உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, November 24, 2013

மதுரைத்தமிழனின் நகைச்சுவை கேள்வி பதில்கள்!!!

மதுரைத்தமிழனின் நகைச்சுவை கேள்வி பதில்கள்!!!


நான் எழுதும் அரசியல் கேள்வி பதில்களில் & பதிவுகளில் காரம் மிக அதிகமாக இருப்பதாக நட்புகள் சொன்னதால் ஒரு மாறுதலுக்காக இந்த நகைச்சுவை கேள்வி பதில்கள்
பெண்கள் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?
கணவனை சமைக்க சொல்லுவதை நிறுத்திவிட்டு பெண்கள் தானே சமைத்து அதை உண்ண வேண்டும் அதை செய்வீங்களா

ஆண்கள் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?
மனைவி சமைப்பதை மட்டும் சாப்பிட்டு வந்தால் தன்னாலேயே எடை குறைந்து விடும்.

திருமணமான பின்னும் கிச்சனுக்குள் பெண்கள் செல்வது சரியா?

தன் காலில் தானே நிற்கும், தன்மை' பெண்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும்! கல்யாணமான பின்னும், கிச்சனில் சமைத்தால் அவர்களது சுதந்திரத்திற்கு மட்டும் நலமல்ல அவர்களது உடலுக்கும் நல்லது

இது என் மனைவிக்கு எதிராக நான் போட்ட "உள்குத்து பதிவு" என்று சொல்லி பூரிக்கட்டைக்கு வேலைதர வேண்டாம். எங்க வீட்டு பூரிக்கட்டைக்கு வாய் இருந்தாலும் அழுதுவிடும் அதனால் சக பதிவர்களான ராஜி,சசி, உஷா அன்பரசு, அருணா செல்வம்.அபய அருணா அவர்கள் அமைதி காத்து பூரிக்கட்டைக்கு வேலை வைக்க வழி செய்ய வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

கிழ்கண்ட கேள்விகளை என்னிடம் எந்த பதிவாளர்கள் யார் கேட்டு இருப்பார்கள் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? ( ராஜி, சசி, உஷா, அன்பரசு, அருணா செல்வம், அபய அருணா, சீனு,
வீட்டை சுத்தம் செய்யும் உங்கள் மனைவிக்கு உதவுவீர்களா?
அவள் வீட்டை பெருக்கும் போது நான் உட்கார்ந்து இருக்கும் சோபா அருகில் பெருக்கும் போது நான் எனது காலை தூக்கி சோபா மேல் வைத்து அவள் பெருக்கி விட்டு செல்லும் வரை கிழே காலை போடாமல் உதவுவேன்

கல்யாண ரிஷப்ஷன் பங்க்ஷனில் ஆடிக் கொண்டிருக்கும் ஆண்களில் யார் கல்யாணம் ஆன ஆண் யார் ஆகாத ஆண் என்று எப்படி கண்டுபிடிப்பது?

எந்த ஒரு ஆண் ஒரே ஒரு பெண்ணுடன் மட்டும் ஆடிக் கொண்டிருந்தால் அவன் கலியாணம் செய்யாத ஆண் என்றும் எந்தவொரு ஆண் ஒரே பெண்ணைத் ( மனைவியைத் ) தவிர மற்ற பெண்களுடன் ஆடிக் கொண்டிருந்தால் அவன் கலியாணம் செய்த ஆண் என்று அறியலாம்.

சந்தோஷமான தம்பதிகளாக இருக்க உங்கள் அறிவுரை என்ன?

காது கேளாத கணவனும் கண்ணு தெரியாத பெண்ணும்தான் மிக சந்தோஷமான ஆதர்ஷ தம்பதிகளாக இருக்க முடியும்

பெண்கள் வாக்குவாதம் செய்யாமல் இருப்பார்களா?
ஆமாம் அவர்கள் தூங்கும் போது வாக்குவாதம் செய்வதில்லை


ஹலோ மதுரைத்தமிழா உங்க மனைவியிடம் நீங்க பூரிக்கட்டையால் அடி வாங்கியதை எப்படி கெளரமாக மற்றவர்களிடம் சொல்லுவிர்கள்?

என் மனைவியின் கையில் இருந்த பூரிக்கட்டையை பார்த்ததும் எனக்கு மிகவும் கோபம் வந்ததால் என் தலையால் அவள் கையில் இருந்த பூரிக்கட்டை மீது வேகமாக தாக்கினேன் என்று சொல்லுவேன்


உங்கள் மனைவி என்ன வேலை பார்த்தால் உலகப் புகழ் பெற்று இருக்க முடியும் என நினைக்கிறீர்கள்?
அவள் அமெரிக்க விண்வெளிதளமான நாசாவில் வேலை பார்த்தால் உலகப் புகழ் பெற்று இருப்பாள் காரணம் அவள் ஏயும் செயற்கைகோள் (பூரிக்கட்டை) எங்கேயும் வழி தவறாமல் சந்திரனை ( என் தலையில் ) அடைவதால்தான் சொல்லுகிறேன்

உங்க மனைவியை நாங்கதான் கடத்தி வெச்சிருக்கோம். நீங்க பத்து லட்ச ரூபாய் கொடுத்தால்
விட்டு விடுவோம் என்று சொன்னால் உங்கள் பதில் என்னவா இருக்கும்?

கொஞ்ச நேரம் கழிச்சு அவ இம்சை தாங்க முடியாம நீங்களே விடப் போறீங்க.

குரங்குக்கு படிக்க தெரியுமா?

இப்போது இந்த கேள்வி பதிலை படித்து கொண்டிருப்பது அதுதானே

எல்லா கேள்விகளுக்கும் நானே பதில் சொன்ன நல்லா இருக்காது அதுதனால் கிழ்கண்ட கேள்விக்கு வாசகர்கள் பதில் எழுதலாம்.

குரங்குக்கு எழுத தெரியுமா?

இதற்கான பதிலை பின்னுட்டத்தில் சொல்லிச் செல்லவும்

அன்புடன்
மதுரைத்தமிழன்.

36 comments :

 1. வணக்கம்

  நல்ல வினாக்கள் அதற்கான பதிலும் எம்மை சிரிக்கவைத்து விட்டது... அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. என் மனைவி பதிவுகளை படிக்காவிட்டால் நானும் இவ்வாறு பல பதிவுகளை எழுதுவேன். ஒருநாள் அவர்கள் உங்கள் பதிவுகளை மொத்தமாக படிக்கும் போது நீங்கள் வாங்கும் அடி இடி உதை இந்தியா வரை கேட்கும். ஹிஹிஹி......

  ReplyDelete
  Replies
  1. என் மனைவி என்றும் இதைப்படிக்கமாட்டாள் என்று நம்பிக்கை உண்டு.. நம்பிக்கைதான் வாழ்வுங்க..

   வுட்டா நீங்களே என் மனைவிகிட்ட போட்டு கொடுத்துடுவீங்க போல இருக்கே...

   Delete
 3. நகைச்சுவை பதில்கள் ரசித்தேன்....

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி வெங்க்ட்

   Delete
 4. ha... ha... ha... kadaisi kelvi sooper! atharkana answer neengal ethirparpathu than varum. boorikattai-yai thalaiyal nagarthiya vitham arumai!

  ReplyDelete
  Replies
  1. கிழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டவில்லை என்று சொல்வது இப்படிதாங்க

   Delete
 5. குரங்குக்கு எழுத தெரியுமா!?
  >>
  இந்த பதிவை எழுதியது யார்ன்னு நினைக்குறீங்க!?

  ReplyDelete
  Replies
  1. கடைசியில நான் கேட்டது என்னைப்பற்றி அல்ல. ஹீ.ஹீ. என்னப்பற்றியே நான் கேட்கமாட்டேன்ல.

   நான் வைச்சது டெஸ்ட் அதற்கு நிறைய குரங்குகள் பதில் எழுதி இருக்கின்றன...ஹீ.ஹீ.ஹீ

   Delete
 6. முதல் ரெண்டு பதிலும் ரொம்ப சரிதான்... நானே சமைச்சி சாப்பிடறதால நான் பீப்பாய் மாதிரி ஆகலை.. அதே மாதிரி என் சமையலை தின்னு தொலைக்கிறதால் அவரும் எடை ஏறலை...! இல்ல..இல்ல... எடையே இல்லாம இருக்கார்.... ஹா... ஹா... பாவமோ பாவம்!

  பணிவு, அன்பு உடன் எல்லாம் கேட்டுக்கிட்டா... விட்டுற முடியாது... உங்க வீட்ல போட்டு குடுக்க கூடாதுன்னா அதுக்கு ஒரு தொகையை நீங்க போ.போ (போனா போவுது) சங்கத்துக்கு அனுப்பி வைக்கனும்.. !

  19756329715821879102583 பூரிக்கட்டைகளால் வீடு கட்டி' மதுரை தமிழன்''..கின்னஸ் ரெகார்டில் இடம் பிடித்திருக்கிறார். இந்த சாதனையை செய்ய அவர் மனைவி பெரிதும் உதவியதாக பெருமையுடன் கூறி கொண்டு இந்த மகத்தான பணியை செய்ய தூண்டு கோளாக இருந்த ராஜி, சசி, அருணாசெல்வம்,அபயா அருணா மற்றும் உஷா அவர்களுக்கு தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.

  குரங்குக்கு எழுத தெரியுமா? உங்க பதிவை படிக்கிறவங்களுக்கு அதுல டவுட்டே இல்ல பாஸ்... ! ஹா.. ஹா...

  ReplyDelete
  Replies
  1. நான் பூரிக்கட்டையை வைச்சு வூடு கட்டின மாதிரி நீங்க என் கிட்ட மிரட்டி பணம் சம்பாதித்தே வூடுகட்டிரூவிங்க போல இருக்கே

   Delete
  2. நீங்க சொன்ன பதிலில் இருந்தே வேலுரிலும் ஒரு குரங்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஹீ.ஹீ

   Delete
 7. குரங்குக்கு எழுத தெரியுமா?
  தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. அப்ப நீங்க பள்ளிக்கு செல்லாத குரங்கா?

   Delete
 8. வீட்டை சுத்தம் செய்யும் போது உங்கள் மனைவி எவ்வாறு உதவுவார்கள்?
  அவள் இருக்கும் சோபாவின் அருகில் பெருக்கி முடிக்கும் வரை கால்களை சோபாவின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு உதவுவாள்.

  ReplyDelete
  Replies
  1. உட மாட்டீங்களே எங்க வீட்டுல என்ன நடக்கதுன்னு ஆராய்ந்து உண்மையை எழுதாட்டீ உங்களுக்கு தூக்கம் வராதா என்ன?

   Delete
 9. //எங்கள் வீட்டுப் பூரிக்கட்டைக்கு வாய் இருந்தால் அழுதுவிடும்//

  என் வீட்டுக்காரியிடம் சொன்னேன். கையிலிருந்த பூரிக்கட்டை நழுவ விழுந்து விழுந்து சிரித்தார்.

  ReplyDelete
  Replies
  1. பாத்தீங்களா என் பதிவினால் நீங்க அடி வாங்குவதில் இருந்து தப்பிட்டிங்க எப்படி எல்லாம் பலன் என் பதிவினால் ஹீ.ஹீ.ஹீ

   Delete
 10. குரங்குக்கு படிக்கத் தெரியுமா? அதான் நாங்கதானு !!!!சொல்லிட்டிங்கள்ல....அப்போ குரங்குக்கு எழுதத் தெரியுமா? என்றால் அது யாராக இருக்கும்...மதுரைத்தமிழன்தானாகிய நீங்கதான்!!!!! ஆனா குரங்கைப் படித்து ஆராய்வது யார்? மனுஷங்கதானே?!!! அப்போ நாங்க யார்?!!!!!!! (discovery, animal planet எல்லாம் பார்ப்போம்ல!!!) ஹா! ஹா! த.மா. +1 போட்டாச்சு!!

  ReplyDelete
  Replies
  1. குரங்கை ஆராய்வது மனுசந்தான் ஆனா நீங்க என் சகோதானே அப்ப நீங்களும் மனுசந்தான்

   Delete
 11. கேள்வி பதில் சூப்பர்.
  குரங்குக்கு கேள்வி கேட்கவும் தெரியும்ம் பதில் சொல்லவும் தெரியும்

  ReplyDelete
  Replies
  1. பதில் சொன்னதற்கு நன்றி முரளி...ஹீஹீ

   Delete
 12. Replies
  1. மத்தவங்க மாதிரி பதில் சொல்லாம சூப்பரா எஸ்கேப் ஆகிட்டிங்க போல இருக்கே

   Delete
 13. குரங்குக்கு எழுத தெரியுமா?

  ஒரு குரங்கே இப்படி எழுதி கேட்டால்
  மனிதர்கள் நாங்கள் என்ன பதில் சொல்வது?

  ReplyDelete
  Replies
  1. இந்த காலத்தில் குரங்குக்கே எழுதப்படிக்க தெரிஞ்சு இருக்குது ஆனா மனுஷங்களுக்கு பதில் சொல்ல கூட தெரியலை அதனால் மனிதனைவிட குரங்கே சிறந்தது ஹீ.ஹீ

   Delete
 14. நகைச்சுவை கேள்வி பதில்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 15. அமெரிக்கா போனாலும் தங்கள் சுற்றத்தாரின்
  கல்வி அறிவு மற்றும் எழுத்து அறிவு பற்றி கவலைப் படும் தங்களுக்கு ஏன் பரிசாக ஒரு 10 பூ ......டை
  அனுப்பக்கூடாது ?
  பி.கு :
  கண்ட கண்ட கற்பனைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல .
  பூக்கூடை பூவாடை (பூ போட்ட சட்டை)பூ மேடை கூட"பூ "வில் ஆரம்பித்து
  "டை" யில் முடியும் தமிழ் வார்த்தைகள் .

  ReplyDelete
  Replies
  1. எனது சுற்றமும் நட்பும் நீங்கள்தானே....அதனால் நீங்கள் சொன்னதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்

   Delete
 16. விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது உங்கள் பதிவு.... எனக்கு எழுதத்தெரியாது... ஹிஹி.....

  ReplyDelete
  Replies
  1. மரத்திற்கு மரம்தாவினால் பார்த்து தாவனும் இல்லையென்றால் இப்படிதான் விழனும்.. நீங்க குட்டிப் போல அதனாலதான் அனுபவம் இல்லாம வூழுகிறீங்க போல இருக்கு

   Delete
 17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 18. மிகவும் ரசித்துப் படித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog