தமிழகத்தில்
சமுகத்திற்கு உழைத்தவர்கள். சிறந்த பேச்சாளர்,நடிகர்.நடிகையும் முதல்வராக வந்து ஆட்சி
செய்து இருக்கிறார்கள். ஆனால் தமிழகம் இப்போது ஒரு மாறுதலை எதிர் நோக்கி காத்து இருக்கிறது. அந்த மாற்றம் நல்லவையாக இருந்தால் தமிழகத்திற்கு
நல்லது. ஆனால் மாற்றம் என்று சொல்லி காமெடி பீஸை முதல்வராக போட்டால் தமிழகம் எப்படி
இருக்கும் என்பதை சொல்லும் நகைச்சுவை பதிவுதான் இது.
தமிழக தேர்தல்
அதிகாரி விஜயகாந்த் வெற்றி பெற்றதாக அறிவித்ததும் விஜயகாந்திற்கு அருகில் இருந்தவர்கள்
அண்ணன் விஜயகாந்த வாழ்க என்று கோஷமிட்டதும் அருகில் இருந்த அனைவரையும் விஜயகாந்து நன்றாக்
கொட்டியும் அடித்து உதைத்தும் காறி துப்பியும் துவஷம் செய்தார். அருகில இருந்தவர்களுக்கு
ஒன்றும் புரியவில்லை. அப்போது அங்கு வந்த அவர் துணைவி என்னங்க உங்களுக்கு என்ன ஆச்சு
என்று கேட்டார். அதற்கு விஜயகாந்த இங்க பாரும்மா நான் இப்ப தமிழகத்திற்கு முதல்வர்
அப்படி இருக்கையில் என்னை அண்ணன் விஜயகாந்த வாழ்க என சொல்லி கோஷம் போடுகிறார்கள் என்றார்.
அப்படின்னா உங்களை
எப்படி அழைக்க வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அவர்
இனிமேல் எல்லோரும் என்னை மாண்புமிகு அப்பா என்றுதான் அழைக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல்
இனிமேல் எல்லா திட்டமும் அப்பா என்று சொல்லி என் படத்தை போட்டுதான் ஆரம்பிக்க வேண்டும்
என்றார் அடுவும் சரிதான் என்று அவர் துணைவியார் சொல்லி சென்றார்.
வெற்றி பெற்ற
அடுத்த நாளே பதவி ஏற்க சென்றார். அப்படி சென்ற அவரிடம் கவரனர் உறுதி மொழி எடுக்க சொன்ன
போது நீ சொல்லி நான் ஒன்றும் உறுதி மொழி எடுக்கமாட்டேன்
எங்கிட்ட வேண்டாம் நான் அடிச்சா தாங்க மாட்டே என்று சொல்லவும் கவர்னர் பதறி போய் என்ன
செய்வது என்று தெரியாமல் முழிக்க உடனே அவர் மனைவி விஜயகாந்த காதில் ஏதோ சொல்ல அதன்பின்
உறுதிமொழியை எடுத்தார்..... அதன்பின் துணை முதல்வராக அவரது மனைவி பதவியேற்றார்.
அதன் பின் முதல்வர
அறைக்கு சென்று அமர்ந்ததும் அவர் உதவியாளர் சொன்னார் உங்களை பார்க்க மாநில காவல் துறை
அதிகாரிகள் வெளியில் காத்து இருக்கிறார்கள்
என்று சொன்னதும் டேய் நான் அந்த காவல் துறை அதிகாரிகளுக்கு ஒன்றும் பயந்தவன் இல்லை
அவங்க ஜெயலலிதா அனுப்பிச்ச ஆளாக இருப்பாங்க அவங்கிட்ட சொல்லு நாந்தான் முதலமைச்சர்
இப்போது நான் யாருக்கு பயப்படுவதில்லை என்று கத்தினார்.
அதை கேட்ட உதவியாளர்
மாண்புமிகுஅப்பா அவர்களே அவர்கள் உங்களை கைது செய்ய வரவில்லை உங்களுக்கு சேவகம் செய்யவே
வந்து இருக்கிறார்கள் என்றதும்தான் விஜயகாந்த் கொஞ்சம் அடங்கி சரி சரி அவர்களை உள்ளே
கூப்பிடு என்றார்.
அவர்கள் உள்ளே
வந்ததும் என்னய்யா எப்படி இருக்கீங்க... சரி சரி அந்த ஜெயலலிதா வீட்டிற்கு யாரவது போலீஸ்காரர்கள்
காவல் இருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அந்த அதிகாரி ஆமாம் மாண்புமிகு அப்பா
அவர்களே அவர் வீட்டிற்கு முன்னால் 10 பேர்காவலாக இருக்கிறார்கள் என்றதும்
விஜயகாந்த் உடனே
என்னைய்யா நடிகை வீட்டிற்கு அத்தனை காவலா அது
எல்லாம் என் ஆட்சியில் கூடாது என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்
அதன் பின்னர்
தன் உதவியாளரிடம் சொல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து நீங்க என்ன செய்வீங்க
என்று எனக்கு தெரியாது நாளையே ஆழ்வார் பேட்டையில் இருந்து கோபால புரத்திற்கு ஒரு பாலம்
கட்ட ஆரம்பிக்கனும் என்றார். அதற்கு அவர்கள் சார் கோபால புரத்திற்கு பாலம் தேவை இல்லை
என்று சொன்னார்கள்
அதற்கு விஜயகாந்த்
அது எனக்கு தெரியும் இருந்தாலும் நாம் பாலம் கட்டுறோம் அதற்கு இடைஞ்சலாக இருப்பதாக
சொல்லி கலைஞரின் வீட்டை இடிக்கிறோம் அதுபோல அறிவாலயம் பக்கமும் ஒரு பாலம் கட்டி அறிவாலயத்தையும்
இடிக்கிறோம்.. நான் சொன்னதை செய்யாவிட்டால் உங்கள் மீது வழக்கௌ தொடரப்படும் என்றார்
அதை கேட்ட அவர்கள் தலையாட்டி சென்றார்கள்.
அதன் பின் அமைச்சர்வையை
கூட்டி அவரது மைச்சானை தமிழக கவர்னராக நியமிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி அதை மத்திய
அரசிற்கு அனுப்பி வைத்தார் அப்படி செய்யவில்லை என்றால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
நடத்தப்படும் என்று அறிவித்தார்.
அடுத்தாக நிதி
துறை அமைச்சரை கூப்பிட்டு அடுத்தாக அவர் மகன் நடிக்கும் படத்துக்கு ஆயிரம் கோடி பணம்
ஒதுக்க சொன்னார் நிதி அமைச்சர் அப்படியெல்லாம் செய்ய முடியாது அரசாங்கப் பணத்தை அரசு
செலவிற்காக மட்டும்தான் செலவழிக்க முடியும் என்று சொன்னதற்கு அவரை கன்னத்தில் அறைந்து
அவன் முதலமைச்சரின் மகன் அதனால் செலவழிப்பது தவறு அல்ல என்று சொன்னார்
தமிழக மீனவர்களை
இலங்கை அரசாங்கம் கைது செய்தது பற்றி ஊடககாரர்கள் கேட்டதற்கு அதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் நானா அவர்களை கைது செய்தேன் என்று காட்டமாக பதில்
கூறிய பொழுது அருகில் இருந்தவர்கள் பிரச்சனையை விளக்கி சொன்ன போது ஓ... தமிழக மீனவர்கள்
கைது செய்யப்படும் பொழுதுதெல்லாம் பிரதமர் மோடிக்கு நான் வாட்சப்பில் தகவல் அனுப்பி
வந்தேன் என்று சொன்னார்.
அது போல நிருபர்கள்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையே அதை காக்க வேண்டியது உங்கள் கடமைதானே என்று
கேட்ட பொழுது அவர்கள் நோக்கி காறித்துப்பி அது நான் என்ன செய்யமுடியும் அதற்கு குழந்தைகளை
இளைஞர்களை வளர்க்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்தானே காரணமாக முடியும் அவர்களை கேட்க
துப்பில்லாமல் என்னிடம் வந்து கேட்கிறீர்களே என்று கோபப்பட்டார்
கர்நாடக முதலமைச்சர்
காவிரியில் தண்ணிர் திறந்துவிட முடியாது என்று சொல்லிவிட்டாரமே அதற்கு என்ன செய்யப்
போகிறீர்கள். அப்படியா அவர் சொன்னார் அவருக்கும் தைரியம் இருந்தால் என்னிடம் சண்டைக்கு
வர சொல்லு அவன் மண்டையை பேர்த்துவிடுகிறேன் என்று முகம் சிவக்க கூறினார்
உங்கள் ஆட்சியில்
பவர்கட் இன்னும் அதிகமாக இருக்கிறதே அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு
ஜெயலலிதா & கலைஞர் ஆட்சி செய்த போது அவர்கள் மிக அதிக அளவு மின்சாரத்தை திருடி
சுவீஸ் நாட்டில் ஒழித்து வைத்து இருக்கிறார்கள் அதை சட்டப்படி பறிமுதல் செய்து மின்சாரம்
தட்டுபாடு இல்லாமல் விநியோகிக்கிறேன் என்றார்
இப்படியாக விஜயகாந்த்
ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தார் அதை கண்ட மக்கள் அவர் ஆட்சியின் அவலத்தை எண்ணி மனம்
புழுங்கி மாற்று ஆட்சிதான் கண்டிப்பாக வேண்டும் இவருக்கு பதில் ஜெயலலிதா கலைஞரே மேல்
என்று நினைத்தார்கள் அந்த நேரத்தில் சீமான் அவர்களை முதல்வராக்க வேண்டும் என்று கோஷம்
எழுந்தது மேலும் சிலர் சிம்பு வந்தால்தான் தமிழகத்திற்கு விடிவுகாலம் வரும் என்றும்
பலவேறு சமுக தளங்களில் விவாத்திதனர்...
யார் கண்டா வருங்காலத்தில்
சீமானோ அல்லது சிம்புவோகூட தமிழக முதல்வராக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இந்த
பதிவை முடித்து வைக்கிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
Mokkai
ReplyDeleteவிஜயகாந்தை மொக்கை என்றெல்லாம் சொல்லி திட்டக் கூடாது ஹீஹீ
Deleteபுத்தாண்டும் அதுவுமா தமிழ்நாட்டு மக்களை இப்படியா பயமுறுத்தணும்? :-)
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள். :-)
நான் பயமுறுத்தவில்லை தமிழ்நாடுமக்கள் ஏதாவது இப்படி ஏடாகூடமாக பண்ணி விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்கிவிட்டிடுவாங்களோ என்று பயத்தால் வந்த பதிவுதான் இது
Deleteவாழ்த்திற்கு நன்றி
அத்தைக்கு மீசை முளைச்சால்ல... அது மலட்டு அத்தை!
ReplyDeleteஅந்தக் கானல் நீரைப் பெரிய ஏரியா நினைச்சு எல்லா மானும் ஓடி வயிறுவீங்கிச் சாகப்போகுது!
இதோட “ஏரியா”வே தனீ தலைவா! புரிஞ்சிக்கிட்டா பொழைச்சிக்கலாம்.. நல்லாச் சொன்னீங்க!
மிக சரியாக சொன்னீர்கள்
Deleteஅப்பா என்று வேறொருவர் இருக்கிறார். பெரியண்ணா என்று வேண்டுமானால் சொல்லலாம்!
ReplyDelete:)))
தம +1
Deleteபெரியண்ணா என்றுதான் போடலாம் என நினைத்தேன் ஆனால் அம்மாவிற்கு போட்டியாக களம் இறங்கி இருப்பதாக அவர் நினைப்பதால் அப்பா என பதிவிட்டு இருக்கிறேன்
ஹாஹா..... அடுத்த முதல்வர்! பார்க்கலாம் இன்னும் என்ன கூத்துகள் நடக்கப் போகிறது என!
ReplyDeleteஇப்படிப்பட்ட கூத்துக்கள் நிஜமாக மாறாமல் பதிவோட போகட்டும்
Deleteஹாஹா! ரசித்தேன்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete
Deleteவாழ்த்துக்கு நன்றி
கற்பனை ஸூப்பர் நண்பரே... உண்மையில் இப்படி நடந்தால் ???
ReplyDeleteதமிழ் மணம் 4
உண்மையில் நடந்திடக் கூடாது என்பதற்குதான் இந்த பதிவு
Deleteஹஹஹ யப்பா உங்க பதிவ ரொம்ப ரசித்தாலும் இப்படி எல்லாம் வயித்துல புளியக் கரைக்கறீங்களேப்பா....பின்ன இப்படி நடந்துருச்சுனா நான் தமிழ்நாட்டை விட்டே ஓடிடுவேனாக்கும்...
ReplyDeleteகீதா
உங்களை அமெரிக்க வர வைக்கவாவது இவரை முதலமைச்சாரக ஆக்கிவிடனும்
Deleteஹஹஹ்ஹ் ..பாவம் தமிழகமக்கள். அவருடைய படத்தப் பார்த்து ரசிச்சவங்களுக்கு நேரடியாகவே பல காட்சிகள் பார்க்கலாம்...இது எப்புடி..
Deleteமகனுக்கு இன்டெர்ன்ஷிப் கிடைத்தால் கண்டிப்பாக வரும் வாய்ப்பு உண்டு...கிடைக்கணுமே...பார்ப்போம்..
கீதா
(பல சமயங்களில் பெயர் அடிக்கும் முன்னரே மௌஸ் தெரியாமல் க்ளிக் ஆகிவிடுகின்றது)
அப்படியா சேதி! இப்படில்லாம் நடக்கும் என முன்கூட்டியா ஆருடம் சொல்லும் உங்களை அதே விசயகாந்து முதலைச்சர் ஆனால் அவரின் தனி ஆலோசகர் பதவி தர இருப்பதனால் இந்த மாதிரில்லாம் பதிவுகள் போட்டு தூங்கிட்டிருக்கும் மக்களை எழுப்பி விட வேண்டாம் என தூதுக்குழுவை அனுப்பி வைத்திருக்கின்றதாய் காதில இன்னொரு சேதியும் விழுந்ததே?
ReplyDeleteஅது நிஜம் எனில் இதுவும் நிஜமாகும் வாய்ப்பு இருக்கும் சார். அதனால் பார்த்து கொஞ்சம் கூட்டிக்குறைச்சி எழுதுங்க சார்!