கேள்வி கேட்பது நியாயம் இல்லையா ?
எனது முந்தைய
பதிவான கி வீரமணிக்கு 20 கேள்விகள் : வீரமணிக்கு
மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான்.
http://avargal-unmaigal.blogspot.com/2015/04/20-20-questions-to-veeramani.html என்பதை
பதிந்து இருந்தேன்.
அது சம்பந்தமாக
பலர் அந்த பதிவில் வந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக பலரும் பலவாறு எழுதி சாதாரணமாக
இருந்து வரும் என்னை பிரபலபடுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
ஆனால் இது எதுவும்
புரியாதவர்களுக்கு அதாவது சைலண்ட் ரீடர்களுக்கு இதை நான் ஏன் பதிந்தேன் என்ற ஒரு சிறு
விளக்கம்தான் இந்த பதிவு
நான் பேஸ்புக்கில்
மேய்ந்து கொண்டிருந்த போது ( என்னடா ஆடுமாடுகள்தான் மேயும் இவனுமாக மேய்கிறான் என்று
நினைக்கிறீர்களா? ஆமாங்க நான் எல்லாம் உங்களை போல அறிவாளி இல்லீங்க அதுனாலதான் நானும்
மாடு போலதானுங்க அறிவில்லாத ஜீவனுங்க...நான் என்னை மாடு என்று சொல்லிக் கொள்வதில் பெருமை
கொள்கிறேன் காரணம் மாடு அறிவில்லாமல் இருக்கும் ஜிவனாக இருந்தாலும் அது பல வகையில்
மனிதருக்கு உதவி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த பகுத்தறிவு கொண்ட மனிதரகள் என்ன செய்து
கொண்டு இருக்கிறார்கள் என்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லையே..) சரி
விடுங்க வந்த கதையை விட்டு விட்டு வேறு கதையை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. இப்ப அந்த
பதிவு கதைக்குள் உள் போவோம்...
அப்படி நான்
பேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்த போதுதான் இந்த பதிவு கண்ணில் தென்பட்டது. அதை படித்த
பார்த்த போது அவர் என்ன சூழ்நிலையில் இந்த பதிவை எழுது கேள்விகள் கேட்டார் எனறு பார்த்த
போது எனக்கு அவர் கேட்ட கேள்விகள் நியாமானதாக தோண்றியது அதனால் அதை அவர் அனுமதி கேட்டு
அவர் தந்த பின் இங்கு பதிந்தேன் அது மட்டுமல்ல வேறு சில காரணங்களும் இதை பதிய காரணமாக
இருந்தன.
அதில் ஒன்று
அவர் எழுதி பதிவிட்டது அவர் கம்யூனிட்டிக்கான குருப்புக்களில் அது அங்கு மட்டும் உலவிக்க்
கொண்டிருந்தால் மற்றவர்களும் படித்து மாற்று கருத்து சொல்ல முடியாதே என்று நினைத்து
அதை என் தளத்தில் பதிந்தால் தரமான மாற்று கருத்துக்கள் வரும். அதை படிக்கும் போது எது
சரியென்று நமக்கு முடிவு செய்ய முடியும் என்று நினைத்து பதிந்தேன்.
அப்படி நான்
செய்தது என்ன தவறா என்ன? ஒரு பதிவை படித்து அதை நியாம் என்று நான் கருதக் கூடாதா அப்படி
நினைத்தை பதிய கூடாதா அல்லது மாற்று கருத்தை தரமான முறையில் தாருங்கள் என்று கேட்டது
தவறா?
ஒரு வேளை நீங்கள்
சொல்லும் தரமான பதிலை படிக்கும் போது நான் நியாயம் என்று சொல்லியது அந்நியாமாக தோன்றி
இருக்கலாம் அதனால் நா என் கருத்தை மாற்றிக் கொள்ள வழி ஏற்பட்டு இருக்கலாமே ஆனால் அதை
செய்யாமல் அய்யோ குய்யோ என்று கூச்சல் போடுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.
நான் இந்த கேள்விகள்
நியாயம் என்று சொல்வதால் பிராமிண்கள் செய்யும் எல்லாச் செயலையும் நியாயம்தான் சரிதான்
என்று எங்கும் சொல்லவில்லை. அவர்களில் பலரும் அநியாயங்கள் செய்து கொண்டிருக்கின்றனர்
இல்லை என்று மறுக்கவில்லை, அது போல பல மதத்திலும் சாதிகளிலும் நியாயம் செய்பவர்களும்
அந்நியாயம் செய்பவர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இப்படிபட்ட மனிதர்களால்தான்
இந்த உலகம் இருக்கிறது.
சரி இவரை போன்றவர்கள்
இப்படி கேள்வி கேட்டா பெரியார்தான் அந்த காலத்திலே இதற்கு பதில் எல்லாம் சொல்லிவிட்டாரே
என்று மொட்டையாக பதில் வேறு. அய்யா அது தெரியாததால்தானே மீண்டும் கேள்வி எழுப்புகின்றனர்,
அதற்கான பதில் பெரியாரின் இந்த புத்தகத்தில் இருக்கிறது என்றோ அல்லது இணைய தளத்தில்
இங்கு இருக்கிறது என்று சொன்னால் அதைப் படித்து பெரியார் என்ன சொல்லி இருக்கிறார் என்று
புரிந்து செயல்பட முடியுமே ,அதை சொல்வதுதானே பகுத்தறிவாளர்களுக்கு அழகு & அறிவு
ஆனால் இந்த பகுத்தறிவாளர்கள்
சொல்வது எப்படி இருக்கிறது என்றால், பள்ளிக்கு செல்லும் சிறுவன் பாடத்தில் கேள்வி கேட்கும்
போது அடே மடையா இந்த மாதிரி கேள்விக்கான பதிலை உங்க தாத்தா படிக்கும் போதே சொல்லிவிட்டோம்
நீ மீண்டும் லூசாட்டம் கேட்கிறாய், போய் உட்காருடா என்று ஆசிரியர் சொல்வது போல இந்த
பகுத்தறிவாளர்கள் சொல்வது போல அல்லவா இருக்கிறது.
பெரியார் பகுத்தறிவை
விதைத்து அதை பரப்ப சொன்னால், இந்த கால பகுத்தறிவு தலைவர்கள் அவர் செய்த நூல்களை அதிக
விலை வைத்து அதை யாரும் வாங்கி படிக்க முடியாத படி செய்கின்றனர் பெரியார் இட்டு சென்ற சொத்துக்கள்தான் எவ்வளவு அதில்
ஒரு பகுதியை செலவழித்து மலிவு விலையில் நூல்கலை வழங்கவா முடியாது. இன்று வேறு பதிவர்
ஒருவரின் பதிவைபடித்தேன் அதில் அவர் எழுதி இருக்கிறார் அவர் புத்தக கண்காட்சிக்கு சென்று
இருந்தாராம் அங்கு பகவத்கீதை புத்தகத்தை விலை 120 ல் மிக அழகாக கண்ணை கவரும் விதத்தில்
டிசைன் செய்து மிகவும் பள பளக்கும் காகிதத்தில் பிரிண்ட் செய்து விற்றார்களாம் அதே
நேரத்தில் பெரியார் சொன்ன கருத்துகளை அறிந்து கொள்ள வெளியிட்ட புத்தக விலை மிக அதிகமாக
இருந்ததாம் இப்படி இருந்தால் பகுத்தறிவை எப்படி வளர்க்க முடியும் நல்லா சிந்தியுங்கள்
மக்களே ஆரியன் அறிவை பயன்படுத்துகிறார் சூத்திரன் அருவாளை பயன்படுத்துகிறான் ஆனால்
இந்த பகுத்தறிவாதிகளோ இந்த இரண்டு பேருக்குள் நுழைந்து காசு பார்த்து தன் வாரிசுகளுக்காக
சொத்து சேர்த்து கொண்டிருக்கிறான்
இன்னும் என்னவெல்லாமோ
சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் பதிவு நீண்டு
கொண்டே போகும் என்பதால் இப்பொது இங்கு ஒரு டாட் வைத்து முடித்து கொள்கிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இங்கு
பதிவு எனது பொழுது போக்கிற்காக மட்டுமே எழுதப்படுகிறது . சமுகத்தை திருத்தவோ அல்லது
தமிழை வளர்க்கவோ எழுதப்படவில்லை. அதனால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வந்து படிக்கவும்.
விருப்பம் இல்லாதவர்கள் தாராளமாக விலகி செல்லலாம். எனது கழுத்திற்கே
கத்தி வந்தாலும் நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்பதை எப்ப சொல்வது எப்படி சொல்வது
என்று எனக்கு தெரியும் அப்படி சொல்ல வேண்டியதை நான் தைரியமாக சொல்வேன். எந்த சலசலப்பிற்கும்
அஞ்ச மாட்டேன். டாட்
இரண்டையுமே படித்தேன் நண்பரே நல்ல முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteதமிழ் மணம் 1
Deleteஎனக்கு தெரிந்த வரையில் என் அறிவிற்கு எட்டிய வரையில் நான் விளக்கம் கொடுத்து இருக்கிறேன். அது போல நான் சொன்னது சொல்லவந்தது என்ன என்பதை அவரவர் அறிவிற்கு ஏற்று புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக நன்றி கில்லர்ஜி
கேள்வி கேட்பதோ, அல்லது மற்றவர் கேள்விகளை காப்பி பேஸ்ட் பண்ணுவதோ தவறே இல்லை, சொல்லப் போனால் அப்போது தான் அதற்கான பதில்களை முறையாக கொடுக்க இயலும், ஆனால் யாரோ ஒருவரது கேள்வியை காப்பி பேஸ்ட் செய்துவிட்டு அவரது கேள்விகளில் நியாயம் இருக்கே அடடா ஆச்சர்யக் குறி போட்டால், பதில்களும் தற்குறித்தனமாக வந்தேறும் என்பதையும் எதிர்பார்ப்பது நியாயம். இனித் தான் நீங்கள் பிரபலமடைய வேண்டும் என்றில்லை வலைப்பதிவு பக்கம் மேயும் அனைவருக்கும் தங்களை நன்கு பரிச்சயம் கொண்டுள்ளனர்... மற்றபடி உங்கள் கேள்விக்கான பதில்களை முடிந்த வரை தந்திருக்கின்றேன். மற்றவைகளையும் நாளை பதிவேற்ற முயல்கின்றேன், ஏனெனில் கேள்வி கேட்பது சுலபம் பதில் தருவது மண்டை குழம்பும் பணி, இருந்தாலும் கேட்டுவிட்டீர்கள் அதனால் தருகின்றோம், ஏற்பதும் ஏற்காததும் தங்கள் விருப்பம். நன்றிகள் !
ReplyDeleteபகுத்தறிவாதி என்றால் Skpetics தமிழகத்தில் சுமார் ஆறு மில்லியன் பேராவது பகுத்தறிவாதிகளாக இருப்பர், இல்லை குறைந்தது ஒரு ஆறு லட்சம் பேராவது இருப்பர் இதில் எத்தனை பேர் காசு சேர்த்துள்ளார்கள் ஐயா ! மதவாத அடிப்படைவாத அரசியல் வாதிகளில் எத்தனை சதவீதம் பேர் சொத்து சேர்த்துள்ளனரோ, அதை விட கம்மி சதவீதமான பகுத்தறிவு என்ற பேரில் அரசியல் செய்வோரும் சேர்த்திருக்கின்றனர். அதற்காக மற்ற பொது சமூக பகுத்தறிவாதிகளை குத்திப் பேசினால், விவாதத்துக்கு தயாராக இருக்கின்றோம், முதுகெலும்பு இருந்தால் தொடர்ந்து பேசுவோமே.
ReplyDeleteநீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் வருகை புரிந்தது மிக மகிழ்ச்சி. இங்கே நான் இட்டது எனது கேள்விகள் அல்ல அதை எழுதியவர் ரகுவீரன் என்பவர். அதை பகிர்ந்தது மட்டும் நான். அப்படி பகிரும் போது நான் சொன்னது இந்த கேள்விகள் நியாயமாக தோன்றுகிறது எனத்தான் சொல்லி இருக்கிறேன். ஆனால் நியாயம் என்று அடித்து கூறவில்லை. நான் தோன்றுகிறது என்று சொல்லும் போது அதற்கான சரியான பதில்கள் கிடைத்தால் நியாயம் என்று நான் சொல்வது நியாயம் இல்லாமல் போய்விட கூட வாய்ப்பு இருக்கிறது அது சரிதானே இல்லை இப்படி நான் சொல்லுவதும் தவறா?
Deleteஅடுத்தாக கேள்வி கேட்பது சுலபம் ஆனால் பதில் சொல்லுவது மண்டையை குழப்பும் பணி என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு மாற்றாக பதில் சொல்ல நீண்ட நேரம் ஆகும் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் குழ்ப்பும் பணி என்று சொல்வது சரியில்லை காரணம் எதையும் பகுத்தறிந்து வைத்து இருப்பவர்களுக்கு இந்த கேள்வி எல்லாம் ஜூசூபி ஆனால் எங்களை போல பகுத்தறியாமல் இருப்பவ்ர்களுக்குதான் பதில் சொல்லுவது கடினம் & குழப்பம்
நான் இந்த பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லுவது தலைவர்களையும் மற்றும் கருப்பு சட்டை அணிந்துவிட்டால் நாங்கள் பகுதறிவு வாதிகள் என்று நினைப்பவர்களை மட்டுமே.
நான் இந்த கேள்விகளை எழுப்பி யாரையும் விவாதிக்க வரஸ் சொல்லவில்லை. அப்படி அழைத்தவர் அந்த பதிவை எழுதிய ரகுவீரந்தான் அவரின் பேஸ்புக் முகவரிக்கான லிங்க் கொடுத்து இருக்கிறேன் அங்கு சென்று அவரை விவாதத்திற்கு அழையுங்கள். எனக்கு விவாததீற்கு எல்லாம் நேரம் இல்லை. நான் என் பதிவில் கேட்டது எல்லாம் மாற்று கருத்து இருந்தால் கண்ணியமான முறையில் பதிந்து செல்லுங்கள் என்பதுதான். அப்படி மாற்று கருத்துக்கள் சொல்லும் போதுதான் நான் சொன்னதில் நியாயம் இருக்கிறதா அப்படி இல்லை என்றால் மாற்று கருத்து சொன்னவரின் கருத்துதான் நியாயமாக படுகிறது என்று நினைத்து என் கருத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.
இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளித்து இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள் நேரம் கிடைக்கும் போது அங்கு வந்து படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்
கடைசியாக முதுகெலும்பு இருந்தால் தொடர்ந்து விவாதிப்போம் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதற்கு பதிலாக உங்களுக்கு நேரமும் அறிவும் இருந்தால் வாருங்கள் நாம் விவாதிப்போம் என்று சொல்லி இருக்கலாம் அல்லவா? காரணம் மாடுகளுக்கும் முதுகெலும்பு இருக்கிறது அதற்காக அது கூட விவாதிக்க முடியுமா என்ன?
இக்பால் நீங்கள் மீண்டும் பதிவுலகத்திற்கு அடி எடுத்து வைத்தற்கு வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன் மேலும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் எனது பதிவிற்கு மதிப்பு அளித்து கருத்துகள் சொன்னதற்கு நன்றி
சகா! சென்ற பதிவுக்கே பின்னூட்டம் இட நினைத்தேன். எனக்கு நேரம் அமையவில்லை.
ReplyDeleteசென்ற பதிவில் வீரன் அவர்கள் கேட்ட கேள்வியின் பின்புலம் அவருக்கு மிக தெளிவாய் தெரிந்தே இருக்கும். இடையில் பகடைகாய் ஆக்கபடுபவர்கள் யார் என்பதே கேள்வி. ஒரு கருத்தின் மீது விவாதம் செய்வது ஆரோக்கியமான விஷயம். அதற்காக கருத்து சொன்னவரை பகைத்தல் என் இயல்பல்ல. திரு வீரன் அவர்களுக்கு, நான் பதில் சொல்ல ஆசைபடுகிறேன்( அவர் என்னை கேட்கவில்லை என்றபோதும்) பகுத்தறிவாளர்கள் அனைவருக்குமானது என்று நீங்கள் சொல்லிய பின் எனக்கு பதில் சொல்லும் ஆசை வந்திருக்கிறது. ஒரு நண்பராக அடுத்து நான் எழுதப்போகும் பதிவு, நீங்க கேட்ட கேள்விக்கான விளக்கமே தவிர உங்களுக்கு எதிரான பதிவு இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்:)
I have made a few comments on the topic on other few writtings.One here too without two cents:)Tamilnadu is already in a pathetc path both politically and socially with a stir of religious belief and BJP eye on Tamilnadu. There are errors on Dravidiam movements but their contribution to Tamilnadu is historical. The core issue of varnasiram lies in manuscript and the translation of it by British rule of devide and rule India.
ReplyDeleteஐயோ அண்ணா! இது உண்மையான இக்பால் செல்வன் அல்ல, போலி. அவர் பெயர் பிரபலத்தை பயன் படுத்த முனைகிறார். இக்பால் செல்வனின் எழுத்து நடைக்கும் இவரின் நடைக்கும் வெகு தூரம். கோடங்கி தளத்தில் சென்று பாருங்கள், மேலும் அவர் கஸ்டம் டொமைனில் தான் அதிகம் எழுதுவார்.
ReplyDeleteஇருக்கலாம். இரண்டாவது கோடாங்கி தளத்தை நடத்தியவரே பழய கனடா இக்பால் செல்வன் அல்ல என்பதே எனது சந்தேகம். முன் இசெ ஒரு தளத்தை நடத்தி இசுலாமியர் எதிர்ப்பால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பின் திரும்பி புதிய தளத்தை துவங்கினார் - அதன் பெயரும் கோடாங்கி என நினைக்கிறேன். பிறகு மீண்டும் காணமல் போனார். இதன் பிறகு சில காலம் கழித்து கோடங்கி தளம் இசெ பெயரில் துவங்கியது -இதுவே போலி என நினைக்கிறேன்.
Deleteசார்வாகன் போலவே பழய கனடா இசெ கடவுள் மறுப்பாளர், ஆனால் திகவினர் அல்ல. இவர்கள் எல்லா மதங்களை விமர்சிப்பவர்கள், பெரியாரின் மீது மதிப்புடையோர், ஆனால் ஈவேராவை விமர்சித்தால் மேலே விழுந்து பிடுங்கமாட்டார்கள். மதங்களைப் போலவே திக'விசமும் விமர்சிக்க தகுந்ததே என்பது இவர்களின் நிலைப்பாடு. ஆனால் இந்த இக்பால் செல்வன் முற்றிலும் வேறுபாடான கருத்துக்களைக் கூறுபவராக இருக்கிறார். ஓரு முறை இரண்டாவது கோடங்கி தளத்தில் பின்னூட்டமிட்ட போது அவருக்கு என்னை தெரியவுமில்லை. ஆகவே நான் அதிகம் பின்னூட்டமிட்டதும் இல்லை.
அல்லது இசெ முற்றிலும் தனது கருத்துக்களை, வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
சகோ சார்வாகன் ஒரு உண்மையான தமிழ்பேசும் பகுத்தறிவாளன்.
Deleteபார்ப்பனன்தான் மோசம் சரி, மீதி சாதிகள் என்ன செய்கின்றன? பார்பனரின் மோசடியை ஈவேரா கண்டுபிடித்து சுமார் 60 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த வருடத்தில் மீதி சாதிக்காரனெல்லாம் தலித்களை திருமணம் செய்தாவது சமதர்ம சமுதாயத்தை உருவாக்கி தொலைப்பதுதானே? ஆனால் புள்ளி விபரங்கள் சொல்வது என்ன... பெரியார் பொறந்த மண் என வாய்ச்சவடால் அடிக்கப்படும் தமிழ்நாட்டில்தான் தென்னிந்தியாவிலேயே குறைவான சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. பிற்படுத்தப்பட்ட சாதியினர் தலித்களை மணப்பது தமிழ்நாட்டில் 2.4%, இது இந்திய அளவிலான தேசிய சராசரியை விட குறைவு. பார்ப்பனர்கள் என்ன தமிழ்நாட்டு சனங்களுக்கு மட்டுமா சாதியை கற்றுக் கொடுத்தார்கள்? தாழ்த்தபட்ட சாதிக்காரரை மணம் புரிதல் அதிகம் நடைபெறும் தென்னிந்திய மாநிலம் -கம்யூனிச கேரளா அங்கு பார்பனர் (மட்டும்) எதிர்ப்பெல்லாம் இருப்பதாக தெரியவில்லை - இத்தனைக்கும் அது போன நூற்றாண்டுகளில் சாதி புரையோடிய மாநிலம். இதே போல இன்னொரு கம்னிச மாநிலமான மேற்கு வங்கத்தில் சாதி மறுப்பு திருமணகள் அரேஞ்சுடு மேரேஜாக நடைபெறுவது எனக்கு தெரியும். என்னுடன் பணிபுரிந்த வங்காள பிராமண டாக்டரின் மனைவி வேறு சாதி - அரேஞ்சுடு மேரேஜாம்.
ReplyDeleteஆக பார்ப்பனர் எதிர்ப்பு என்ற பூச்சாண்டிதான் காட்டப்படுகிறதே ஒழிய, சாதி ஒழிப்பில் திராவிட இயக்கம் படுதோல்வி அடைந்துவிட்டது. பெரியாரால் 'இது நடந்தது அது நடந்தது' என விடுவதெல்லாம் கதைதான் போலிருக்கிறது.
சகோ நந்தவனத்தான்,
Deleteதழ்த்தபட்ட ஜாதிகாரர்களை திருமணம் புரியும் மானிலம் கேரளா, ஜாதி மறுப்பு அரேஞ் திருமணங்களே நடத்தும் மானிலம் மேற்குவங்கம். ஆனால் இங்கே ஜாதி மறுத்தலை முன்னே நின்று செய்ய வேண்டிய பகுத்தறிவாளர்களாக சொல்லி கொள்ளும் தமிழக பகுத்தறிவாளர் பலர் பார்பான் என்று ஜாதி பார்த்து தான் தாக்குகிறார்கள், தமிழக கம்யூனிஸ்டுக்களில் ஒரு பகுதியினரும் வினவு குரூப் என்று நினைக்கிறேன் பார்பான் என்று ஜாதி பார்த்து தான் தாக்குகிறார்கள். இங்கே ஜாதி வேறுபாடுகள் மேலும் வளரும்.