எதோ மன சங்கடப்பதிவு தோணுது .எதுவாக இருந்தாலும் டோன்ட் வொரி பி ஆப்பி :)

    ReplyDelete
  5. இப்படியும் சொல்லலாம், அப்படியும் சொல்லலாம் மதுரை... அவரவர்க்கு ஒவ்வொரு அனுபவம்! என் அனுபவத்தில் குங்குமப்பொட்டு வைத்த ஆண்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருப்பேன்!!!

    ReplyDelete
  6. இந்த விசயத்தில் நான் பெரும்பாலும் கையாள்வது “நம்பநட நம்பி நடவாதே”... ஆனா அதுக்காக எல்லோரையும் நம்பாமலும் வாழ முடியுமோ... எழுத்தை வைத்துத்தான் முகம் தெரியாதோரைக் கணக்கெடுகிறோம்.. ஆனா அதுகூடத் தப்பாகலாம்..

    ஏனெனில் எழுதும்போது நடிக்க முடியும், நேரில் பழகும்போதுதான் உண்மை முகம் தெரியும்.

    என்னைப் பற்றியும் ஆரார் என்னவெல்லாம் நினைச்சுக்கொண்டிருக்கிறார்களோ கடவுளே அந்த வைரவருக்கே வெளிச்சம் ஹையோ ஹையோ..:))..

    அடுத்தவர் எப்படியும் இருக்கட்டும் நாம் முடிந்தவரை நல்லவர்களாகவே மகிழ்ச்சியாக இருந்திடுவோம்.

    ReplyDelete
  7. மனிதர்கள் பலவிதம் நீங்கள் சொல்வதை மறுக்கவும் இயலாது.

    இதில் முரணும் உண்டு தமிழரே...

    ReplyDelete
  8. மதுரை என்ன ஒரே அனுபவப் பாடமாக வருகிறது!! ஹா ஹா ஹா

    மனிதர்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம்...இதில் வைஸ்வெர்ஸா என்றும் சொல்லலாம்...நிஜமாகவே சொல்லுவதை இதமாகச் சொல்பவர்களும் நேர்மையாகவும் இருப்பார்கள். கெட்ட வார்த்தைகள் போடுபவர்கள் நிஜமாகவே மோசமான குணமுடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்...ஸோ மதுரை சகோ நாம் யாரையும் ஜட்ஜ் செய்யாமல் அவர்களைப் பற்றி நமக்குள் ஓர் உருவம் கொடுக்காமல், அவ்வப்போது அப்படியே ஏற்றுக் கொண்டு செல்வது நலமோ? இல்லையா? இதுவும் என் சிறு வயது முதல் ஏற்பட்ட அனுபவத்திலிருந்துதான் ...

    கீதா

    ReplyDelete
  9. எனக்குப் பின்னால் பேசும் பழக்கம் இல்லை...நான் ரொம்ப நேர்மையாக்கும் நேருக்கு நேர் முகத்துக்கு நேரே சொல்லிடுவேன் என்று பீற்றிக் கொண்டு அதற்காக மனம் நோகும் படி வார்த்தைகளை விடுவதும், அதுவும் பப்ளிக்காக...அதுவும் நல்லதில்லைதானே மதுரை....கசப்பான மருந்து நல்லது என்றாலும் சில சமயங்களில் அதைச் சாப்பிட முடியாத போது தேன் தடவிச் சாப்பிடுவது இல்லையா அது போல...இதமான வார்த்தைகளாலும் நேர்மையாகப் பேச முடியும்...ஆணித்தரமாக நம் மனதை வெளிப்படுத்த முடியும்...அதுவும் ஒரு கலைதான்...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.