Wednesday, July 31, 2024

 நாமும் வரிசையில் நிற்கிறோம். அது எந்த வரிசை என்பது தெரியுமா?

 




ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறார்கள் . அப்படிச் செல்பவர்களின் வரிசையில் அறியாமல்  நாமும் இருக்கிறோம்.
நமக்கு முன்னால் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. நாம் வரிசையின்  பின்புறம் செல்லவும் முடியாது.  நாம் வரிசையை விட்டு வெளியேறவும் முடியாது. வரிசையில் நிற்பதைத்  தவிர்க்க முடியாது.

எனவே நீங்கள்  வரிசையில் காத்திருக்கும்போது -தருணங்களைக் கணக்கிடுங்கள்.

உங்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்குமான நேரத்தை ஒதுக்குங்கள்
அன்பை வெளிப்படுத்துங்கள்
நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இரக்கத்தைக் காட்டுங்கள்
முடிந்தவரை அடுத்தவர்களுக்கு  உதவி செய்யுங்கள்
அதுவும் நாலு பேருக்குத் தெரியாமல் அமைதியாகச் செய்யுங்கள்
அடுத்தவரைப் புன்னகைக்கச் செய்யுங்கள்
மாற்றம் செய்யுங்கள்.
காதல் செய்யுங்கள்
உங்கள் உறவுகள் நேசிக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எந்த வருத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. எனக்கு ஒவ்வொரு கணமும் நினைவு இருக்கிறது தமிழரே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.