உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 13, 2015

பள்ளியறைலிருந்து படுக்கை அறைக்கு.......( பெண்களும் படிக்கலாம்)avargal unmaigal
பள்ளியறைலிருந்து படுக்கை அறைக்கு....... பெண்களும் படிக்கலாம்


ஆந்திராவில் என்கவுண்டர் முலம் சுடப்பட்ட 20 தமிழர்கள் பற்றிய பரப்பு  இணையத்தில் தீயாக பரவியது. அதன் வேகத்தை தடுக்கவே யாரோ ஒருவரால் பரபரப்பட்ட ஒரு நிகழ்வே  பத்தாம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒரு காதலித்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாலாமல் மறைந்து போனது. தமிழக மக்கள் இவ்வளவு கீழ்தரமாக போய் இந்த பொய்யான செய்தியை மிக அநாகரிக முறையில் பகிர்ந்து இருக்கின்றனர்.ஒருவேளை இது உண்மையான செய்தியாக இருந்தால் கூட அதை பற்றிய செய்திகளை பகிரலாமே தவிர அவர்களைப் பற்றிய போட்டோக்களை அவர்கள் அனுமதியில்லாமல் எப்படி பகிரலாம். அப்படி செய்வது அவர்கள் செய்த குற்றத்தைவிட மிக மகா கேவலமான செயல்  அல்லவா.


ஒரு ஆணுக்கு வயது மூத்த பெண்ணுடன் காதல் வரக்கூடாதா அல்லது ஒரு பெண் தன்னைவிட வயது குறைந்த பையனை காதலிப்பது தவறா என்ன? அப்படி காதலிக்கும் ஒரு பெண் தன் பள்ளியில் படிக்கும் மாணவனை காதலிப்பது பெரும் குற்றமா என்ன? இது என்ன உலகத்தில் நடக்காத அதிசயமா என்ன? 

உடனே சிலர் சொல்லலாம் ஒரு பெண் தன்னைவிட வயது குறைந்த பையனை காதலிப்பது தவறு இல்லை ஆனால் மாணவனை காதலிப்பது தவறு. காரணம் மாதா பிதா குரு என்று மூன்றாவது இடத்தில் அவர்களை வைத்து இருக்கிறோம் அதனால் ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியை ஒரு மாணவனை காதலிப்பது தவறு என்று பல காரணம் சொல்லலாம்.

நல்லா யோசிச்சு பாருங்க இப்ப எந்த பள்ளியில் எந்த ஆசிரியர் ஒழுக்கத்தை போதித்து கொண்டிருக்கிறார்கள். அப்படி போத்தித்த காலம் இதிகாச காலம் போலத்தான் இப்போது தோன்றுகிறது..இப்ப ஆசிரியர்கள் போதிப்பது எல்லாம் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்பதை மட்டும்தான்  அவர்கள் அதை மட்டுமே போதிக்கிறார்கள் சில சமயங்களில் அதையும் போதிக்க அவர்களுக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை. நிலமை இப்படி இருக்கிறது இந்த காலத்தில்....


அது போல முன்பு எல்லாம் ஆசிரியர்கள் பணிக்கு வருபவர்கள் டாகடர்களை போல தங்களை சார்ந்த சமுகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வருவார்கள் , ஆனால் இன்று அதுவும் மற்ற வேலைகளை போல இதுவும் ஒன்றாகிவிட்டது. அதனால் அவர்கள் ஆசிரியர் தொழில் மூலம் போதிக்க வரவில்லை சம்பாதிக்கவே வருகிறார்கள். அதில் தப்பேதும் இல்லை. (சில ஆசிரியர்கள் விதிவிலக்கு மைதிலி , மது, பாண்டியன், முரளிதரன் போன்ற இன்னும் பலர்) அவர்களும் சாதரணமனிதர்கள்தானே அவர்களுக்கு ஆசபாசங்கள் இருக்கதானே செய்யும்.

மாணவனுடன் சென்ற ஆசிரியை ஒன்றும் மிகவும் வயதானவர் அல்ல அவரும் மிக இளம்  வயதினர்தான் .  அந்த ஆசிரியயை கற்ற கல்வி அவருக்கு ஒரு வேலையை வாங்கிதர மட்டுமே பயன்பட்டு இருக்கிறது. அந்த கல்வி அவரை சிந்திக்க மற்றும் மனத்தை மிகவும் பக்குவப்படுத்த கற்று தரவில்லை இதற்காக நாம் அவரை சொல்லி குற்றம் இல்லை. இந்த கால கல்வி முறையைதான் குற்றம் சொல்ல வேண்டும் அந்த கல்வி முறையை அமைத்த அதிகாரிகளையும் தலைவர்களையும்தான் குற்றம் சொல்ல வேண்டும்


இப்படி ஆசிரியை மாணவன் காதலுக்கு காரணம் இவர்களில் இருவரில்  யாரவது ஒருத்தருக்கு வீட்டில் பிரச்சனைகள் இருந்து இருக்கலாம் அப்படி அந்த பிரச்சனைகளை பறிமாறிக் கொள்ளும் போது அது இரக்கமாக மாறி அதன் பின் காதலாக மாறி இருக்க வாய்ப்புக்கள் அதிகம். வசதியாக இருந்தாலும் சரி ஏழ்மையில் இருந்தாலும் சரி வீட்டில் அன்பு கிடைக்கவில்லை என்றால் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்னை பொருத்தவாரை இது காமத்திற்காக ஏற்பட்ட காதலாக இருக்காது என்பதுதான் என் கருத்து

என்னை பொறுத்த வரையில் அமெரிக்கவில் உள்ள டீச்சர்கள் போல மாணவர்களை செக்ஸிற்காக பயன்படுத்தாமல் இந்த இளம் ஆசிரியை  வாழ்க்கை துணையாக தேர்தெடுத்தில் தப்பு இல்லையே.

டிஸ்கி : இந்தியாவில் ஒரு ஆண் ஆசிரியர் தன் மாணவியை காதலித்து மணந்து கொண்டால் பெற்றோர்கள் ஒன்று திரண்டு அந்த பள்ளியின் முன் போராட்டம் நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லுவார்கள் ஆனால் அதை போல இந்த பெண் ஆசிரியை செய்த போது யாரும் அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் இந்த சமுக தளத்தில் மட்டும் இந்த தமிழ் சமுகம் கழுவி கழுவி கொட்டுகிறது நல்ல நியாமப்பா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments :

 1. நீ தெரிஞ்சி தான் பேசுறியா ?

  20 பேரு கொலைக்கு மேதாவி மாதிரி எழுதுன ...
  இப்ப அதிமேதாவி தனத்த காட்டுற ...

  எலுமிச்சம் பழம் வாங்கி நல்ல தலையில தேய்ச்சி குளி ராசா.

  இதுக்கும் நாலு பேரு ஆதரவு சொல்லுவான் பாரேன் ...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே நான் மேதாவி என்று எங்கும் கூறியது இல்லை நான் சொல்வது எல்லாம் நான் அறிவுஜீவி இல்லை சராசரி மனிதன் தான் என் அறிவுக்கு எட்டிய விஷயங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த பதிவில் நான் சொன்ன விஷயங்களை மேலோட்டமாக படிக்காமல் ஆழ்ந்து படித்து உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அதை இங்கே பதியலாம்தானே. அப்படி பதியாமல் இப்படி கருத்து சொல்லுவதால் உங்களின் அதிமேதாவி தனம் மிகவும் நன்றாக புரிகிறது. உங்களின் அதிமேதாவிதனத்தை உங்களின் கருத்துகளின் மூலம் புரிய வைத்தற்கு மிகவும் நன்றி நண்பரே

   Delete
  2. என் கருத்துக்கு நாலுபேர் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது போல உங்களின் அதிமேதாவி கருத்துக்கும் நாலு பேர் ஆதரவு தரத்தான் செய்வார்கள். காந்தியை கொன்றவனை அயோக்கியவன் என்று சொன்னா இந்திய நாட்டில்தான் அவனை நல்லவன் என்று உங்களைப் போல உள்ள அதிமேதாவிகள்கள் சொல்லி வருகிறார்கள்

   உங்களிடம் சில கேள்விகள் எலுமிச்சம் பழம் நல்லதா அல்லது நவரத்தின ஆயில் நல்லதா? அப்புறம் எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையில் தேய்ச்ச பிறகுதான் நீங்கள் என் பதிவை படித்தீர்களா அல்லது அதன் பிறகா?

   Delete
  3. மாதா பிதா குரு தெய்வம் ...
   அதுக்கு கருத்தது சொல்லலாம்

   பிச்சக்காரன் வாந்தி பத்தி ... நோ கமெண்ட்ஸ் ...ஒன்லி அட்வைஸ் ...

   Delete
  4. அதிமேதாவி நீங்க சொல்லீடீங்க அதை நான் கேட்டுகிறேன்

   Delete
  5. நல்லா வருவ தம்பி.

   புரட்சி ... மாற்று சிந்தனையை விட ... எது தேவையோ , எது நல்லதோ அத எழுது ...

   நல்ல கருத்து ல கிக் கிடையாதுன்னு லூசு தனமா எழுத கூடாது ...

   எழுத படிக்க தெரிஞ்ச உனக்குன்னு ஒரு பொறுப்பு இருக்கு ...

   கருத்து சுதந்திரம்ங்கிற பேர்ல கன்னாபின்னா ன்னு எழுதாத ...

   அண்ணன் இவ்ளோ கருத்து சொல்றேன் கேட்டுக்க ....

   தீயவை தீய பயத்தலால் தீயவை
   தீயினும் அஞ்சப் படும்.

   Delete
  6. அண்ணே லூசு லூசுதனாமாத்தான் எழுதும் அதனால் லூசுகிட்டே நீங்க வாதம் செய்தா உங்களையும் உலகம் லூசாதான் பார்க்கும் அதனால இந்த லூசு சொல்லுறதை கேட்டு இதோட வாதத்தை முடிச்சுகோங்கண்ணே. அண்ணே இந்த லூசு ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரிதான் இந்த லூசு யார்க்காவும் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாதுண்ணே

   Delete
 2. அன்பு நண்பரே!
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை (சூட )ஈட்ட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!
  புதுவை வேலு

  ReplyDelete
 3. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. செய்தியை நானும் படித்தேன்.உண்மையாய் இருக்கும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கு தலைக் குனிவு ஏற்படக் கூடிய செயல். மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியை தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கூட சிந்திக்காமல் இப்படி நடந்திருப்பதன் பின்ன்னணியை ஆராய வேண்டும்.அதிக மனஅழுத்தம் உண்டாக்கக் கூடிய குடும்பச் சூழல் இருக்கலாம். அல்லது தவறான வழிகாட்டுதல் மூலம் மாணவனிடம் இருந்து பணம் பறிக்கக் கூட இருக்கலாம்.
  ஒன்றாம் வகுப்பில் இருந்து திருக்குறள் கற்பிக்கப் பட்டு வருகிறது. அதில் சொல்லப்படாத நல்லொழுக்கம் ஏதுமில்லை. அதை படிப்பது வாழ்வில் அதனை பின்பற்று வதற்காக என்று நினைப்பதில்லை.. மதிப்பெண் பெறுவதற்காகவே படிக்கப் படுகிறது. ஒழுக்கம் என்பது கற்பித்து வராது .தம்மை சுற்றியுள்ள மனிதர்களின் நடத்தையே பெரும்பாலும் ஒழுக்கத்திற்கு காரணமாக அமைகிறது. சம்பாதிக்கும் காசை எல்லாம் குடியில் ஒழித்து விடும் குடிகார அப்பன்களின் கொடுமையை அனுபவித்த மகனும் குடிகாரனாகத்தான் இருக்கிறான். சிகரட் பிடிக்க எந்த பள்ளிக் கூடத்திலும் சொல்லித் தருவதில்லை. ஆனால் சில மாணவர்களுக்கு சிகரட் பிடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். காதல் மீதான தவறான புரிதலை ஏற்படுத்தியதில் சினிமா,டிவி,கைபேசி உள்ளிட்ட ஊடகங்களுக்கும் பங்கு உண்டு. வதந்திகளைப் பரப்புவதில் வாட்ஸ் அப் முதலிடம் வகிக்கிறது.
  தன்னை கட்டுப்படுத்த தெரியாதவர் ஆசிரியராக இருந்து என்ன பயன்? ஆசிரியர்கள் பெரிதாக சேவை ஒன்றும் செய்ய வேண்டியதில்லை கடமையை பள்ளி நேரத்தில் ஈடுபாட்டுடன் செய்தாலே போதும்

  ReplyDelete
 5. இந்தச் செய்தியை ஜீரணிப்பது கடினம். இந்தியர்கள் எல்லோரும் (அனேகமாக), அவர்களைத் தவிர மற்ற எல்லாரும், மிக யோக்கியமாகவும் சட்டப்படி நடக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆந்திரா என்கவுண்டர் சட்ட மீறல் என்று கூவுவார்கள். அவர்களே, தெருவில் குப்பை போடுவார்கள், கியூவை மீறி ஓடுவார்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆசிரியர்கள் நல்லொழுக்கம் கற்பிக்க வேண்டும் என்று நாம் நினைப்போம். அது 30 வருடத்துக்கு முன்பு. எத்தனைபேர் இப்போது ஆசிரியர்களை மதிக்கிறோம்? ('நம் ஆசிரியர்களை அல்ல. இப்போதிருக்கும் ஆசிரியர்களை). ஆசிரியர் தொழில் என்பது மதுரைத் தமிழன் சொல்வதுபோல் அவர்களுக்கு ஒரு தொழில். நாம் நடிகைகளின் படத்தைப் பார்த்து வாயைப் பிளப்பது மட்டும் ஒழுக்கமான செயலா? I am seeing this teacher student problem as 'conflict of interest'. Beyond that, there is nothing to comment.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog