Tuesday, July 23, 2024

 பெரியார் எவ்வளவு சொல்லியும் ,  ஜெயமோகன் எவ்வளவு எழுதியும் பிரயோஜனம் இல்ல ராசா..

புத்தகம் வெளியிட்டு விழாவிற்கும் ,புத்தக விமர்சனக் கூட்டத்திற்கும் வித்தியாசம் கொஞ்ச கூட தெரியப் பயல்கள் எல்லாம் ஜெயமோகனின் சீடனாகத்தான் இருக்கமுடியும் . செல்வேந்திரனும் அதில் ஒருவன்தான் போல ...அதனால்தான் முதன் முதலில் கதைகள் எழுதி புத்தகமாக்கி அதை வெளியிட்ட சவீதா என்ற பெண் இந்த செல்வேந்திரனையும் அழைத்து இருக்கிறார்...

அங்குப் பேசிய அவர் சபை நாகரீகம் என்பது கொஞ்சம் கூட தெரியாமல் பேசி இருக்கிறார். எப்படிச் செத்தவன் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கப் போகிறவன் செத்தவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் , அவனைப் பற்றி நாலு நல்ல வார்த்தைகள் மட்டும் சொல்லிவிட்டு வருவார்கள் .அதுதான் உலக மரபு.

அது மாதிரிதான் ஒரு புத்தக வெளியிட்டு விழாவிற்கு அழைத்தால் ,அந்த புத்தகத்தில் உள்ள பாசிடிவான விஷயங்களையும் , எழுதியவரைப் பற்றிய பாசிடிவான விஷயங்களையும் பேசிவிட்டு வர வேண்டும். புத்தகத்தில் குறை இருந்தால் எழுதியவரிடம் தனிப்பட்ட முறையில் விலாவாரியாக எடுத்துச் சொல்லி, அடுத்த புத்தகம் எழுதினால் அது எப்படி வர வேண்டும் என்று சொல்லி அறிவுரை வழங்க வேண்டும்... இது கூட தெரியாத ஜென்மங்கள் என்னாதான் இலக்கியம் படித்தாலும் ஒரு மயிருக்கும் பிரயோஜனம் இல்லை..


கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன் இவனுக்குக் கல்யாணம் ஆகி , முதல் இரவு நடந்து அடுத்த நாள் காலையில் புதுப் பெண்ணிடம் மாமியார், வீட்டுப் பெரியவர்கள் இருக்கும் போது இரவு எப்படிம்மா இருந்தது என்று கேட்டால் அந்த பெண் வெட்கப்பட்டு நல்லா இருந்தது என்று  சொல்லி அங்கிருந்து சென்று விடும்..  ஆனால் "செல்வேந்திரன் மாதிரி ரொம்ப இலக்கியம் படித்த பெண்ணாக இருந்தால்" மாப்பிள்ளை நல்லாதான் இருக்கிறார் .ஆனால் பெர்பாமென்ஸ்தான் சரியில்லை... அவரை தொட்ட சில நொடியிலே படுத்துவிட்டார்... என்று விமர்சனம் செய்து,  இதை அவரின் நல்லதிற்க்காகத்தான் சொல்லுறேன். அவர் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று பொது வெளியில் சொல்லி இருந்தால், இந்த மாப்பிள்ளை செல்வேந்திரன் நிலை  என்னாவாக இருக்கும்...


இலக்கியம் படிப்பதை விட அறம் சார்ந்த நூல்களை செல்வேந்திரன்  வாசிக்க வேண்டும்

ஹும்ம்ம்


https://www.youtube.com/watch?v=E4SUlHOzGzU

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.