உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, October 31, 2014

'அந்த' ஐந்து நிமிடங்கள் சந்தோஷம்......படிக்க தவறாதீர்கள் பெண்கள் ஒதுக்க வேண்டிய பதிவு அல்ல..
'அந்த' ஐந்து நிமிடங்கள் சந்தோஷம்......படிக்க தவறாதீர்கள் பெண்கள் ஒதுக்க வேண்டிய பதிவு அல்ல..
பார்க்கின் மர ஒரத்தில் இருந்த பெஞ்சில், ஒரு ஒரமாக ஒரு பெண்ணும் அதன் மறு ஒரத்தில் ஒரு ஆணும் அமர்ந்து, தன் குழந்தைகள் விளையாடுவதை பார்த்து மகிழந்து கொண்டிருந்தனர். ஒரு சமயத்தில் அந்த இருவரின் கண்களும் ஓன்றை ஒன்று சந்தித்து கொண்டன. அவர்கள் இருவரும் புன்னகைத்து கொண்டனர். அப்போது அந்த பெண் அதோ அந்த ரெட்கலர் சட்டை போட்டு விளையாடுகிறானே அவன்தான் என் பையன் என்று சுட்டிகாட்டினாள். அந்த ஆணோ உங்கள் பையன் ரொம்ப ஹேண்ட்சம்மாக இருக்கிறான் என்று சொல்லியவாறே அதோ அந்த ஒயிட் கலர் கவுன் போட்டு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறாளே அவள்தான் என் தேவதை என்று சொன்னார். அதற்கு அந்த பெண் உங்கள் குழந்தை ரொம்ப க்யூட்டாக இருக்கிறது என்று சொன்னார்.


அதன் பின் இருவரும் அமைதியாக குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தன் கைக்கடிகாரத்தை பார்த்த அந்த ஆள், தன் குழந்தையை நோக்கி செல்லகுட்டி விட்டிற்கு செல்ல நேரமாகிவிட்டது வா போகலாம். என்றார். அந்த குழந்தையோ அப்பா இன்னும் ஐந்து நிமிஷமப்பா என்றது. உடனே அவரும் ஒகே என்று சொன்னார் .


ஐந்து நிமிடம் கழிந்ததும் கூப்பிட்ட போது, இன்னும் ஒரு ஐந்து நிமிஷமப்பா என்றது. அவரும் ஒகே இதற்கு மேல் கேட்ககூடாது என்றார்.


இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அந்த பெண், சார் உங்களுக்கு மிகவும் ரொம்ப பொறுமை இருக்கிறது என்று பாராட்டினார்.


அதற்கு அவர் சொன்னார். கடந்த வருடம் என் மகன் இதே மாதிரி இங்கே விளையாடி கொண்டிருந்தான். அப்போது இப்படியெல்லாம் பொறுமையாக நான் டைம் செலவழித்தது கிடையாது. அன்று நான் அவசரப்படுத்தி என் மகனை வீட்டிற்கு அழைத்து சென்றேன். அப்படி அவனை நான் அவசரமாக அழைத்து சென்ற போது போகும் வழியில் லாரி வந்து அவன் மீது மோதி அடித்து சென்றது. அப்போது நான் அவன் கூட ஐந்து நிமிடம் செலவழித்து இருந்ததால் அப்படி நேர்ந்து இருக்காது அல்லவா?


அந்த நிமிடம் நான் இனிமேல் இப்படி நடக்க மாட்டேன் என்று உறுதி எடுத்தேன். அதன் காரணமாகத்தான் என் மகள் ஐந்து நிமிடம் விளையாடி சந்தோஷம் அடைகிறாள். ஆனால் உண்மையில் பார்க்க போனால் நான் தான் அந்த ஐந்து நிமிடமும் அவள் விளையாடுவதை பார்த்து சந்தோசம் கொள்கிறேன்.

 
மக்காஸ் : வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழிக்க வேண்டும் அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்.


நான் ஆங்கிலத்தில் படித்த கதையை நான் என் வழியில் வழங்கி இருக்கிறேன். நல்ல செய்தி நாலு பேரை அடைய வேண்டும் என்பதால்தான் இதை வழங்குகிறேன்

Moral: Life is all about making priorities, and family is one and only priority on top of all other, so spend all time you can with loved ones


அன்புடன்
மதுரைத்தமிழன்
இது ஒரு மறுபதிப்பு. படிக்காதவர்கள் படிக்கவே..

36 comments :

 1. இவ்வளவு நல்ல செய்திக்கு தலைப்பை அழகாக்கியிருக்கலாமே... ஏதோ வில்லங்கமோன்னு யோசிக்க வாய்ப்பிருக்குது...

  ReplyDelete
  Replies
  1. தலைப்பு நன்றாக இருந்தால் நாலுபேருதான் வந்து படிப்பாங்க ஆனால் இப்படி இருந்தா 1000 2000 பேரு நிச்சயம் வருவாங்க.. அப்படி வருங்க தலையில் இப்படி நல்ல கருத்தை ஏறச் செய்வதுதான் எனது நோக்கம்.
   மருந்து கசக்கதான் செய்யும் அதனால் நல்ல பலன் கிடைக்கதானே செய்கிறது

   Delete
  2. உங்களுடைய நோக்கம் அருமை.

   Delete
 2. நெத்தி அடி தமிழா... அருமையான கருது பதிவு.... அட்டகாசம் போங்க..

  ReplyDelete
  Replies
  1. கலிபோர்னியா தலைவரே பாராட்டுக்கு நன்றி

   Delete
 3. உண்மை அன்பரே...

  அது மட்டுமல்ல. வாழ்க்கையை அதன் போக்கிலே அனுபவிக்க கற்றுக் கொள்கிறவன்தான் வாழ்க்கையை வென்றவனாக எப்போதும் மகிழ்வுடன் இருக்கக் கற்றுக் கொள்கிறான்.

  நீங்கள் சொன்ன அய்ந்து நிமிடங்களுக்கும் மேல் இதில் சாராம்சம் இருக்கிறது. பிள்ளையின் வேண்டுதல். இது போலத்தான் நமது விருப்பங்களையும் மீறி நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கையில் குறைந்த பட்சம் அந்த மகிழ்ச்சியாவது மிஞ்சும்.

  நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பெயர் வேண்டுமானால் வெட்டிப்பேச்சாக இருக்கலாம் ஆனால் நீங்கள் சொன்ன கருத்து மிக நல்ல கருத்து பாராட்டுகள் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   Delete
 4. //1000 2000 பேரு நிச்சயம் வருவாங்க//

  பதிவுகளுக்கு அத்தனை பேரு வர்ராங்களா....?

  ReplyDelete
  Replies
  1. தரும் சார் உங்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே

   பதிவர் தருமியின் கேள்விக்கு மதுரைத்தமிழனின் பதில்கள். http://avargal-unmaigal.blogspot.com/2014/11/overview-hits-status.html

   Delete
 5. Replies
  1. உங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிகவும் நன்றி

   Delete
 6. வண்ணக் கை கொண்டு
  வாவென அழைக்கிறது...மழலை...
  ஐந்து நிமிடங்கள்...
  ஐம்பதில் சுவைநினைவுக் கரும்புகள்

  கொடுத்து வைக்காதோர் - வேலையென
  குறைப் பட்டுக் கொள்ளாமல்
  கொடுங்கள் ஐந்து நிமிடங்கள் - இன்றே
  கொண்டாட்டம் தான் திங்கள்.

  நல்ல கதையை தமிழில் வழங்கியமைக்கு நன்றி சகோ.

  நன்றி
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  ReplyDelete
  Replies
  1. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழகான கவிதையால் கருத்து சொன்ன உங்களுக்கு எனது நன்றிகள்

   Delete
 7. சிறப்பான கருத்துள்ள பதிவு! எது எதற்கோ நேரம் ஒதுக்குபவர்கள் குடும்பத்திற்கும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும் உண்மைதான்! நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்

   Delete
 8. Replies
  1. யப்பா வழிப் போக்கா உமக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ஆமாம் என்றால் சொல் உன் மனைவிக்கு டிரைனிங்க் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். நான் மட்டுமே எவ்வளவு நாள் அடிவாங்கி கொண்டே இருப்பது எனக்கும் சிஷ்யர்கள் வேண்டாம்மா என்ன

   Delete
 9. சிறந்த வழிகாட்டல்
  தொடருங்கள்

  ReplyDelete
 10. FANTABULOUS !!!! .மிக மிக அருமையான பகிர்வு .குடும்பத்துடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு பொக்கிஷம் தான் !!
  பெற்றோர்கள் அனைவருமே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று ..

  ReplyDelete
  Replies
  1. பல பேர் பொக்கிஷத்தை தொலைத்த பிந்தான் அதன அருமையை உணர ஆரம்பிக்கிறார்கள்

   Delete
 11. கதையும் சொன்ன விதமும் அருமை.கதையின் நிறைவு வரிகள் அனுபவித்து எழுதப்பட்டது போல் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உணர்ந்து எழுதியது...

   Delete
 12. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு பதிவு! நடைமுறையில் அதை உணர்ந்து இதைக் கடைபிடிக்கவும் வேண்டும். அருமை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே

   Delete
 13. Replies
  1. வசிஷ்டரின் வாயால் வாழ்த்து பெறுவது போல இருக்கிறது நன்றி ஜோதிஜி

   Delete
 14. மிகவும் சிறப்பான பகிர்வு...
  வாழ்த்துக்கள் சகோதரா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 15. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 16. கருத்துள்ள பதிவு மதுரைத் தமிழன்.....

  ஆங்கிலத்தில் படித்ததை உங்கள் பாணியில் கொடுத்தது நன்று.

  ReplyDelete
 17. குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கிறதை விட்டுட்டு, இப்படி என்னோட பதிவை எல்லாம் படிச்சு, கருத்தெல்லாம் போட்டு நேரத்தை வீனடிக்காதேன்னு சொல்றீங்க. புரியுது.... புரியுது...

  ReplyDelete
 18. அருமையான கதை சகோ எழுதிய விதமும் நன்றாக உள்ளது அசத்துங்கள் அசத்துங்கள் சகோ வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 19. கதையின் கரு அருமை! தலைப்பு கண்டு சற்று ஒதுங்கினேன்! என்றாலும் உங்கள் மீது ஒரு நம்பிக்கை!
  வந்தேன்! மறுமொழி தந்தேன்!

  ReplyDelete
 20. மனசைத் தொட்ட பதிவு.

  இனிய பாராட்டுகள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog