எதையும் தள்ளிப் போடாதீர்கள். பின்னர் என்பது "ஒருபோதும் இல்லை" என்று மாறிவிடும்.
https://youtu.be/-9fOVsNUxMM
- நான் உன்னிடம் பிறகு பேசுகிறேன்
- நான் உன்னை பிறகு அழைக்கிறேன்.
- நான் உன்னை பிறகு சந்திக்கின்றேன்
- நான் உனக்குப் பிறகு சொல்கிறேன்.
- நான் உனக்குப் பிறகு வாங்கித் தருகின்றேன்
- நாம் பிறகு சேர்ந்து நடந்து செல்வோம்
இப்படி நாம் எல்லாவற்றையும் பின்னர் பின்னர் என்று விட்டுவிடுகிறோம்,
ஆனால் "பின்னர்" நமக்குச் சொந்தமானது அல்ல
என்பதை மறந்துவிடுகிறோம்.
பின்னர், நம் அன்புக்குரியவர்கள் நம்முடன் இல்லாமல் போய்விடுவார்கள்
பின்னாளில் நாம் அவர்களைப் பார்க்க முடியாமல்
அவர்களின் பேச்சைக் கேட்க முடியாமல் போய்விடும்.
பின்னாளில் அவர்களின் பேச்சுக்கள் ,பார்வைகள்,
அணைப்புகள், உறவுகள் எல்லாம் வெறும் நினைவுகளாக மட்டும் மாறும்.
பின்னர், பகல் இரவாக மாறும், எந்த உறவும் உதவியற்றதாக மாறிவிடும்.
புன்னகை கூட இறுக்கமான முகமாக மாறிவிடும்.
வாழ்க்கையும் மரணமாகிவிடும்.
"பின்னர்" என்பது "ஒருபோதும் இல்லை என்று" ஆகிவிடும்.
அதனால் எதையும் பிறகு என்று தள்ளிப் போடாதீர்கள்..
உடனடியாக செய்துவிடுங்கள்..
அது தாய்க்கு, தந்தைக்கு, கணவனிற்கு ,மனைவிக்குப்
பிள்ளைகளுக்குச் சகோதர சகோதரிகளுக்கு
நண்பர்களுக்கு இப்படி
நம் வாழ்வில் பங்கு பெறும் எல்லோரிடமும்
பேச நினைப்பதைச் சொல்ல விரும்புவதைக்
கொடுக்க விரும்புவதை அல்லது வாங்க விரும்புவதை
எல்லாம் அப்போதே செய்துவிடுங்கள்
பின்னர் இதைச் செய்யலாம் என்று மட்டும் நினைத்துத் தள்ளி வைத்து விடாதீர்கள்...
கொரோனாவிற்கு அப்புறம் ஒருவன்
எவ்வளவு காலம் அதிகமாக வாழ்வான் என்று
யாராலும் சொல்ல முடியாமல் இருக்கிறது.
யாருக்கும் சாவு எந்த நொடியிலும் வரும்.
அதை இப்போது தினம் தோறும்
கண் கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பிறகு என்று தள்ளிப் போட்டவைகளை எல்லாம் இப்போதே செய்து விடுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.