உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, January 28, 2016

இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் 

எங்கள் வீட்டிற்கு வழக்கமாக காய்கறி விற்பனை செய்யும் பெண்ணிடம் எனது தாயார் காய்கறிகள் வாங்கி கொண்டிருக்கும் போது எங்களது பக்கத்துவீட்டில் இருக்கும் பெண்மணி காய்கறி விற்பனை செய்யும் பெண்மணியிடம் முருங்கைகாய் என்னவிலை என்று கேட்டார் அதற்குகாய்கறிகாரி இரண்டு முருங்கைகாய் 25 காசு என்றார். அதற்கு அந்த பெண்மணி ஒன்று 15 காசுக்கு தருவாய் என்றால் எனக்கு 4 முருங்ககாய் வேண்டும்  என்றார். காய்கறி காரி இல்லைம்மா இரண்டு 25 காசுதான் என்று மீண்டும் சொன்னதும் அப்படியென்றால் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பின் அவரை மீண்டும் அழைத்து ஒன்று 15 காசு என்ற விலைக்கு விற்றார்..இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இது போலத்தான் ஒரு நாள் நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் உள்ள பார்க்கிற்கு சென்ற போது அங்கு ஒரு பறவை செத்து கிடந்ததை நான் பார்த்ததும் பாருடா பறவை செத்து கிடக்கிறது என்றதும் ஒரு நண்பர் வானத்தை பார்த்து எங்கே  என்று கேட்டார்..இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்  .


ஒரு நாள் என்னிடம் வந்த கஸ்டமரிடம் பொருளைவிற்றுவிட்டு  சந்தேகம் ஏதும் இருந்தால் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்கள் என்று சொல்லி ஒரு நம்பரை கொடுத்துவிட்டு இது 24/7  வொர்க் செய்யும் என்று சொன்னவுடன். அந்த கஸ்டமர் கேட்டார் , இது ஈஸ்டன் டைமா அல்லது பசிபிக டைமா என்று கேட்டார். அதை கேட்ட பின் என் தலையில் அடித்து கொண்டு மேற்கொண்டு ஏதும் பேசாமல் சிரிப்பை அடக்கி  கொண்டு ஈஸ்டன் டைம்தான் என்று சொன்னேன். வேற என்ன செய்வது. இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்  .


வீக்கெண்டில் சரக்கு வாங்க இங்குள்ள ஒரு கடைக்கு சென்ற போது ஒரு கேஸ்பீர் வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் என்று போட்டு இருந்தது. அங்கு இரண்டு கேஸ்பீர் வாங்கிவிட்டு மொத்தம் எவ்வளவு டிஸ்கவுண்ட் என்று கேட்ட போது 10% என்றார் என்னப்பா ஒரு கேஸுக்கு 10% என்றால் இரண்டு கேஸுக்கு 10 பளஸ் 10 இருபதுதானே என்று விளையாட்டுக்கு கேட்டதும் சாரி சார் என்று  சொல்லி 20 % டிஸ்கவுண்ட் கொடுத்தார் அந்த ஸ்பாணிஷ்காரர்.. இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் 


ஒரு நாள் நண்பரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு சென்று இருந்தேன். அப்போது அங்கு வந்து இருந்த ஒரு ராஜஸ்தானி பெண் ஒருவர் அவரின் மூக்கில் இருந்து காது வரை உள்ள ஒரு அழகிய ஜெயினை அணிந்து இருந்தார். அதனை பார்த்த அருகில் இருந்த ஒரு நண்பர் கேட்டார். இந்த அம்ம ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இதை அணிந்து இருக்கிறார் அவர் சடனாக திரும்பினால் அவரின் காது அல்லவா அறுந்துவிடும் என்றார். அவருக்கு அது அறுந்துவிடாது என்று விளக்கி கூறினேன். இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் 


நாங்கள் வீடு வாங்கும் போது எங்களுடன் வந்த ரியல் எஸ்டேட் பெண்மணியிடம் ஒரு வீடு பார்க்க சென்ற பொது அங்கிருந்த ஒரு வீட்டின் பெட் ரூமில் நின்று கொண்டு வடக்கு திசை எது என்று கேட்டுவிட்டு காலையில் பெட் ரூமில் தூங்கி கொண்டிருக்கும் போது மூஞ்சியில் சூரியன் அடிக்ககூடாது என்று காரணத்தையும் சொன்னோம்.

அதற்கு அந்த பெண்மணி சூரியன் வடக்கிலா உதிக்கிறது. அது கூட எனக்கு சரியாக தெரியவில்லை என்று சொன்னார். இல்லைம்மா சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது ஆனால் ஜன்னல் வடக்கு நோக்கி இருந்தால் சூரிய ஒளி உள்ளே அடிக்காது என்றேன். இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் 


சம்மர் சமயத்தில் எனது இந்திய நண்பர் ஆபிஸுக்கு வரும் போது மிகவும் கறுத்து போய் வந்தார். என்னடா வீக்கெண்ட்ல பீச்சுக்கு போய் அமெரிக்கன் மாதிரி சன்பாத் எடுத்து வந்தியா என்று கேட்டதற்கு அவன் இல்லையடா புதுசான் கன்வெர்ட்டபெல் கார் வாங்கி இருக்கிறேன் அதன் மூலம் நண்பர்வீட்டிற்கு சென்று வந்தேன். அந்த கன்வெர்ட்டபெல் காரில் டாப் போர்ஷனை நீக்கிவிட்டு ஒட்டினேன் அப்படி ஓட்டும் போது நாம் வேகமாக செல்லும் போது சூரிய ஒளி நம்மீது படாது என நினைத்து ஓட்டினேன் அதனால்தான் இப்படி கறுத்து போனேன் என்று சொன்ன போது சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

இந்தியாவிற்கு போய்விட்டு வந்த போது எனது பெட்டிகள் வந்து சேரவில்லை அதனால் அதற்குரிய துறையினரிடம் சென்று விசாரித்த போது அங்கு இருந்த ஒரு பெண் கவலைப்படாதீர்கள் சார் உங்கள் பெட்டியை கண்டுபிடித்து உங்களிடம் சேர்த்துவிடுவோம் என்று சொல்லிவிட்டு ஒரு கேள்வி கேட்டார். சார் நீங்கள் பயணம் செய்த விமானம் வந்து சேர்ந்துவிட்டதா என்று.... இப்படிபட்ட அறிவாளிங்கதான் நம்மபெட்டியை கண்டுபிடிக்க போகிறார்களா என்று நொந்து போய்விட்டேன். நான் பயணம் செய்த விமானம் வந்து சேரவில்லை என்றால் நான் எப்படி அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பேன்...ஹும்ம்ம்ம் இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் 

இப்படிபட்ட மனிதர்களை நீங்கள் சந்தித்து இருந்தால் அதை பற்றிய உங்கள் அனுபவங்களை சொல்லி செல்லவும்

அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி: என்னை இணையத்தில் காணாததால் எனக்கு என்ன ஆச்சு என்று தனிப்பட்ட முறையில் விசாரித்தவர்களும் மிகவும் நன்றி.  நேற்றுதான் இணையம் வந்தேன் அதன்பின் முடிந்த வரையில் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் அனுப்பிவிட்டேன் அதில் யாரேனும் தவறி இருந்தால் மன்னிக்கவும்

14 comments :

 1. இப்படியும் சில மனிதர்கள்..... :) ரசித்தேன்.

  ReplyDelete
 2. ரொம்பவே சுவாரஸ்யம்!

  ReplyDelete
 3. இப்படி ஒரு பதிவு எழுத அப்படி மனிதர்கள் தேவைதான்...
  சுவாரஸ்யம் அருமை..
  தம +

  ReplyDelete
 4. எப்படியும் இப்படியும் அப்படியும் தப்படியும் கப் படியும் அவனியில் அப்படித்தான் .அதான் அடியும் பெத்தான் அடியும் சொல்லடியும் இங்கே உண்டு.

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா....
  இந்த நகைச்சுவை மிகுந்த தருணங்களில் நீங்கள் சிரித்தீர்களா தமிழரே....

  ReplyDelete
 6. இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .3ஸ்பானிஷ் காரர்கள் கணக்குல அவ்வளவு வீக்கா?

  ReplyDelete
 7. வந்துட்டீங்களா? இப்போத்தான் ஆளைக் காணோம்னு ஒரு பதிவெழுதிட்டு வந்தேன்!

  ReplyDelete
 8. இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
  ஹா... ஹா... ரசித்தேன்...

  ReplyDelete
 9. நானும் பலமுறை இதுபோன்றவர்களை சந்தித்திருக்கிறேன். சட்டை வாங்கி தோய்த்த பிறகு வெளுத்துவிட்டது. திருப்பிக் கொடுக்கச் சென்றால், 'நீங்கள் அதை தோய்த்து விட்டீர்கள். அதனால் திருப்பி வாங்கிக் கொள்ள மாட்டோம்' என்று சொன்னார் அந்த கடை சேல்ஸ் மேன்!

  ReplyDelete
 10. இப்படியும் பதிவு போடும் உங்களை போல என சொல்லலாமா சார்?
  இப்படியும் நாங்கள் பின்னூட்டம் போடுவோம்ல!

  எங்கே தான் போயிருந்தீர்கள்?யாரோ ஒரு பதிவில் சொன்னது போல் உங்களை யாரேனும் தேடுவார்களா என ஒளிந்தீர்களோ?

  ReplyDelete
 11. இன்னும் நிறைய மனிதர்கள் பற்றி எழுதியிருக்கலாம். அனைத்தும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. மது சொல்வதுபோல இப்படி எழுதவும் சில மனிதர்கள் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 12. இப்படிபட்ட மனிதர்களைச் சந்தித்து இருந்தால் உங்கள் அனுபவங்களைச் சொல்லி செல்லவும். சந்தித்தால் தானா? சந்திக்காதவர்களைச் சொல்லக் கூடாதா? ஏன்னா????? எனக்கு ஒருத்தரைத் தெரியும்,,
  அவர் இப்படி தான் பேச தெரியாமல் பேசி,, இல்ல தெரிந்தும் பேசி பூரிக்கட்டை யால் அடிவாங்கியே காலத்தை ஓட்டும் மனிதர்,, உங்களுக்கு தெரியுமா?.
  இப்படியும் எழுதுவோம்ல,,,, எப்புடி,,

  ReplyDelete
 13. ஹஹஹ சுவாரஸ்யமான மனிதர்கள். ரசித்தோம். இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பதாலும் சந்திக்க நேரிடுவதாலும் பதிவு தேருதே..தாங்க்ஸ் டு தோஸ் பீப்பிள்....

  மதுரைத் தமிழன் இந்தியாவிற்குத்தான் வந்திருப்பாரோ என்று நாங்கள் பேசிக் கொண்டோம், இருந்தாலும் பதிவில் டிஸ்கி ஒன்று கொடுக்க நினைத்திருந்தோம். மதுரைத் தமிழனைக் காணவில்லை. கண்டோர் அறிவிக்கவும் என்று! ஹிஹி இப்படியும் மனிதர்கள் என்று நீங்கள் சொல்லுவீங்க...என்னைத்தான் யாருக்கும் தெரியாதே...என்னைக் கண்டாலும் அவர்களுக்குத் தெரியாதே அப்போ எப்படிச் சொல்லுவார்கள் என்று!!ஹிஹி

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog