உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, November 16, 2013

கேள்வி ஒன்று பதில் இரண்டு ஆனால் உடைந்தது பல்லு முப்பத்திரெண்டு??!!!கேள்வி ஒன்று பதில் இரண்டு ஆனால் உடைந்தது பல்லு முப்பத்திரெண்டு??!!!


மதுரைத்தமிழனின் குழந்தை, மதுரைத்தமிழனிடம் போய்  "அப்பா அப்பா மனிதகுலம் எப்படி தோன்றி வளர்ந்தது பெருகியது" என்று கேட்டது. அதற்கு அந்த மதுரைத்தமிழன்.
  கடவுள் ஆடம் ஈவ் என்ற இரண்டு  பேரை இந்த உலகில் தோற்றுவித்தார் அதன் பின் அவர்கள் குழந்தைகளை பெற்று எடுத்தனர். அந்த குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களும் பெற்று  எடுத்தனர். இப்படியே மனிதகுலம் பெருகி வந்ததது என்று சொன்னார்

அந்த குழந்தை அதே கேள்வியை தன் தாயிடம் போய் கேட்டது அதற்கு நாம் குரங்கில் இருந்தது வந்தவர்கள் அதாவது குரங்காக பிறந்து பரிணாம வளர்ச்சியில்தான் மனிதகுலம் தோன்றியது என்று சொன்னார்

உடனே அந்த குழந்தை தந்தையிடம் போய் அம்மா சொன்னதை சொல்லி அப்பா நீ என் கிட்ட பொய் சொல்லிட்ட என்று குறை கூறினாள்.

அதற்கு மதுரைத்தமிழன் தன் குழ்ந்தையிடம் இல்லைடா கண்ணம்மா அம்மா சொன்னது அவள் குடும்பம் எப்படி வந்தது என்பது பற்றியதுடா இது மற்ற குடும்பங்களுக்கு பொருந்தாது..


அதற்கு அப்புறம் மதுரைதமிழனுக்கு என்ன நேர்ந்தது என்ன என்று நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன????


டிஸ்கி : மதுரைதமிழனை பார்க்க ஹாஸ்பிடலுக்கு பழங்கள் பூக்கள் வாங்கி வந்து பார்க்க முடியாதவர்கள் அதற்கான பணத்தை அவரது பேங்க் அக்கவுண்டில் செலுத்தி விடவும்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments :

 1. இன்னும் விதம் விதமாக வாங்கிக் கட்டிக் கொள்ள வாழ்த்துகள். ஒரு பல் செட் பார்சல்

  ReplyDelete
  Replies
  1. புதுசு புதுசா வேட்டி சட்டை வாங்கி கட்டிக் கொள்வது போல நல்லா வாங்கி கட்டிக் கொள்ளுங்களேன் என்று வாழ்த்துகிறீர்கள். வாழ்த்துவது எளிது நண்பரே ஆனால் வாங்கி கட்டிக் கொள்ளுகிறவனுக்குதானே அதன் அருமை தெரியும்... ஆமாம் தங்கத்தில் செய்த பல் செட்டைதானே வாங்கி அனுப்பி இருக்கிறீர்கள்

   Delete
 2. என் பேங்க் அக்கவுண்டில் பணமெல்லாம் இல்லை.

  நீங்கள் விரைவில் குணமடைய மானசீகமாகக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அரசியல் தலைவர்கள் சுவிஸ் பேங்கில் பணம் இல்லை என்று சொல்லுவதை போல நீங்களும் பணம் இல்லை என்று சொல்லிதப்பிக்காதீர்கள் நண்பரே

   Delete
 3. மெய் காக்க பொய் சொல்லி மொய் ..........ok ok I will not proceed further

  ReplyDelete
  Replies
  1. மொய் எழுத வந்துவிட்டு எழுதாம போவது தப்புங்க.....

   Delete
 4. ”அவங்க” குணம்தான் தெரியுதுல்ல! அப்புறம் எதுக்கு வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிறீங்க!?

  ReplyDelete
  Replies
  1. அவங்க அவங்க குணத்தை மாத்திக்கமாட்டாங்கன்னா நாம் ஏன் நம்ம குணத்தை மாத்திகிணும்

   Delete
 5. சில சமயம் பொய்களும் interesting உள்ளது

  ReplyDelete
  Replies
  1. மற்றவர்களை பாதிக்காமல் சந்தோஷப்படுத்துற பொய்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

   Delete
 6. இப்படியே மாசம் பூரா ஹார்லிக்ஸ் , பூஸ்ட்டுன்னு வாங்கிட்டு போய் இவங்களை பார்க்கறதுக்குறதுக்குள்ள என் அக்கவுண்ட்தான் காலியாகுது... அதனால் இது மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்கு இனிமே நிதி திரட்டலாம்னு இருக்கேன்.... அதனால் பொது மக்களே நிவாரண நிதி அளிக்க விரும்பறவங்க என் அக்கவுண்ட்டுக்கே போடுங்க....!

  ஆமா உங்களுக்கு பழம் சரி... பூ எதுக்கு ? காதுல சுத்தி விடவா? ஹா... ஹா...!

  ReplyDelete
  Replies
  1. ஒருத்தன் தன் அனுதாப கதையை சொல்லி நாலு பணம் சம்பாதிக்கலாமுன்னு பாத்தா இப்படியா ஆளு ஆளுக்கு அக்கவுண்ட் நம்பரை போட்டு பணம் குறுக்கு வழியில சம்பாதிக்க பாக்கிறீங்க....


   பூவை காதுல சுத்துறது இந்தியா வழக்கம் இங்கே அதை அன்பை வெளிப்படுத்த தருவாங்க

   Delete
 7. எல்லாரும் ஆளாளுக்கு பேங்க் அக்கவுண்டுக்கு போடு போடுன்னு
  சொல்லறீங்களே தவிர அக்கவுண்டு நம்பர் தரவேணாமா?
  நான் என் அக்கவுண்டு நம்பர் தரேன் .போடுங்க .
  என் கமிஷன் போக (100%மட்டுமே) மிச்சத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தரேன்
  அக்கவுண்டு நம்பர் 123456789 ஒன்பது டிஜிட்டு இருக்கு. KALVAADI BANK
  களவாடி என்று படிக்க வேண்டாம்
  சூரைப்பட்டணம் கிளை

  ReplyDelete
  Replies
  1. நிறைய போலி ஏஜண்டுக்கள் இப்படி கிளம்பிட்டாங்க ..மக்களே ஜாக்கிரதை.

   Delete
 8. Replies
  1. என்ன நம்பளை மாதிரி ஒரு ஜீவன் இங்க இருக்குறது தெரிஞ்சுச்சா என்ன

   Delete
 9. வணக்கம்

  பகிர்வு அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. பல்லெல்லாம் போயிடுச்சா.....!
  சூப்பர்.

  ReplyDelete
  Replies

  1. உங்களுக்கு இப்ப நல்ல சந்தோஷம்தானே.....உங்க சந்தோஷத்தல உங்க வீட்டுல இருக்கிற எங்க அண்ணனை ஒன்றும் பண்ணிடாதீங்க

   Delete
 11. நேற்றுதான் ஒரு மில்லியன் கிடைத்தது. அதுக்குள்ளே யார் கண் பட்டதோ தெரியவில்லை...
  32 பல்லும் போயிடுச்சே!
  வீட்டம்மணிய நல்லா சுத்தி போட சொல்லும்!
  (நல்லா கேட்டுக்குங்க சுத்திதான் போடச்சொன்னேன்... சுத்தியலாலே அல்ல)

  ReplyDelete
  Replies
  1. யோவ் சத்தம் போட்டு சொல்லாதய்யா....

   Delete
 12. ஏனய்யா இந்த விபரீத வேலை உமக்கு! வடி கொடுத்து அடி வாங்கிக் கொள்வதே உமக்கு வேலையாகப் போயிற்று!

  அது சரி இப்ப விழுந்த பல் 32ம் செட் பல் தானே... பல தடவை விழுந்து விழுந்து மீண்டும் கட்டிக் கொண்டதாக நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து செய்தி வந்தது!

  படம் ரசித்தேன்! :)

  ReplyDelete
 13. நான் மொய்யெல்லாம் செய்யிறதுமில்ல,வாங்குறதுமில்லங்க, ஆஸ்பத்திரிக்கு போனா,பழங்கள்,ஆர்லிக்ஸ் வாங்கி கொடுப்போமுங்க, போக முடியாட்டி பார்க்க போறவங்க கிட்ட கொடுத்தனுப்போமுங்க, இப்ப யாருட்ட கொடுத்தனுப்பறதுன்னு யோசன பன்னிகிட்டு இருக்கேனுங்க,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog