Thursday, April 9, 2015



 20 பேர் சாவும் தமிழகம் வைக்கும் ஒப்பாரிகளும்
மரங்களை வெட்டுபவர்களை `கண்டதும் சுட உத்தரவு’ உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு அரசால் வழங்கப்பட்டது  என்றும் அதுபற்றி ஆந்திர அரசு  தமிழக அரசுக்கும் தெரிவித்தும். அதை ஒட்டி
 கடந்த இரு வாரமாக ஆந்திர , தமிழக காவல்துறையினர் கூட்டாக வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள சில கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தியதும் மேலும் அந்தக் கிராம மக்களை ஆந்திர எல்லையில் நுழைந்தால் சுட்டுக்கொல்வோம் என எச்சரித்ததும் உண்மையாக இருந்தால் இந்த மரம் வெட்டும் தொழிலாளிகள் கொல்லப்பட்டதில் தவறு ஏதும் இல்லை. அப்படி இல்லாமல் இவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அதற்கு ஆந்திர அரசு பொறுப்பு ஏற்று தவறு செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை தர வேண்டும். அதற்காக தமிழக மக்களும் அரசாங்கமும் போராட வேண்டும். அப்படி இல்லாமல் சும்மா ஒப்பாரி வைத்து கொண்டு இருக்க கூடாது

தமிழக அரசு செய்த தவறான செயல்

சட்டத்திற்கு புறம்பாக மரத்தை வெட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவர்கள் இருந்துவிட்டதற்காக அரசாங்கம் அவர்கள் குடும்பத்திற்கு அரசாங்க ரீதியாக 2 லட்சம் 3 லட்சம் என்று பணத்தை அள்ளி கொடுப்பது மிகவும் தவறான விசயம் மட்டுமல்ல அது கண்டிக்கதக்க விசயம்.

நாட்டிலே பல நியமான கூலி வேலை செய்யும் தொழிலாளிகள்( எத்தனை எத்தனை கட்டிட தொழிலாளிகள் ரோடு போடும் தொழிலாளிகள் பஸ் மற்றும் லாரி டிரைவர்கள்) பணியின் போது இறக்க நேரிடும் போது இப்படிதான் அரசாங்கம் பணத்தை அள்ளிக் கொடுக்கிறதா என்ன? அப்படி இருக்கும் போது சட்டதிற்கு புறம்பாக செயல்படும் இவர்கள் இறப்பிற்கு பணத்தை தருவது நியாம்தானா என்ன?

அரசாங்கம் அப்படி செய்தால் உழைக்கு வர்க்கம் நாம் ஏன் இப்படி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் இப்படி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு அதிக அளவு சம்பாதிப்போம் அப்படி சம்பாதிக்கும் போது இறந்துவிட்டால் அரசாங்கம் லட்சக் கணக்கில் நம் குடும்பத்திற்கு அள்ளிக் கொடுக்கும் என்று நினைக்க ஆரம்பிக்கும் போது சமுகம் என்ன நிலைக்கு போகும் என்று கொஞ்சாமவது நினைத்து பாருங்கள்

ஆந்திர அரசாங்கத்திற்கு எதிராக கூப்படும் போடும் மக்கள் இந்த தொழிலாளிகளை அழைத்து சென்ற ஏஜண்டுகளையும் கடத்தலுக்கு ஒரு துணையாக இருந்த அரசாங்க அதிகாரிகளையும் சென்னை துறைமுக அதிகாரிகளையும் அதில் சம்பந்தபட்ட பணமுதலைகளையும் கண்டுபிடித்து அவர்களுக்கும் இப்படி ஒரு தண்டனையை கொடுக்க தமிழக அரசுக்கு அதிகளவில் பிரஷர் கொடுக்காமல் செத்த தொழிலாளிகளுக்காக எத்தனை நாள் இப்படி ஒப்பாரி வைக்கப் போகிறீர்கள்.

அப்படி எல்லாம் நீங்கள் செய்யமாட்டீர்கள் ஏனென்றால் நீங்கள் மட்டுமல்ல நீங்கள் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்களும் அரசாங்கமும் திருட்டுக் கூட்டத்தை சார்ந்தவர்கள்தானே?

உங்கள் அரசியல் தலைவர்கள் ஊழல் பண்ணி சம்பாரித்தால் அரசியல்வாதிகள் என்றால் அப்படிதான் சம்பாதிப்பார்கள் அப்படி இல்லாதவன் அரசியல்வாதியாக இருக்கமாட்டான் என்று நியாம் பேசுபவர்கள்தானே நீங்கள்? ஒரு வேளை ஊழலில் ஈடுபட்ட தலைவர்களுக்கு சட்டப்படி தண்டனை தரப்பட்டால் அவர்களுக்கு தரப்படும் தண்டனை மிகவும் அதிகம் என்று சொல்லி அவர்களுக்காக வருத்தப்பட்டு உயிர்களையும் விடும் கூட்டத்தை சார்ந்தவர்கள்தானே நீங்கள்

அதுபோல அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் அதற்கும் நியாம் கற்பித்து வக்காலத்து வாங்குபவர்கள்தானே நீங்கள்?

அது போல சட்டதிற்கு புறம்பாக செயல்படும் திருடர்கள், தொழிலாளிகள் செயல்படுவதற்கும் அவர்கள் வறுமைதான் காரணம் என்று அந்த குற்றத்திற்கும் நியாம் கற்பிப்பவர்களாகவும் நீங்களாக இருக்கிறீர்கள்

அதுபோல பெண்களை கற்பழிப்பவனுக்கு சாதகமாக இருந்து, அவன் குற்றவாளி அல்ல அந்த கற்பழிப்புக்கு காரணம் பெண்கள் அணியும் ஆடைகள்தான் என்று அந்த பெண்களையே குற்றம் சொல்லுபவர்கள்தானே நீங்கள்.

அப்படிபட்ட நீங்கள் இந்த சுடுசம்பவதிற்கு காரணமானவர்கள் அந்த தொழிலாளிகள் என்பதை மறந்து விட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறீர்கள்.


பாவம் ஊருக்கு இளைத்தவன் அந்த போலீஸ்காரர்கள்தானா என்ன?  நல்லா இருக்குப்பா உங்கள் நியாமும் உங்களின் பொட்டைதனமான ஒப்பாரிகளும்..போலீஸ்காரன் என்ன செய்வான் அவனுக்கு மேல் உள்ள அதிகாரி சொன்னதைதானே செய்வான் அவனுக்கு மேல் உள்ள அதிகாரி அந்த மாநிலத்தை ஆளுபவன் சொல்வதைதானே செய்வான். ஆனால் அப்படி ஆளுபவனே தேர்ந்தெடுத்து யார் நீங்கள் தானே? அப்புறம் ஏன் ஒப்பாரி ......


avargal unmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. இந்த நோக்கிலும் சிந்திக்கவேண்டியது அவசியம்.

    ReplyDelete
  2. அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக சுடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் இவர்களும் சட்டதிற்கு புறம்பான நடவடிக்கைகளில்தானே ஈடுபட்டார்கள்

      Delete
  3. சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்தாலும் அப்படி அவர்களை செய்யத்தூண்டியது எது? அவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்காதது எது? இதே அரசுதானே? இறந்த பின் அவர்களுக்கு கொடுத்த மூன்று லட்சத்தை முதலிலேயே அவர்கள் தொழில் தொடங்க கொடுத்து இருக்கலாமே? மரவெட்டிய அம்புகள்தான் இவர்கள்? இவர்களுக்கு உயிரிழப்புதான் தண்டணை என்றால் இவர்களை எய்தவர்களுக்கு என்ன தண்டணை? ஓர் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை! சட்டத்துக்கு புறம்பான தொழிலே செய்தாலும் இப்படி கொன்று போட்டுவிட்டால் இனி இந்த கடத்தலே நடக்காமல் போய்விடுமா? உங்கள் கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தப்பு செய்தவன் யாராக இருந்தாலும் அவன் தண்டிக்கப்பட வேண்டியவர்களே அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை ஆனால் இவன் பண்ணியது சிறியதுதானே அது தப்பு இல்லை என்று வாதாடுவதுதான் தவறு. நான் இந்த பதிவிலாவது அல்லது எனது முந்தைய பதிவிலாவது இந்த கடத்தலில் சம்பந்தபட்டவர்களுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்று எங்காவது கூறி இருக்கிறேனா? நான் சொல்லவது எல்லாம் இவர்களுக்காக கூப்பாடு போடாமல் இந்த கடத்தலில் சம்பந்தபட்ட அனைவரையும் இதே போல தண்டிக்க வேண்டும் அதற்காக அரசாங்கத்திற்கு தமிழக மக்கள்தான் பிரஷர் கொடுக்க வேண்டும் என்றுதான் எனது முந்தயை பதிவில் கூறி இருக்கிறேன் அப்படி செய்யாமல் இவர்களுக்காக நாம் அழுது கொண்டிருந்தால் அவர்கள் தப்பித்து விடுவார்களே அதுதான் நீங்கள் எதிர்பார்ப்பதா?

      தப்பித்து வந்த தொழிலாளிகள் சிலர் இந்த ஏஜண்டுதான் எங்களை கூட்டிஸ் சென்ரது என்று சில பெயர்களை கூறி இருக்கிறார்கள் அவர்களை ஏன் இந்த அரசாங்கம் இன்னும் கைது செய்து விசாரணை செய்யவில்லை. அதற்காக ஏன் இன்னும் யாரும் குரல் கொடுக்கவில்லை நண்பா

      Delete
    2. சிறிய தப்புத்தானே அதனால் தண்டனை கொடுக்க கூடாது என யாரும் சொல்லவில்லை.

      கைது செய்து நீதி மன்றில் நிறுத்தி சட்டப்படி தண்டனை கொடுத்திருக்க வேண்டுமே தவிர . கைது செய்து சித்திரவதை செய்து மிருகங்களை போல் சுட்டுகொன்றிருக்க கூடாதெனத்தான் சொல்கிறார்கள் . மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக போராட்டம் நடத்துகிறார்கள் . இதிலென்ன தவறு கண்டு விட்டீர்கள் ?

      இவர்களை மரம் வெட்டுவதற்காக பணியில் அமர்த்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எ டுக்க கூடாதெனவோ அல்லது கைது செய்ய கூடாதெனவோ எங்காவது போராடுகிறார்களா ? அல்லது கோரிக்கை வைக்கிறார்களா ?

      சுட்டுக்கொன்றவர்கள் மீது தெளிவாகவே மனித உரிமை மீறல் நடந்திருப்பது தெளிவாகியிருக்கிறது.
      உயர்நீதிமன்றமும் சுட்டுக்கொலை செய்தவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது.

      சுட்டுக்கொன்றவர்களுக்காக நாம் அழுது கொண்டிருந்தால் , மரக்கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள் தப்பி விடுவார்கள் எனக்கூறுவது சொத்தை வாதம் .

      என்னமோ மரக்கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை தப்புவிப்பதற்காகவே தமிழகத்தில் மக்கள் போராடுகிறார்கள் என பிரச்சனையை திசை திருப்புவது மட்டுமல்ல , அதனை கொச்சை படுத்தியும் வருகிறீர்கள் .

      ஆனால் சட்டத்துக்கு புறம்ப்பாக கொல்லப்பட்டவரகளுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் உரிய நீதி வழங்கப்படும் வரை ,மனித உரிமையை மதிக்காது கொலை பாதகம் புரிந்த காவலர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கும் வரை தமிழகம் ஒயாது.

      Delete
  4. மரம் வெட்டினால் துப்பாகியால் சுடு, எந்த ஹிட்லரின் அரசாஙமும் செய்யாதது...
    -ஆருர் பாஸ்கர்
    http://aarurbass.blogspot.com/

    ReplyDelete
  5. மதுரைத் தமிழனின் கருத்துக்கள் சரியானவையே.
    தளிர் சுரேஷ் அவர்களே - வேலை வாய்ப்பை அரசு ஏன் கொடுக்கவேண்டும்? மக்களுக்கு சுய புத்தி எங்கே போய்விட்டது? அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. வாய்ப்புகள் எங்கேயும் இருக்கின்றன. இந்த விஷயம், சாதி அரசியலுக்குள் நுழைந்ததால்தான், எப்போதும்போல், கெட்ட பெயர் எடுக்க வேண்டாம் என்று அரசு 3 லட்சம் கொடுத்துள்ளது. என்னைக் கேட்டால், இவர்களுக்கு ஒரு பைசா தருவதும் சரியல்ல. நாளை உங்கள் வீட்டில் திருடர்கள் திருடினால், தமிழன் என்பதால் விட்டுவிடச் சொல்வீர்களா? அல்லது, அவர்களுக்குத் தானம் செய்யாமல் பணத்தை நீங்கள் உங்கள் உபயோகத்திற்காக வைத்த தவறுதான் அவர்கள் திருடக் காரணம் என்பீர்களா?
    பாஸ்கரன் அவர்களே - துப்பாக்கியால் சுட்டது தவறுதான். ஆனால், திருடச் சென்றது தவறில்லையா? எத்தனை மரங்களை வெட்டிக் கொள்ளையடித்துள்ளார்கள்? இவர்களையும், அந்த வனப் பகுதியில் உள்ள நக்சலைட்டுகளையும், தீவிரவாதிகளையும் இனம் பிரிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்னைக் கேட்டால், இவர்களின் இரு கைகளை வெட்டியிருக்க வேண்டும். கொன்றிருக்கக் கூடாது.
    நம் அரசியல் வியாதிகள் - திருடங்களைத் தமிழர் என்று சொல்லி அவர்களுக்கு ஆதரவு தருவதற்கும், ராமதாஸ் வீரப்பனை ஆதரித்ததற்கும், அதிமுக பஸ் எரித்து 3 மாணவியரைக் கொன்றவர்களை ஆதரிப்பதற்கும், தினகரன் பத்திரிகை அலுவலத்தை எரித்தவர்களை திமுகா ஆதரித்ததற்கும் என்ன வேறுபாடு? இந்த அரசியல் தலைவர்களை 'நொந்துகொள்வதைவிட, இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களே குற்றவாளிகள்.

    இதனை ஆதங்கத்தினால் எழுதுகிறேன். நாம் எல்லோரும் எப்போது சட்டத்தை மதிக்கக் கற்றுக்கொள்கிறோமோ அப்போதுதான் மற்றவர்களின் தவறைக் குறை கூறும் யோக்கியதை நமக்கு (என்னையும் சேர்த்து) வரும். இதைத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன், உங்களில் யோக்கியர் எவரோ அவர் முதலில் கல்லெறியட்டும் என்று இயேசு பெருமானார் கூறினார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.