Monday, April 27, 2015



இணைய (போலி) பகுத்தறிவு மொண்ணைகள்.

அண்ணே  உண்மையான பகுத்தறிவாளரகள் செய்வது என்ன அண்ணே

அவர்கள்  செய்வது  கடவுள் இல்லை என்று தங்களது மறுப்பு கொள்கையை மக்களிடம் எடுத்துரைப்பது

அப்ப இந்த இணைய (போலி)பகுத்தறிவு மொண்ணைகள் அதை செய்யாமல் பார்ப்பணர்களை எதிர்ப்பது ஏன்?

தம்பி "அந்த" அறிவு ஜீவிகளின் கண்களுக்கு பார்பணர்கள் கடவுளாக காட்சி அளிக்கிறார்கள் போல இருக்கு அதனால் அப்படி செய்கிறார்கள்....

மேலும் பல ஸ்டேடஸ்கள் தமிழகத்தில் பகுத்தறிவுவாதிகளாக வேஷம் போடுபவர்கள் பற்றி


பகுத்தறிவு வாதம் பேசிக்கிட்டு அட்சய திருதியைக்கு நகை வாங்கும் கூட்டம்தான் தமிழகத்தில் அதிகம்..

பகுத்தறிவு அதிகம்  பேசும் தமிழகத்தில்தான் கோயில்களும் சாமியார்களும் அதிகரித்து உள்ளனர்

பகுத்தறிவுவாதிகள் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது மதவாதிகள் நடத்தும் பள்ளிக் கூடங்களில் காரணம் மதவாதிகள்தான் இவர்கள் குழந்தைகளின் அறிவுக் கண்களை திறக்கிறார்களாம்

இந்துக்கள், இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள், ஜைனர்கள் இப்படி எல்லாம் மதத்தினரும் பள்ளிகள் கட்டி கல்வியோடு தங்கள் மதக் கொள்கைகளை போதிக்கின்றனர். ஆனால் இதைப் போல பகுத்தறிவு வாதிகளும் தாங்களும் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி அங்கு கல்வியோடு பகுத்தறிவையும் போதிக்கலாமே.. ( பெரியார் பேரில் கல்லூரி இருக்கிறது என்றாலும் அங்கு பகுத்தறிவு போதிக்க படவில்லையேதானே?)


இணையத்தில் பகுத்தறிவு வாதம் செய்யும் பலரின் கல்யாணங்கள் பார்பண புரோகிதர் நடத்தி வைத்த கல்யாணமாகவே இருக்கிறது

பெரியாரை கடவுளாக கருதும்  அரைகுறைபகுத்தறிவு வாதிகள்தான் நாட்டில் உலாவி வருகின்றனர்.
 
பகுத்தறிவு பேசும் நபர்களின் சொந்தங்கள் (அப்பா அம்மா சகோதர சகோதரிகள்) மத வழிபாட்டில் ஈடுபட்டாலும் இந்த பகுத்தறிவு வாதிகள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் ஏம்ப்பா உங்க பகுத்தறிவு வாதத்தை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கலாமே என்று கேட்டால் அது அவர்களின் சொந்த கருத்து அவர்களின் சுதந்திரத்தில் நான் ஈடுபடுவதில்லை என்று பதில் சொல்லிவீட்டு ஊரான் சுதந்திரத்தில் மட்டும் தங்கள் பகுத்தறிவை நிலை நிறுத்த முயற்சி செய்வார்கள்

பார்பணிய ஆதிக்கம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில் அதே ஆதிக்கத்தை இந்துத்துவா பெயரில் சில  பேரில் சில கயவர்கள் கொண்டுவந்து மீண்டும் ஆதிக்கம் செலுத்தி அதில் தாங்கள்  வாழ முயற்சிக்கிறார்கள் அதற்கு பல பகுத்தறிவு "திராவிட" மொண்ணைகளும் உறுதுணை புரிகின்றன. அதனால்தான் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு போராடாமல் இப்படி தேவையில்லாதா பிரச்சனைகளை அலசி ஆராய்கிறார்கள்.



அன்புடன்
மதுரைத்தமிழன்
27 Apr 2015

13 comments:

  1. அண்ணா, இப்போது பலமடைந்திருக்கும் இந்துத்வா கும்பலில் பிற்படுத்தபட்டோர் தான் முன்னிலையில் இருந்து நடத்தி செல்கின்றனர், இதை வசதியாக மறைத்துவிட்டு கீறல் விழுந்த tape ரெக்கார்டாய் பாப்பான் பாப்பான்

    ReplyDelete
  2. என்ன நண்பா இந்த சாட்டையடி அடிக்கிறீங்க......? ? ?

    ReplyDelete
  3. மேலும் நீங்கள் இக்பால் செல்வன் வலைத்தளத்தில் இட்ட பின்னூடங்களையும் பார்த்தேன், வீண் வேலை அந்த இக்பால் செல்வனை போல் தெரியவில்லை, அந்த தளமும் பகுத்தறிவு- தமிழன்- பெரியார்- திராவிடன் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருக்கிறது, பழைய இக்பால் செல்வனாக இருந்தால் தி.க பண்ணும் அரசியல் பற்றியும் விமர்சித்திருப்பார் .கோடங்கி எனும் தளத்துக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது 2012 இலிருந்தான பதிவுகள் இடம் பெற்றிருந்தன, ஆனால் ஈழத்தமிழர், இசுலாமியர், தமிழ் இனவாதம், சோழர் பற்றி அவர் முன்வைத்திருந்த காரசாரமான பதிவுகளை காண முடிவதில்லை. இது என்ன குழப்ப நிலை? இக்பால் செல்வனே வந்து பதிலளித்தால் மாத்திரமே தெளிவு பிறக்கும்( எந்த இக்பால் செல்வனாக இருந்தாலும்)

    ReplyDelete
  4. போலிகளுக்கு நெற்றியடி

    ReplyDelete
  5. மொண்ணை என்பதற்கு என்ன அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. மொண்ணை என்றால் மழுங்கியது மொண்ணையர்கள்= மழுங்கியவர்கள் என்று பொருள் கொள்ளலாம்

      Delete
  6. மதுரை தமிழரின் அருமையான பதிவு.

    ReplyDelete
  7. உங்கள் பதிவும் அருமை. படம், பதிவின் கருத்தை அப்படியே சொல்கிறது. Well Done. சாயிபாபா கருணானிதி வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் உள்ளவர்கள் அவர் காலில் விழுந்தார்கள் என்று தெரிந்தபோது வீரமணி தலையை மண்ணுக்குள் வைத்திருந்தார் போலிருக்கிறது (analogy of ostrich) கருணானிதி, நெத்தியில் பொட்டு வைத்துக்கொண்டு வரும் கட்சிக்காரரிடம் காயமா என்று கேட்கத் தெரியும். சொந்த மனைவிகளிடம் அவரின் பருப்பு வேகாது. பெரியாரைத் தவிர மற்றவர்களுக்கு அவர் பெயரைச் சொல்லி வியாபாரம் நடத்தும் அருகதை இல்லை. உங்களின் rotten apple மிக அருமையான செய்தி.

    ReplyDelete
  8. மிகவும் நல்லதொரு பதிவு! போலி பகுத்தறிவாளர்களை ஒரு பிடி பிடித்துவிட்டீர்கள்! இன்னும் நிறைய பேருக்கு பிராமணர்கள் மீது அப்படி ஒரு வெறுப்பு நிரவிக்கிடக்கிறது! ஏன் என்று தெரியவில்லை! இதனால் நிறைய எதிரிகளை சம்பாதித்துவிட்டீர்கள் போல!

    ReplyDelete
  9. பதிவில் சில இடத்தில ஒத்துபோகவும், சில கருத்தில் விலகவும் செய்கிறேன் சகா. நான் கடவுள் மறுப்பாளர். ஆனால் நாள் கிழமையில் என் அத்தை விளக்கேற்று என்று என்னை கேட்டுக்கொள்ளும் போது ஸ்டவ் பத்தவைப்பது போல் விளகேற்றவே செய்வேன். முடியாது என வாதாடி அவர் மனதை காயப்படுத்தி, நான் யாருக்கும் என்னை நிரூபிக்கவேண்டிய அவசியம்தான் என்ன ???? இல்லை இதுவரை அவர் நம்பிவந்தது தவறு என சொல்லவும் தேவைதான் என்ன? மற்றுமொரு பதிவு எழுதும் அளவு மேட்டர் இருக்கு, விடுங்க:) சென்ற பதிவில் என் பதிவை குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா:) நன்றி சகா:)

    ReplyDelete
  10. நமஸ்காரம் தமிழரே..
    பிராமணீயம் என்பது வேறு பிராமணன் என்பது வேறு இது புரியாவிட்டால் இப்படி உங்களிடம் பூரிக்கட்டை அடி வாங்க வேண்டியதுதான் .

    நண்பர் ஜானகிராம் ஒரு பிராமணராக இருந்தும் தனது திருமணத்தை புரோகிதம் இல்லாதுதான் செய்தார்.
    எது சமூக சமத்துவத்திற்கு எதிராக இருக்கிறதோ அது பிராமணியம் என்றார் அம்பேத்கார்.
    ஆக எனக்கு மற்ற சாதி கீழானவை என்று சொல்லும் அனைவருமே பிராமணிய, இந்துத்துவ வெறியர்களே.
    விரிவாக ஒரு பதிவினை எழுத வேண்டும் என்பதால் இப்பதைக்கு அப்பீட்.
    தம +

    ReplyDelete
    Replies
    1. //நண்பர் ஜானகிராம் ஒரு பிராமணராக இருந்தும் தனது திருமணத்தை புரோகிதம் இல்லாதுதான் செய்தார்.//
      பல வெளிநாட்டவர்கள் கூட சார்ச்சு இல்லாம அரசு அலுவலகங்களில் தாரளமாக திருமணம் செய்து கொள்கிறார்கள்.
      ஆக எனக்கு மற்ற சாதி கீழானவை என்று சொல்லும் அனைவருமே பிராமணிய இந்துத்துவ வெறியர்களே.
      இங்கே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு எதிரான ஜாதி துவேஷம் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

      Delete

  11. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.