இவர்கள்தான்
தமிழர்கள்...... உரிமைக்காக போராடும் கூட்டமல்ல கூத்தாடிகளை பார்க்க வந்த ஆட்டு மந்தை
கூட்டம்
கடந்த வாரம்
தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்வே இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாக அமைந்தது. அது வேறு
ஒன்றுமில்லை கல்யாண் ஜுவல்லர்ஸ் சென்னையில் திறந்த ஒரு ஷோரூம் பற்றியதுதான். இந்த நிகழ்விற்காக
அவர்கள் பிரபு அவர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விளம்பர படம். இந்த படம் வந்ததும் ஏதோ
அவர் செய்யக் கூடாததை செய்துவிட்ட மாதிரி சிவாஜியின் பெயரை கொடுத்துவிட்ட மாதிரி இந்த
சமுக தளங்களில் மக்கள் பொங்கி எழுந்து வரிந்து கொட்டினர். அதுமட்டுமல்லாமல் கல்யாண்
ஜுவல்லர்ஸ் தொடர்ந்து இந்த விளம்பரங்களை வெளியிட்டு மக்களை தொந்தரவு பண்ணினார்கள் என்றும்
எழுதி தள்ளினர்.
கல்யாண் ஜுவல்லர்ஸை
பொருத்த வரையில் அவர்களின் கடையைப் பற்றிய விளம்பரம் எங்கும் பேச பட வேண்டும் என்று
நினைத்து அதில் வெற்றியும் கண்டனர். அது போல பணத்திற்காக நடிப்பவர்களான பிரபு மற்றும்
பல நடிகர்கள் ஒன்று கூடி அந்த விழாவில் கலந்து கொண்டனர். அதற்காக அவர்கள் பணத்தை பெரும்
அளவில் சம்பளமாக பெற்றுக் கொண்டுதான் வந்தனர். அவர்கள் ஒன்றும் இது சமுக நல நிகழ்ச்சி
என்று சும்மா வந்து போகவில்லை.
ஆனால் இந்த விழாவிற்கு
வந்து கலந்து கொண்ட தமிழர் கூட்டம்தான் சும்மா வந்து கலந்து கொண்டணர். இப்படி வந்து
கலந்து கொண்ட ஆட்டு மந்தையான தமிழர் கூட்டம் வந்து சாதித்தது என்ன என்று பார்த்தால்
ஒன்றுமில்லைதான். இப்படி ஒன்றுமில்லாத கூட்டத்திற்கு வந்த தமிழர் கூட்டம் தங்களின்
உரிமைகளுக்காக எந்த கூட்டமும் நடத்தி போராடவில்லை. இந்த கூட்டதிற்கு வந்தவர்களை பார்த்தால்
ஏழை எளிய மக்கள் அல்ல படித்த மிடில் க்ளாஸ் என்று சொல்லப்படும் நடுத்தர வர்க்க கூட்டமாகவே
இருக்கிறது.
இந்த மக்கள் தங்கள்
பிள்ளைகளுக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டிய நல்ல
கல்வியை கொடுக்க போராட வரவில்லை. நல்ல சாலை வசதிகளை செய்து தர வேண்டி போராட வரவில்லை..
நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர போராட வரவில்லை. இருபது தமிழன் இழந்த உயிருக்காக போராட வரவில்லை மத மற்றும் சந்தர்ப்பவாத
அரசியலை கண்டிக்க போராடவரவில்லை .விலைவாசி உயர்வை கண்டித்து போராட வரவில்லை. பஸ் ,
மின்சார மற்றும் அடிப்படையான பால் விலை உயர்வை கண்டித்து போராட வரவில்லை. கூடங்குளம்
அணு உலைக்கு எதிராக போராட வரவில்லை, மித்தேன் திட்டதிற்கு எதிராக போராடவரவில்லை. நில
அக்கரமிப்பு சட்டத்தை எதிர்த்து போராட வரவில்லை.தனியார் பள்ளிகளில் அதிக அளவு நன் கொடை
வசூலிப்பதற்கு எதிராக போராட வரவில்லை.மணல் மற்றும் க்ராணைட் கொள்ளையர்களுக்கு எதிராக
போராடவில்லை. நல்ல IAS மற்றும் அரசாங்க அதிகாரிகள் பந்தாடப்படுவதற்காக போராடவரவில்லை.
சரி இவர்கள் இப்படி
தனியாகத்தான் போராட வேண்டாம். ஆனால் ஆளும் கட்சிகளை எதிர்த்து எதிர்கட்சிகள் பல பிரச்சனைகளுக்காக
போராடும் போது அவர்களுடன் சேர்ந்து போரடலாமே ஆனால் அதுவும் செய்யமாட்டார்கள், அதற்கு
காரணம் சொல்லுவது இவர்களும் அவர்கள் மாதிரிதானே செயல்பட்டார்கள் என்று சாக்கு போக்கு
சொல்லிக் கொண்டிருப்பாரகள். இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் அப்புறம் யார்தான் நமக்காக
போராடி நம் உரிமைகளை வாங்கி கொடுப்பார்கள் என்று கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டார்கள்
ஆனால் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக் கடையை
திறக்க பணம் வாங்கி கொண்டு வரும் நாகரீக கூத்தாடிகளை மட்டும் பார்க்க கூட்டம்
கூட்டமாக முண்டி அடித்து கொண்டு வருவார்கள் இந்த வெட்கம் கெட்ட தமிழர்கள் !
ஏண்டாப்பா இந்த
சினிமாக்காரர்கள் என்ன கடவுள் அனுப்பி வைத்த தூதர்களா என்ன அல்லது ஏஞ்சல்களா. அவர்களும்
உங்களைப் போல சராசரி மனிதர்கள்தானே அவர்கள் தின்றாலும் அவர்களும் உங்களைப் போலதான்
கழிவார்கள். அவர்களின் கழிவுகள் மட்டும் தங்கமாக வருவதில்லையே. அவர்களுக்கும் மனித
கழிவுதானே வரும். அவர்களைத்தான் படங்களில் அவ்வளவு பணத்தை கொடுத்து பாரக்கிறீர்கள்
அதே வேஷசத்தை இட்டுதானே அவர்கள் உங்கள் முன்னால் தோன்றுகிறார்கள். அவர்கள் மேக்கப்
போடாமல் வந்தால் உங்களை விட மிக அசிங்கமாகத்தான் இருக்கிறார்கள். அப்புறம் ஏண்டாப்பா
இப்படி ஆட்டு மந்தைகள் ஆட்டம் கூட்டம் கூட்டமாக போனீர்கள். இல்லை முதல் நாளில் வருபவர்களுக்கு
வாங்கும் நகைகளில் மிக அதிக உண்மையான தள்ளுபடி தருகிறேன் என்று அந்த நகைக்கடைகாரன்
உங்களிடம் சொன்னானா என்ன?
அப்புறம் ஏண்டா
இப்படி இருக்குறீங்க... இப்படி நீங்கள் இருப்பதால் உங்களை சுற்றியுள்ள கேரளாக்காரண்
ஆந்திராக்காரன் கர்நாடகா காரன் சிங்களவன் மற்றும் டில்லிக்காரன் உங்களை இளிச்சவாயனாக
ஆக்குகிறான். இப்படிபட்ட மானங்கெட்ட மடையர்களாக நீங்கள் இருக்கும் வரை எத்தனை பெரியார்
மற்றும் சீர்திருத்த வாதிகள் வந்தாலும் திருத்த முடியாது! டாட்.................
அன்புடன்
மதுரைத்தமிழன்
எது எப்படியோ, விளம்பரம் எடுத்தவர்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது....
ReplyDeleteவிளம்பரம் எடுத்தவனும் கடைக்காரணும் நடிகர்களும் பணம் சம்பாதித்துவிட்டார்கள் இனிமேல் நம்ம ஆளுங்கதான் ஏமாற ஆரபிக்கனும்
Deleteஇதுவும் அந்த விளம்பரக் கம்பனியை பொறுத்தவரை வெற்றியே...
ReplyDeleteதம +
உண்மையே.....
Deleteநடிகர்களை துரத்தும் கூட்டம் அல்லவா தமிழர் கூட்டம்! இவர்கள் திருந்தமாட்டார்கள்!
ReplyDeleteபுத்தி இருந்தாதேனே திருந்துவதற்கு....
Delete'நியாயமான கோபம். கட்டுரை சூப்பர்.
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி நெல்லைத்தமிழன்
Deleteஅண்ணாத்தே நலமா? சரியாக சொன்னீர்கள். தலையில் அடித்துக் கொள்ளலாம்.
ReplyDeleteஎன்ன சத்தயபிரியன் நலமா? வேலை அதிகமோ பதிவுகளையே காணவில்லையே? முகுந்தம்மா பதிவில் பார்த்தேன் விசாரிப்பதற்கு இங்கும் வந்து கருத்து பதிந்திருக்கிறீர்கள் நன்றி
Deleteஎன்றைக்குத் தான் திருந்துவார்களோ......
ReplyDeleteஅவர்கள் உடம்பில் இருக்கிற ஆடைகளையும் உருவிக் கொண்டும் போகும் வரை சும்மாதான் இருப்பார்கள் அதன்பிந்தான் புத்தி வரும்...
Deleteரசனை அளவை மீறி வெறியாக மாறுவதும், அதை பொருள் வியாபாரிகள் தம் வியாபாரத்திற்கும், அரசியில்வியாபாரிகள் தம் அதிகார வியாபாரத்திற்கும் பயன்படுத்திக்கொள்வதும் தமிழ்நாட்டில்தான். தமிழர்களை வெளிநாட்டுக்காரர்கள் “மல்டி டேலண்டட் அண்ட் செண்ட்டிமெண்டல் இடியட்ஸ்“ என்று சொல்கிறார்களாமே அது உண்மையாகத்தான் இருக்குமோ? அருமையான பதிவு நண்பரே
ReplyDeleteவாங்க முத்துநிலவன் சார் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Delete