கி வீரமணிக்கு
20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா
1. ஜாதி பேதம்
பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு
எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள்
வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?
2. கடவுள் இல்லை
என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?
3. தியாகராஜர்
ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை
விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?
4. பிராமணன்
பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின்
தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?
5. தாலி அகற்றும்
போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து
நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள்
என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?
6. எடுத்ததற்கெல்லாம்
கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு
ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை
இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?
7. கடவுள் வழிபாட்டையும்
சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும்
இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை , காமராஜர்,எம்
ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும்
உங்களிடம் திராணி இருக்கிறதா?
8. பிராமணனை
மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத்தவிற மற்றவர்கள் முட்டாள்கள்,
அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?
9. நாட்டில்
நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின்
பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம்
என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?
10. கோவிலில்
நுழைய அனுமதி, தெருவில் நடமாட தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை டம்ப்ளர் முறை,
கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள்,
எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எல்லாம் உங்களால்
பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?
11. ஒரு பிராமண
பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிட கட்சியாயிற்றே. இதை எதிர்த்து
குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?
12. அந்த ஒரு
பிராமண பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது, ஒரு கவுன்சிலரையாவது
கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?
13. பிராமணர்களால்
உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற
கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால்
அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய
வைக்க முடியுமா?
14. பாம்பையும்
பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை
உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?
15. குங்குமம்
வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை
பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?
16. ஹிந்துக்கள்
தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும்
போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை
இருக்கிறதா?
17. பார்ப்பனன்,
வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது
என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும்
காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு
வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?
18.ஈ வெ ரா கொள்கைகளின்
வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது
என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது
சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?
19. பூணூல் என்பது
ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள்
பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?
20. ஒன்றின்மீது
நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை.
யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி
பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?.
முடிந்தால் இதற்கு
பதில்கூறி தெளிவு பெறுங்கள். நாங்கள் எங்கள் வேலையை அமைதியாக பார்க்க விடுங்கள்.
டி ஜெ ரகுவீரன்
22.4.2015 https://www.facebook.com/pages/Raghuveerans-Aviyal/830810210292030?pnref=lhc
பேஸ்புக்கில் டி ஜெ ரகுவீரன் https://www.facebook.com/pages/Raghuveerans-Aviyal/830810210292030?pnref=lhc ( https://twitter.com/raghuveerantj )வீரமணி மற்றும் பகுத்தறிவாளர்க்கு எழுப்பிய கேள்விகள்
இது. இவர் கேட்கும் கேள்விகள் நியாமானவைகளாகத்தான் தோன்றுகிறது. பலதரப்பட்ட செய்திகள்
மற்றும் அதன் கோணங்களை எனது தள வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே இது இங்கு அது
எழுதியவரின் அனுமதியுடன் இங்கு பதியப்படுகிறது,
இதனை படிக்கும் நண்பர்கள் கண்ணியமான முறையில் கருத்து தெரிவித்தால் மட்டுமே இங்கு வெளியிடப்படும்....அப்படி
முடியவில்லை என்றால் இதை படித்துவிட்டு அப்படியே நகரவும்.
டிஸ்கி 2 : இது எனது கருத்து தமிழக பகுத்தறிவாளர்களின்
கொள்கை கடவுள் எதிர்ப்பாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட (இந்து)மதத்தையும்
அதில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் எதிர்ப்பது தவறு. பூணலை அறுத்தவர்கள், மூஸ்லீம்
பெண்கள் அணியும் பர்தாவையும் கிழித்து ஏறிய துணிவு உண்டா. கடவுள் இருக்கிறார் என்று
நினைப்பவர்கள் அவரவர்களின் வழித்தலங்களில் அவரவருக்கு பிடித்த மாதிரி வழிபட்டு வாழட்டுமே.
அப்படி இல்லாதவர்கள் கடவுள் இல்லை நான் வழிபடுவதில்லை
என்று சொல்லிவிட்டு செல்லுங்களேன். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் உங்களை வற்புறுத்தவா
செய்கிறார்கள். பகுத்தறிவாளன் என்று சொல்வதை
விட மனிதனாக இருக்க முதலில் பழகுங்கள்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
வீரமணி, பிராமணன்,
கேள்விகள், பகுத்தறிவு
What happened to Raghu's facebook?
ReplyDeleteலிங்கில் சிறு தவறு இருந்திருக்கிறது அதனால்தான் பிரச்சனை இப்போது அதனை சரி செய்துவிட்டேன்
Deleteஅவர்கள் உண்மைகள் கவனத்திற்கு!
ReplyDeletehttp://arumbithazh.blogspot.in/2015/04/blog-post_19.html
நிச்சயம் நீங்கள் தந்த லிங்கில் சென்று பார்க்கிறேன்
Deleteபழங்குடியினரிடம் அரசு மற்றும் அதிகார வர்க்கம் அராஜகம் பண்ணுவதுமாதிரி, ஏதிலிகளை அந்தச் சமூகத்தின் மேல்தட்டு மக்கள் அடிமைப் படுத்திவைத்திருப்பது மாதிரி, திருப்பித் தாக்கிட முடியாததால், குறைந்த நபர்களைப் பெற்றிருப்பதால், வீரமணி பிராமண சமூகத்தினரிடம் உதார் விடுவார். அவர் கொள்கையை வளர்ப்பது அவர் நோக்கமாக இருந்தால், சமூக சாதீயப் பாகுபாட்டைப் பற்றிப் பேசலாம், அதற்குத் தன் ரவுடிக் கூட்டங்களை உபயோகப் படுத்தலாம். அதுக்குத் திராணி இல்லாததால், விளம்பரத்துக்காக இதனைச் செய்கிறார் என்று தோன்றுகிறது.
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம். இப்போது திடுமென்று பூணூலை அறுப்பது என்ற ரவுடி வேடம் போடுவதில் ஒரு காரணம் இருக்கிறது. உடனே பிராமணர்களின் ஆதரவுக்கு பாரதீய ஜனதா வரலாம். அதனை வைத்து, மற்ற கட்சிகளை தி.மு.காவுக்கு ஆதரவாகத் திரட்டலாம், பாரதீய ஜனதாவுடன் சேருவதைத் தடுக்கலாம் என்ற மாஸ்டர் பிளானை வீரமணியின் தலைவர் கொடுத்திருக்கலாம். ஐந்தாம்படை வேலை அவருக்குப் புதுசா?
திறமைதான் முக்கியம். சாதி முக்கியமில்லை என்பது உண்மைதான். ஆனால் இத்தகைய தலைவர்கள் தன்னுடைய கட்சி, அறக்கட்டளை, சொத்து என்று வரும்போது (இதெல்லாம் கட்சி உறுப்பினர்கள் அனைவரின் உழைப்பில் சேர்ந்தது) அவர்களுடைய பையனுக்கு மட்டுமே கொடுத்துவிடுகிறார்களே. இந்த கான்செப்ட், ஒருவர் அவருடைய ஜாதியினருக்கு மட்டும் சலுகை கொடுப்பதிலிருந்து எப்படி வேறுபட்டது? வீரமணியின் பையனுக்கு என்ன திறமை இருக்கிறது? ஸ்டாலினுக்காவது, அப்பா ஆதரவு இருந்தபோதும், அவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்..இப்போதும் உழைக்கிறார்.
பெரியார் இந்த வேலையைச் செய்யாததினால், யாரும் அவரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று நினைவு கூறுவதில்லை. அவர் எந்த ஜாதியினருக்கும், எப்போதும், பெரியார்தான்.
நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. நாணும் அப்படித்தான் நினைத்தேன் தேர்தல்வருவதால் எல்லோரும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் அதன் பின் இந்த பகுத்தறிவு பேச்சு எல்லாம் அடங்கி போ கும் அதை பற்றிதான் நானும் பதிவு எழுத நினைத்தேன்.கடைசி வரியில் நீங்கள் சொன்னது மிக அருமை
Deleteரகுவீரனின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது! இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் தைரியம் கருஞ்சட்டைக் காரருக்கு கிடையாது. நல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteஎன் மனதில் நியாமாக பட்டதால் அதை அவர் அனுமதியுடன் இங்கே பதிந்தேன்... ஒரு வேளை யாரவது மிக சரியாக பதில் சொன்னால் அதையும் அதில் நியாம் இருந்தால் அதையும் கருத்தில் கொள்வேன்
Deleteஉங்கள் கேள்விகளிலிருந்து நீங்கள் பார்ப்பனர் என்பதை அடையாளம் காணமுடிகிறது. இந்த கேள்விகளுக்கு பெரியார் வாழும் காலத்திலேயே பலமுறை பதில் கொடுக்கப்பட்டுவிட்டது. மீண்டும் மீண்டும் இதனை எழுப்புவது இந்த மக்களை குழப்புவதற்கு தான் என்பதை எம்மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இன்னும் உங்களை திறமை மிக்கவர்கள், நேர்மை மிக்கவர்கள், என்று நம்பி உங்களோடு அணுக்கமாக உள்ளவர்களை நீங்கள் சூத்திரர்களாகவே நடத்துவதும், எளிதில் அவர்களை குழப்பு முடியும் என நம்புவதும் ஞாயம் தானா ?
ReplyDeleteநண்பரே நான் பிராமின் அல்ல இந்த கேள்விக்கு எல்லாம் பெரியாரால் பதில் சொல்லப்பட்டிருக்கிறதா அப்படி என்றால் அவர் சொன்ன பதில் என்ன எங்கே இருக்கிறது என்று சொன்னால் அதை படித்து தெரியாத விடையை அறிந்து கொள்ளலாமே. பெரியார சொன்னதை மீண்டும் இங்கே சொல்வதில் என்ன தவறு
DeleteI can answer this ragu-veeran-moran! What if I answered, Is he going to hang himself? Or he is going to keep his moth shut for rest of his life?
ReplyDeleteபாஸ் உங்கள் பதில் கண்டு அவர் தூக்கில் தொங்குவாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் இந்த கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதிலில் நியாம் இருப்பதாக என் மனதில்பட்டால் அதை நிச்சயம் கருத்தில் எடுத்து கொள்வேன். நான் நிறைய இடத்தில் சொல்லியது இதுதான் நான் அறிவு ஜீவி அல்ல சாதாரண மனிதன் தான். எனக்கு இந்த கேள்விகள் நியாமாகப்பட்டதால் அதை நியாம் என்று சொல்லி இருக்கிறேன் அப்படி இல்லை என்று நீங்கள் மறுக்கும்பட்சததில் ஆத்திரப்படாமல் என் மண்டையில் ஏறும் படி விளக்கி சொல்லாமே
DeleteMT: You need to take away the restriction in copy paste option. How the hell I can answer if I can not quote his questions. The post itself a copy-paste, why are you protecting that from copying and pasting and answering this idiots' questions. That does not make any sense at all. Just think about it
ReplyDeleteஇந்த பதிவு அதை எழுதியவர் அனுமதியுடன் காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கிறேன் மேலும் எழுதியவர் யார் என்று சொல்லிதான் காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கிறேன்.மிக சில பதிவுகளை மட்டும் அதை எழுதியவர்கள் அனுமதியுடன் பதிவு செய்து இருக்கிறேன் மற்றைய பதிவுகள் நான் எழுதியவைதான் அதை என் அனுமதி பெறாமல் பகிர்வதை விரும்பவில்லை அதானால்தான் அதை எளிதில் எல்லோராலும் காப்பி பண்ண முடியாதபடி வைத்து இருக்கிறேன். அது 100 சதவிகிதம் பாதுகாப்பி கிடையாது நான் கொடுத்த பாதுகாப்பை அல்லது இது மாதிரி மற்றவர்கள் கொடுக்கும் பாதுகாப்பை சிறிது டைம் செலவழித்தால் அதை உடைத்துவிடலாம் என்பதையும் நான் அறிவேன்.என்னிடம் அனுமதி கேட்காமல் பதிவர்கள் அப்படியாவது கொஞ்சம் நேரமாவது அதற்காக செலவழிக்கட்டுமே என்றுதான் நான் அப்படி செய்து இருக்கிறேன்.
Deleteநீங்க தான் எழுதியது என்று உச்சகட்ட ஆச்சரியமடைந்தேன். நீங்க கொடுத்த முகநூல் இணைப்பு இல்லை என்று வருகின்றதே
ReplyDeleteஉங்களை ஆச்சரியப்பட வைத்தற்கு மன்னிப்பு, இனிமேல் எழுதியாவர் யார் என்பதை பதிவின் இறுதியில் தராமல் ஆரம்பத்தில் தர முயற்சிக்கிறேன். இணைப்பை சரி செய்துவிட்டேன்
Deleteஇதேபோல், பார்ப்பனர்களுக்கும் அவனுக கடவுளுக்கும் 1000 கேள்வி கேட்கமுடியும். அதெற்கெல்லாம் மதுரைத் தமிழன் பதில் வாங்கிக் கொடுப்பாரா? இல்லைனா கடவுள் பக்தர்களுக்கு ஜால்ரா அடிப்பதே அவர் வேலையா?னு மதுரத்தமிழன் பதில் சொல்லுங்க!
ReplyDeleteபிராமினர்களும் அவர்களின் கடவுள் பற்றி உங்களுக்கு 1000 கேள்வி இருந்தால் கேளுங்கள் ஒரு வேளை அவர்கள் உங்களின் கேல்விகளுக்கு பதில் தருவார். நான் கடவுளின் பக்தர்களுக்கு ஜல்ரா அடிக்கிறேனா என்ற கேள்வி கேட்டு இருக்கிறீர்கள் நானே கடவுளின் பக்தன் தான் நான் அடிப்பது கடவுளுக்கு ஜால்ரா மட்டுமே. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு இப்படி நம்பிக்கை இருப்பதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை
Deleteஎனக்கு இன்னுமொரு சந்தேகம். தமிழ் தமிழன் என்று குறுக்குசால் ஓட்டுபவர்களெல்லாம் 'வருண்' என்று வருணதேவனைக் குறிக்கும் சமஸ்கிருதப் பெயரில் எழுதுவது, அவர்களது தன்னம்பிக்கையின்மையத்தான் காண்பிக்கிறது.
DeleteI didn't expect from this you. Veeramani already answered to the most of the questions listed out here, check out his latest interview with pandey.
ReplyDeleteநண்பரே நான் உங்களிடம் இந்த மாதிரி பதிவுகளை எதிர்பார்க்கவில்லை என்று நீங்களோ வேறு யாருமோ என்னிடம் மீண்டும் சொல்ல வேண்டாம். ஒரு வேளை இந்த பதிவு அல்லது கருத்து பிடிக்கவில்லை என்றால் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள் அல்லது மாறுபட்ட கருத்து ஏதும் இருந்தால் சொல்லுங்கள் அதைவிட்டு விட்டு நான் மதுரைத்தமிழன் மனைவியிடம் பூரிக்கட்டையால் அடி வாங்குவது அல்லது மோடியை கலாய்ப்பது மற்றும் மற்ற தலைவர்களை விமர்சிப்பது போண்றவைகளை மட்டுமே ரசிக்கிறேன் என்று சொல்லாதீர்கள். காரணம் இப்படி நான் மாற்று தலைவர்களை கலாய்து பதிவு போடும் போது அவர்களும் மதுரைதமிழா இப்படி எங்கள் தலைவர்களை கலாய்த்ஹு போடுவது போண்ற பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று சொல்லுவார்கள் இப்படி ஒவ்வொரு வரும் இப்படி சொன்னால் நான் என்னதான் எழுது வது கதையையா அல்லது கவிதையையா அதுதான் எனக்கு வரவே வராதே. நான் இங்கே எழுதுவது இங்கே போழுது போக்குவதற்குதான் அதனால் பொழுது போக்க வேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் வந்து படிக்கவும். உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி. வீரமணி அளித்த பதிலை நான் பார்க்கவில்லை அதற்கு லிங்க் இருந்தால் தரவும் நன்றி
Deleteவீரமணி மட்டுமல்ல,பகுத்தறிவாளர்களாக தங்களை சொல்லி கொள்ளும் பலர் ஜாதி வெறுப்புடன் பார்பான் என்று ஜாதி பார்த்து தாக்குகின்றனர்.
ReplyDeleteஇப்போ தான் அவர் சிறிய மூடநம்பிக்கையான தாலிக்குகெதிராக போராட தொடங்கி இருக்கார்.எதிர்காலத்தில் பெரிய மூடநம்பிக்கையான பர்த்தாவுக்கு எதிராக போராடுவார் என்ற நம்புவோம்.
//கடவுள் இல்லை நான் வழிபடுவதில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்களேன். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் உங்களை வற்புறுத்தவா செய்கிறார்கள்.//
வற்புறுத்த தான் செய்கிறார்கள்! நீங்க கூட இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை யாருக்காக அந்த பதிவு எழுதினீர்கள்? கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள் நீங்க சொல்லாவிட்டாலும் தினமும் கடவுளிடம் பல முறை கையேந்துவார்கள். முகுந்தனின் அம்மா தனது இந்திய பிரயாணத்தில் கண்டதை சொல்கிறா ஆலயங்களில் மக்கள்வெள்ளம், சார்சு மசூதிகள் எங்கும் மக்கள் வெள்ளம் பக்தியில் பெருக்கெடுக்கிறது அவர் சொன்னது முற்றிலும் உண்மை. ஆகவே நீங்க கடவுளுக்காக பிரசாரம் செய்ததும் பகுத்தறிவாளர்களை நோக்கி தான்.
நான் கடவுளுக்காக பகுத்தறிவாளர்களிடம் பிரச்சாரம் செய்வதாக எடுத்து கொண்டாலும் அவர்கள் அதை பகுதறிவை உபயோகப்படுத்தி அதில் தெளிவாகத்தான் இருப்பாரகள் அப்படி இருக்கும் போது அதற்காக பகுத்தறிவாளர்கள் எதற்காக கவலைப்பட வேண்டும்
Deleteகங்கிராஜுலேஷன்ஸ் மதுரைத்தமிழன்!! இன்னைல இருந்து நீங்க பார்ப்பான் ஆயிட்டீங்க போல. "பார்ப்பன அடிவருடி" பட்டம் கண்டிப்பாக கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா ஒருத்தரு உங்களை பார்பான்னே சொல்லீட்டாரு!
ReplyDeleteஅவர்களே பிஸினஸ் முன்பு போல இல்லை என சோகமாக இருக்கிறார்கள். இப்படி கேள்வியெல்லாம் கேட்டு படுத்துனா எப்படி?
பகுத்தறிவு கம்பனிக்கு ஒரே ஆறுதல், மதவாத கம்பனிகள் நன்றாக வளர்ந்து பக்தி அமோகமாகிவிட்ட போதிலும் அதை ஓட்டாக மாற்றமுடியவில்லை. சாமி கும்பிடறவன் பூராவும் எலக்சனில் அம்மா கம்பனிக்கு ஓட்டுப் போட்டுவிடுவதால் இன்னமும் மதவாத கம்பனி அரசியல் ரீதியாக வளர முடியவில்லை. ஆனால் முன்பு மாதிரி இந்து கடவுள்களைளை ஃபிரியாக செருப்பால் அடிக்க முடிவதில்லை, பதிலுக்கு அவனுக கூட்டம் சேர்ந்து விட்ட தைரியத்தில் ஈவேரா படத்தை அடிச்சுப்பிடறானுக. இப்போது பிற்படுத்தப்பட்ட ஆள் வேறு மதவாத கம்பனி ஓனராகிவிட்டபடியால் பிற்படுத்தபட்ட சமூகம் - அதாவது திராவிட இனம் மதவாத கம்பனியில் சேர ஆரம்பித்து விட்டது. ஆகவே பகுத்தறிவு கம்பனிக்கு ஈக்குவலாக ஒண்ணுக்கு அடிப்பது, செருப்பால் அடிப்பது என விளையாடுகிறார்கள். அவர்களை ரொம்பவும் எதிர்த்து நின்றால் வெட்டுக்குத்து ஆகிவிடும் என்பதினால், வழக்கம் போல தயிர்சாதமாக அதிலும் வயதான தயிர் சாதமாக பார்த்து அடிக்கிறார்கள் பகுத்தறிவு கம்பனியினர், எல்லாம் ஒரு சேஃப்டிக்குதான்! இதையெல்லாம் கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்ப்பதுதான் உசிதம்.
நாமதான் இங்கே அடிச்சுகிறோம். பகுத்தறிவு பேசும் தலைவர்களும் அதே சமயத்தில் மதத்தை போதிக்கும் மததலைவர்களுக்கும் அதாவது இந்த இரண்டு பேர்களுக்கும் அவர்கள் போதிப்பதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை வைத்து நன்றாக துட்டு பார்க்கும் வழி தெரிந்திருக்கிறது என்பது உண்மை.
Deleteநீங்கள் குறிப்பிட்ட படி அடிவருடி என்று பட்டம் கொடுத்து கூடவே பெரும் தொகையை கொடுத்து இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேன் ஆனால் அதை கெடுக்கும்படி யாரோ ஒருவர் நான் பிராமிந்தான் என்று சொல்லி வரும் தொகையை வராமல் சதி செய்துவிட்டார் என்ன கொடுமை நண்பரே
ஏங்க சகோ வேகநரி, உங்களுக்கு ஏங்க வீரமணி மேல அப்படி ஒரு காண்டு? எதிர்காலத்தில் பர்தாவுக்கு எதிராக போராடுவார்ன்னு எழுதியிருக்கீங்க. அவரு உசிரோட இருக்கறது புடிக்கலயா? அவரே ஏதோ வயசான தயிர்சாத பார்ட்டிகளை எதிர்த்து பொழப்பு ஓட்டுறாரு. அவரை ISIS ரேஞ்சுக்கு கோத்துவிடுறீங்களே நியாயமா?
ReplyDeleteஹாஹஹஹா.......சிரிப்பை அடக்க முடியவில்லை
Deleteஊரே சிரிக்கிறது.
Delete"பார்ப்பன அடிவருடி" பட்டம் பார்சல்.
ReplyDeleteதமிழகத்தில் பெரும்பாலான துறைகளில் பார்ப்பன ஆதிக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்பது தான் உண்மை நிலை. அரசு அலுவர்களில், ரியல் எஸ்டேட் துறையில், வக்கீல்களில், காவல் துறையில், விவசாயத்தில் அவர்கள் சதவிகிதம் மிகவும் குறைவு.
பார்ப்பனர்கள் பெரும்பாலும் இருப்பது பத்திரிக்கை துறையில், மருத்துவம் மற்றும் பொறியியல், வங்கி, காப்பீடு, போன்ற துறைகளில் பெருமளவில் இருக்கிறார்கள். கல்வி துறையில் அவர்கள் சதவிகிதம் குறிப்பிட்ட அளவு இருக்க கூடும்.
இன்னும் சொல்ல போனால் ஜாதி கலவரங்கள் பெருமளவில் நடக்கும் கிராமப் பகுதிகளில் பார்ப்பனர்கள் சதவிகிதம் மிகவும் குறைவே.
எனது சொந்த அனுபவத்தில் ஜாதி வெறி கொண்ட பார்ப்பனர்கள் அதிகம் பேரை நான் பார்த்ததில்லை. இன்னும் சொல்ல போனால் ஜாதி மறுப்பு திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழும் சில பார்ப்பன நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்களில் பெண்களும் அடக்கம். பார்ப்பன குடும்பங்களில் பெண்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் அதிக அளவில் உண்டு என்பதையும் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
கல்லூரி காலத்தில் நான் அதிகம் உலவிய தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதிகளில் எல்லாம் ஜாதி வெறி தலை விரித்து ஆடியதை பார்த்திருக்கிறேன். அது நிச்சயம் பார்ப்பனர்களால் கிடையாது.
ஒரு வேளை ஹிட்லர் செய்தது போல, இலங்கையில் நடந்தது போல தமிழகத்தில் இருக்கும் அவ்வளவு பார்ப்பனர்களையும் கழுவேற்றி விட்டாலும் தமிழகத்தில் ஜாதி வெறி அடங்காது என்பது தான் உண்மை.
பார்ப்பனர்களுக்கு பார்ப்பனீயம் தேவை படுகிறதோ இல்லையோ, அவர்களை திட்டி பிழைப்பு ஓட்டுபவர்களுக்கு அது அவசியம் தேவை படுகிறது.
பார்ப்பனர்களை பார்ப்பான் என்பதற்காகவே வெறுப்பது ஒரு உச்ச கட்ட பார்ப்பனீயம். தாத்தா செய்த தவறுக்கு பேரனை தண்டிக்கிறார்கள்.
பதிவர் கார்த்திகை பாண்டியன் முன்னர் எழுதிய இந்த பதிவை படித்து பாருங்கள். என்னால் நிச்சயம் கூறமுடியும் அந்த ஜாதி வெறி பிடித்தவர் பார்ப்பனர் இல்லை என்பதை.
http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/06/blog-post.html
இங்கு பதிலளிக்கும் அனைவரும் ஒரு விசயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
ReplyDeleteஅதிலும் குறிப்பாக பார்ப்பனர்கள் திட்டமிட்டு மறைக்கிறார்கள்.
அரிவாளை தூக்கி கொண்டு எந்த பார்ப்பானும் ஜாதி கலவரத்தில் இறங்குவதில்லை
என்பது நூறு சதவீதம் உண்மையே.(ஆனால் இதுவே மத கலவரமாக இருந்தால்
களப்பணி செய்ய ஒரு போதும் அவர்கள் தயங்கியதில்லை)
பாப்பானுக்கு கீழே பிள்ளை,பிள்ளைக்கு கீழே வன்னியன்,வன்னியனுக்கு கீழே
பறையன் என்று படி நிலையை உருவாக்கியது யார்?அது இன்றளவும் நடைமுறையில்
இருப்பதற்கு யார் காரணம்? இதை மீறி ஒரு பறையன் நான் உனக்கு சமம் என்று ஒரு
வன்னியனுக்கு சமமாக நினைக்கும்போதோ அல்லது ஒரு பள்ளன் ஒரு தேவனுக்கு
எதிராக நினைக்கும்போதோ தானே கலவரம் உருவாகிறது.பறையனை விட நான் உயர்ந்தவன்
அவன் ஒரு போதும் எனக்கு சமமாக முடியாது என்ற ஜாதி வெறியை அவன் மனதில்
உருவாக்கி அதை ஒருபோதும் குறையாமல் பார்த்து கொள்வது யார் வகுத்த கொள்கை அல்லது
யார் எழுதிய சட்டம் ?
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
இந்த நோய்க்கு எங்கள் முன்னோர்களே காரணம் என்று ஒத்துக்கொண்டு
அதை சரி செய்ய பார்ப்பனர்கள் முன் வருவார்களா?
அவர்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டார்கள்.
அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விடும் என்று தெரியும்.
அப்படி வந்தால் கருப்பு சட்டை காரர்கள் வேறு வேலை பார்க்க போய்
விடுவார்கள்.
ReplyDeleteரகுவீரன் இன்று தனது பதிவில் சொல்லி இருப்பதையும் இங்கே உங்கள் பார்வைக்கு விடுகிறேன். இதற்கு பதில் அளிக்க நினைப்பவர்கள் அவரின் தளத்தில் பதிவிட வேண்டுகிறேன்
மேற்கூறிய பகிர்வில் முத்துராமலிங்க தேவர் ஜயந்தியை தியாகராஜ ஆராதனைக்கு நிகராகவும், கிறிஸ்துவர்கள் அணியும் மோதிரம், முஸ்லிம்கள் அணியும் தொப்பி மற்றும் சிங்குகள் அணியும் தலைப்பாகை முதலியவைகளை ஒரு பிராமணன் அணியும் பூணூலுக்கும் நிகரானவை என்றும், கடவுள் என்னும் சொல் கிறிஸ்து, அல்லா என்பவர்களையும் குறிப்பதுதான் என்ற கருத்தில் பதிவிட்டிருந்தேன். இந்த பதிவை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நண்பர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவனை ஒருவன் சமமாக மதித்து செயல்படவேண்டும் என்பதுதான் எனது கருத்து. இதைத்தான் நான், சமீபத்தில் துவங்கிய மன்மத வருடப் பிறப்பு வாழ்த்தாக பதிவிட்டிருந்தேன். அதை மீண்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.
"உன்மதத்தை நான் மதிக்க
என்மதத்தை நீ மதிக்க
என்று நாமும் சம்மதிக்கும்
எண்ணம்தனை கொடுத்தருளு
என்ற வேண்டுதலுடன்
வரவேற்போம் மன்மதத்தை."
வருடத்தை வரவேற்கும் கவிதை அருமை
Deleteஇந்த அளவுக்கு பார்ப்பன வெறுப்பு தேவை இல்லை என்பதே என் கருத்தும். ஒரு ஜட்ஜ் முத்து சாமி ஐயரைப் பாராட்டும் விதத்தில் அமைந்த அழ வள்ளியப்பாவின் கதையை பகிர்ந்ததற்கு என்னையும் அழ வள்ளியப்பவையும் திட்டித் தீர்த்தார் ஒரு ஏடாகூட பதிவுகளை எழுதிக் கொண்டிருந்த பிரபல பதிவர். பாரதியை வேறு சாடி இருந்தார். உண்மையில் அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் கொடுமைக்காரர்களா? பார்ப்பனர் அல்லாத ஒருவர் தன வீட்டை வாடகைக்கு விடும்போது ஒரே சமயத்தில் பார்ப்பனர் அல்லது பிற இனத்தவர் கேட்டால் பார்ப்பனருக்கே முன்னுரிமை தருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteநான் அறிந்தவரை பெண்கள் மட்டுமே தன இனத்தை விட குறைந்தததாக கருதப்படும் இனத்து ஆண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். படித்த நல்ல நிலையில் உள்ள ஆண்கள் பலர்(பகுத்தறிவாளர்கள் உட்பட) தன்னுடைய இனத்தை விட உயர் சாதியாகப் கருதப்படும் பெண்களையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பகுத்தறிவாளர்களின் பார்ப்பன வன்மம் அவர்களை ஒருங்கிணைக்கவும் குறைந்து கொண்டிருக்கும் அவர்களது இனப் பற்றை தூண்டிவிடவே செய்யும் . கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கி உள்ளவர்களை முன்னேற்ற நேரம் செலவழித்தால் மட்டுமே சமநிலை உண்டாகும். அதை விடுத்து எல்லா குற்றம் குறைகளுக்கும் பார்ப்பனர்களையே இன்னும் காரணம் காட்டிக் கொண்டிருப்பதை தவிர்த்து உண்மையான சேவையில் ஈடுபடவேண்டும்
பகுத்தறிவை தப்பு என்று சொல்லவில்லை ஆனால் தன் கருத்துமட்டும்தான் சரி என்று மற்றவர்களின் மீது வெறுப்பை விதைப்பதுதான் தவறு நீங்கள் சொன்ன பல உதாரணங்கள் உண்மையே. இங்கே என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையே உதாரணமாக கூறுகிறேன். நானும் எனது மனைவியும் வேற்று மதத்தை சார்ந்தவர்கள். எங்களது கல்யாணம் ராயப்பேட்டை ரிஜிஸ்டர் ஆபிஸில்தான் நடை பெற்றது எங்கள் கல்யாணத்தின் போது மாலை கிடையாது தாலிகிடையாது ஒன்றும் கிடையாது ஆனால் இரு மனமும் ஒரு மணமாக ஆகியது அன்றையதினத்தில்தான். நல்லவேளை அன்று நாங்கள் கருப்பு சட்டை அணியவில்லை அப்படி அணிந்து இருந்தால் எங்களை பகுத்தறிவு வாதிகள் என்று முத்திரை குத்தி இருப்பார்கள் நல்ல வேலை அந்த தப்பை பண்ணாமல் தப்பித்தோம். கல்யாணத்திற்கு அப்புறம் ஆறுமாதங்களாக நாங்கள் சென்னையில் சேர்ந்து வாழ வீடு தேடினோம் என்ன வாடகை என்றாலும் கொடுக்க தயாராக இருந்தோம் அப்படி நாங்கள் வீடு தேடிய போது பிராமிணர்களை குறை சொல்லும் இந்த போலி பகுத்தறிவு வாதிகளும் கூட எங்களுக்கு வீடு தரவில்லை கடைசியில் எனது நண்பரின் அண்ணன் அவர்கள் வீட்டில் குடி இருந்த ஆட்களை காலி செய்துவிட்டு எங்க்ளுக்கு வாடகைக்கு தந்தார். அப்போது நாங்கள் முடிவு செய்து அதன்பின் அமெரிக்காவிற்கு வந்துவிட்டோம் இங்கே யாரும் எங்களை எந்த ஜாதி என்று கேட்கவில்லை இன்று வரை நாங்கள் இருவரும் மதம் மாறவில்லை பெயரும் மாறவில்லை.. எம்மதமும் சம்மதம்தான் என்று நினைத்தாலும் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லோரிடமும் பழகி வருகிறோம். முரளி நீங்கள் மிக பண்புடன் உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி
Deleteகடவுளைக்காரணம் காட்டி தமிழர்களை சாதியின் பெயரால் பிரித்து அடிமைப்படுத்திய செயலைத் தான் பெரியார் எதிர்த்தார்.இந்த பார்ப்பனீய குணம் யாரிடம் இருந்தாலும் எதிர்ப்புக்குரியவரே....பெரியாரை புரிந்து கொள்ள மறுக்கும் தமிழினம் ....அவை கேவலப்படுத்துகின்றது..அவரின் பெயரைச்சொல்லி உருவான கட்சிகள் ,சாதிகளை ஒழிப்பதை விடுத்து வளர்ப்பது சுயநலத்தால் ...இதற்கு பெரியார் எப்படி பொறுப்பாக முடியும்...மனிதனை கருத்துவேறுபாடு தாண்டி நேசித்த மனிதநேயமுடைய பெரியாரை தூற்றுவது தன் மீது தானே --------போலாகும்
ReplyDelete'கடவுள் எதிர்ப்பு' என்ற கொள்கை தான் தமிழக நாத்திகத்தின் தவறு. கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு இல்லாத ஒன்றை எதிர்த்து என்ன பயன்? இல்லாத ஒன்றை எதிர்ப்பதால் இருப்பதாக அல்லவா செய்தி பரவுகிறது? தமிழகத்தில் நாத்திகம் கிடையாது. பிராமண சாதி எதிர்ப்பு மட்டுமே. இதன் வேர் நூறு ஆண்டுகளுக்கும் முந்தையது. கறுப்புச் சட்டைக்காரர்கள் இன்னொருவர் புகழிலும் பெயரிலும் குளிர்காயும் வீணர்கள். பெரியாரைத் தொடர்ந்து வந்த சீடர்கள் என்ன செய்தார்கள் நாத்திகம் வளர?
ReplyDeleteகேள்வி எண் 13 சரியா?
ReplyDeleteTCS நிறுவனர் டாட்டா பிராமணரா? இருக்கும் காசு உள்ள ஆளுன்னா பிராமணராதான் இருக்கும் :)
காக்னிசென்டின் முதல் செயல் தலைவர் ராசூ(ஜூ) என்ற சாதியாமே? டன் & பிராட்சிடீட்டை ஒப்பு கொள்ள வைத்தது குமார் மகாதேவா என்ற ஈழத்தமிழராமே? அவரும் பிராமணர் இல்லையாமே?
Cognizant has its roots in The Dun & Bradstreet Corporation, a joint venture between Dun & Bradstreet (76%) and Satyam Computers (24%).[6] Srini Raju was the CEO of this company established in 1994.[7] Kumar Mahadeva played a major role in convincing D&B to invest $2 million in the joint venture
In 1996, Dun & Bradstreet (D&B) spun off several of its subsidiaries including Erisco, IMS International, Nielsen Media Research, Pilot Software, Strategic Technologies and DBSS, to form a new company called Cognizant Corporation. Three months later, in 1997, DBSS was renamed as Cognizant Technology Solutions. In July 1997, D&B bought Satyam's 24% stake in DBSS for $3.4 million.[6][9] Headquarters were moved to the United States, and in March 1998, Kumar Mahadeva was named CEO.[10] Operating as a division of the Cognizant Corporation
எனக்கு தெரிந்து இன்போசிசு தான் பிராமணரால் தொடங்கப்பட்ட நிறுவனம். நல்ல வேளை விப்ரோவையும் தொடங்கனது பிராமணர் என்று ரகு சொல்லவில்லை. ;-)
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். அல்லா என்றால் அரபியில் கடவுள் என்று தானே பொருள்?
தியாகராயர் ஆராதனைக்கும் முத்துராமலிங்க செயந்திக்கும் என்ன தொடர்பு? தியாகராயர் ஆராதனையை அதற்கு இணையாகவும் முத்துராமலிங்க செயந்திக்கும் அதற்கு இணையாகவும் தான் ஒப்பிடவேண்டும்.
பல (எல்லா) கேள்விகளுக்கும் இக்பால் செல்வன் அவரது பதிவில் பதிலளித்துள்ளார்.
ஏதோ இவ்விடுகை இப்ப கண்ணில் பட்டதால் பதில் இது மிகவும் தாமதமான பதில் தான் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
இதற்கான பதில்கள் http://dravidiankural.com/2015/05/11/ve/
ReplyDeleteவீரமணிக்குக் கேள்விகளா? விடை இதோ! (http://manjaivasanthan.blogspot.in/2015/09/1.html
ReplyDeleteஆசிரியர் கி.வீரமணிக்கு 20 கேள்விகள் என்று சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் அவதூறான அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இங்கு தரப்படுகின்றன. பெரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவனும் எவனுமில்லை; பெரியார் இயக்கத்தவரிடம் கேள்வி கேட்டு வென்றவனும் எவனுமில்லை.
ReplyDeleteகேள்வியெழுப்பும் சிந்தனையை, துணிவை வளர்த்த இயக்கம், மேடையில் கேள்வி கேட்கும் முறையை தமிழகத்தில் உருவாக்கிய இயக்கம் எந்த கேள்விக்கும் சளைத்ததில்லை. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு கேட்கப்பட்டுள்ள இந்தக் கேள்விகள் – எளிய, இளைய திராவிடர் இயக்கத் தோழராலும் கூட விளக்கமளிக்கப்படக் கூடியவையே! அப்படியொரு தோழரின் பதில்கள் கீழே!
கேள்வி 1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?
பதில் 1. பார்ப்பான் ஜாதி பேதம் பார்ப்பவன் மட்டுமல்ல; ஜாதி பேதங்களை உருவாக்கி, அதைச் சாஸ்திர ரீதியாக வலுவூட்டி வழக்கில் கொண்டு வந்ததோடு, இன்றளவும் அதைக் காப்பாற்றத் துடிப்பவர்கள்; எதிர்காலத்திலும் நிலைநிறுத்த முயல்பவர்கள். அதனால்தான் அவர்களை முதன்மை இலக்காக்கி கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்.
மனிதர்களுக்குள் ஜாதிபேதம், மதபேதம், பிறப்பால் பேதம் யார் பார்த்தாலும், அவர்கள் எந்த ஜாதியினராயினும், எம்மதத்தவராயினும் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம். இதில் எங்களுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. நாங்கள் பார்ப்பனர்களை மட்டுமே எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம் என்பது உண்மைக்கு மாறான புரட்டு.
கேள்வி 2: கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?
பதில் 2: கடவுள் இல்லை என்றால் எக்கடவுளும் இல்லையென்பதே பொருள். நாங்கள் இந்துக்கடவுள் இல்லையென்று சொல்லவில்லையே! எனவே, உங்கள் கேள்வி புரட்டு; மோசடி!
கேள்வி 3: தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?
பதில் 3: அடிப்படையில் இவ்வொப்பீடே தவறானது. ஒருவருக்கு விழா எடுப்பதை கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. இனிய தமிழிசையை விட்டுவிட்டு தெலுங்குக் கீர்த்தனை, கர்நாடக இசை என்று அலையும் எம் இன மக்களை நாங்கள் விழிப்பூட்டுவதை திசைதிருப்பி, சம்பந்தமில்லாததோடு இணைத்து முடிச்சுப்போடும் உம் நரித்தந்திரம், வித்தைகளெல்லாம் எங்களிடம் பலிக்காது.
தமிழில் பேசு, அந்திய மொழிக்கு அடிமையாகாதே! தமிழ்ப் பெயர் சூட்டு, ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து தமிழைக் கெடுக்காதே என்று சொல்வது எப்படி தமிழர் கடமையோ அப்படித்தான் தமிழிசையைப் பாடு, அதற்கு உயர்வு கொடு என்பதும். இதை முதலில் புரிந்து கேள்வி கேள்! தவிர, பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி என்ற பெயரிலோ, அல்லது எந்த ஜாதியின் பெயரிலும் நடைபெறும் ஜாதி நடவடிக்கைகளையும், பேரணிகளையும், அதனால் ஏற்படும் ஜாதிக் கலவரங்களையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும், ஓட்டுக்காக இத்தகைய நிகழ்ச்சிகளில் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற்பதையும் கண்டித்தே வந்துள்ளோம். இதில் எந்த தயக்கமும் மறைப்பும் இல்லை.
கேள்வி 4: பிராமணன் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?
பதில் 4 : முதலில் நாங்கள் பூணூல் அறுக்கவில்லை. எனவே, எங்களிடம் இக்கேள்வியைக் கேட்பதே அயோக்கியத்தனம். எனினும் இக்கேள்விக்கு எம் பதில்.
பூணூலை அறுத்தவர்கள் ஏன் சிலுவையை அறுக்கவில்லை, தொப்பியை, தலைப்பாகையை அகற்றவில்லை என்பது அர்த்தமில்லை, அறியாமையின்பாற்பட்ட கேள்வி.
தொப்பியும், சிலுவையும், தலைப்பாகையும் மற்றவர்களை இழிவுபடுத்தவில்லை. பூணூல் மற்றவர்கள் இழிமக்கள், சூத்திரர்கள் என்று அறிவிக்கும் அடையாளமாகவும், தான் மட்டுமே உயர்பிறப்பாளன் என்று கூறுவதாயும் இருப்பதால் பாதிக்கப்படுவோர், இழிவுபடுத்தப்படுவோரில், உணர்ச்சி வசப்படும் ஒரு சிலரின் எதிர்வினை இது. எதிர்வினை வரக்கூடாது என்றால், மாற்றாரை மட்டப்படுத்தும் இழிவுபடுத்தும் பூணூலை அவர்களே கழற்றி, மனிதர்களைச் சமமாக மதிப்பதே சரியான தீர்வு.
தொடர்ச்சி : http://manjaivasanthan.blogspot.in/2015/09/2.html
- மஞ்சை வசந்தன் https://www.facebook.com/manjaivasanthan
தொடர்ச்சி : http://manjaivasanthan.blogspot.in/2015/09/2.html