Thursday, May 26, 2022

எங்க நாடு நல்ல நாடு (அமெரிக்கா) ஆனால் என்ன தொடரும் துப்பாக்கி சூடும் உயிர்பலியும்

 

@avargal unmaigal
டெக்சாஸின் உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களை 18 வயது இளைஞன் துப்பாக்கியால்  சுட்டுக் கொன்றுவிட்டான். இவன் தனது பாட்டியை முகத்தில் சுட்டுவிட்டு, டெக்சாஸின் உவால்டேயில் உள்ள ராப் எலிமெண்டரிக்கு தப்பிச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக இங்குள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அது மட்டுமல்ல இவன் 40 நிமிடங்களுக்கு மேலாக இந்த பள்ளியில் இருந்து இந்த கொடூர நிகழ்வை நிகழ்த்தி இருக்கிறான் என்ற போதிலும் விரைவாக காவல்துறை சென்று செயலாற்றவில்லை என்று நேரில் பார்த்த சாட்சியங்கள் சொல்லுகின்றன..


இப்படி அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச் சூடு என்பது தமிழகத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் போலத்தான். அது தெரியவரும் போது ஊடகங்களில் சத்தம் அதிகமாகத்தான் இருக்கும் அதன் பின் அது வேற பிரச்சனைகளைத் தேடிச் சென்றுவிடும்.. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் ஒரு நரக வேதனைதான்

இப்படி ஒரு நிகழ்வு நடந்த பின் இங்குள்ள தலைவர்கள் எப்போதும் சொல்வது My Thoughts and Prayers’ என்ற     Sympathy Message ம் அதனுடன் துப்பாக்கி வைத்திருக்கக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று சொல்லி அதைப் பற்றி விவாதிப்பார்கள் .அதன் பின் துப்பாக்கி விற்பனை செய்வோர் சங்கத்திடம் இருந்து அரசியல் செய்யப் பணம் பெற்றுக் கொண்டு அமைதியாகிவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக இங்கு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

 

@avargalunmaigal


எனக்கு என்னவொரு ஆச்சிரியம் என்றால், இந்த இளைஞன் எப்படி பள்ளிக் கூடத்திற்குள் மிக எளிதாகச் சென்று இருக்கிறான் என்பதுதான். நான் வசிக்கும் மாநிலத்தில் (நீயூஜெர்சியில் ) நல்ல பாதுகாப்பாக அதுவும் 15 வருடங்களுக்கு முன்னாலே இருந்து வருகிறது .இப்படி பள்ளிக் கூடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்த பல இடங்களுக்கு அப்புறமும் இந்த பள்ளிக் கூடத்தில் அவ்வளவு பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டது எப்படி அன்பது ஆச்சிரியம்.

 
@avargal unmaigal


என் குழந்தை இப்போது கல்லூரிக்குச் செல்கிறாள். அவள் இப்படித் தொடக்கப்பள்ளிக்குச் செல்லும் போது அவளைப் பள்ளிக் கூடத்தில் விடும் வேளையில் எப்போதும் அங்குப் பள்ளி செக்யூரிட்டி மற்றும் டீச்சர்கள் நின்று இருப்பதோடு, ஒன்றோ இரண்டோ காவல் அதிகாரிகள் அங்கு எப்போதுமே அலர்ட்டாக இருப்பதுண்டு. அதுமட்டுமல்ல இங்குள்ள பள்ளி கூடங்களுக்கு மிக அருகில்தான் அந்த ஊரின் காவல் நிலையமும் இருக்கும். அதுமட்டும்ல்ல பொது நூலகமும் இருக்கும்.. பள்ளிக் கூடம் முடிந்த பின் பல குழந்தைகள் நூலகம் செல்வதால் அங்கு போலீஸ் இருக்கும்.


பள்ளி நேரத்தில் பள்ளிக்கூடம் சென்று பிள்ளையை ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பார்க்கச் சென்றால், பள்ளி வாயிலில் உள்ள காலிங்க் பெல்லை அடித்துவிட்டு, அதன் பின் அங்குள்ள செக்யூரிட்டி அதிகாரியிடம் நாம் இண்டர்காமில் பேசி நாம் வந்து இருப்பதன் காரணத்தைச் சொன்னால் அதை வெரிஃபை பண்ணி ,அதன் பின் கதவை திற்ந்துவிடுவார்கள் .அதன் பின் உள்ளே சென்று நமது ஐடியை காண்பித்து அதனைப் பதிந்து கொண்டபின் ,நாம் வந்திருக்கும் தகவலை அங்குள்ள பள்ளி அலுவலக அதிகாரியிடம் சொன்ன பிறகு, அந்த அதிகாரி வகுப்பில் இருக்கும் டீச்சருக்கு தகவல் சொன்ன பின் நாம் சந்திக்கவிருக்கும் குழந்தையை இன்னொரு அலுவலர் அழைத்து வருவார் .அப்படி அழைத்து வருபவர் அந்த குழந்தையிடம் நம்மைக் காட்டி தூரத்திலிருந்தே அது யார் என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டபின்னரே  அதன் பிறகுதான் நம்ம்பிடம் அனுப்புவார்கள்.. இது தொடக்கப் பள்ளியில் மட்டுமல்ல மேல்நிலைப் பள்ளி வரை இதே நிலைமைதான், வகுப்பு நடக்கும் நேரங்களில் எல்லா களாஸ் ரூமும் டோர் லாக் செய்து இருக்கும் ,அதுமட்டுமல்ல அங்கு இருக்கும் ஹாலில் செக்க்யூரிட்டி அதிகாரிகள் வலம் வந்து கொண்டிருப்பார்கள் எப்போதும். சில குழந்தைகள் வகுப்பு நேரத்தில் பாத்ரூம் செல்லும் போது இவர்கள் கண்ணிலிருந்து தப்பவே முடியாது.. அப்படிப் பாதுகாப்பாக இங்கு இருக்கும் சூழ்நிலையில் டெக்ஸாஸ் போன்ற மாநிலத்தில் அதுவும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்து இருக்கும் நிலையில் பாதுகாப்பு அதிகம் இல்லாமல் இருந்தது எப்படி என்றுதான் எனக்குக் கேள்வி எழுகிறது ஆச்ச்சிரியமுட்டுகிறது,


  
@avargalunmaigal


இப்படி ஒரு சம்பவம் நடக்கும் போது உலகமெங்கும் எழும் சத்தம் என்பது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுமட்டுமே என்னைப் பொருத்த வரையில் அதுமட்டும் போதாது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இன்றைய கால கட்டங்களில் பல குழந்தைகள் மன நலம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி கவனித்து வழி நடத்த யாருக்கும் நேரம் இல்லாததால்தான் இப்படிப்பட்ட பல சம்பவங்கள் நடை பெறுகின்றது என்பதுதான் என் கருத்து

இன்றைய காலகட்டங்களில் பலர் இணையத்தில் பேசிக் கொள்வதோடு சரி நேரில் பார்த்துப் பேசிப் பழகிக் கொள்வதில்லை .இணையத்தில் வரும் எல்லோரும் மற்றவர்கள் பதிவிடும் செய்திகளை பார்த்து அவர்கள் மிகவும் சந்தோஷமாகவும் நல்ல வாழ்க்கையை வாழ்வதாக நினைத்துக் கொண்டு  தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறார்கள் .அப்படி இருக்கும் இவர்களும் தாங்கள் சந்தோஷமாக இருப்பதாகப் பல பதிவிட்டுக் கொண்டாலும் ஒரு வித குற்ற உணர்வுடன் மனதைக் குழப்பிக் கொள்கிறார்கள். இப்படி இருப்பதுதான் இந்த சமுதாயத்திற்கு மிகவும் கேடு அதன் விளைவே இளைஞர் முதல் முதியவர்கள் வரை நடத்தும் துப்பாக்கிச் சூடு, கொலை ,கொள்ளை, மற்றும் கற்பழிப்புகள்
  
 
@avargal unmaigal


இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு வரும்  வரை .இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். நாமும் அரசாங்கத்தை குற்றம் சொல்லிக் கொண்டு பதிவுகளில் மிக வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டிருப்போம் அல்லது நம் வீட்டில் உள்ளவர்கள் பாதிக்கப்படும போது கண்ணீர் விட்டுக் கொண்டிருப்போம் அவ்வளவுதான் விசயம்

 
@avargal unmaigal


எனக்கு விடுமுறை கொடுத்து என்னைச்  சந்தோஷப்படுத்திய அமெரிக்க நிறுவனம்

 

அன்புடன்
மதுரைத்தமிழன்5 comments:

 1. கருத்து போக வேண்டுமே!!!

  உண்மைதான் மதுரை. எனக்கும் ஆச்சரியம் இருந்தது பள்ளி எப்படி பாதுகாப்பில்லாமல் இருந்தது என்று. பெற்றோர் பிள்ளைகள் பற்றி சொல்லியது டிட்டோ...

  வழக்கமாகச் சொல்லும் வார்த்தைகளைத் தவிர்த்து உண்மையான தீர்வு வர வேண்டும். அரசாங்கம் துப்பாக்கி வணிகத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்...பெற்றோர் பிள்ளைகள் உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இரண்டும் முக்கியம். என்றாலும் அந்தப் பையன் செய்தது ரொம்பவே வேதனையான விஷயம்தான். இத்தனைக்கும் படங்களில் வில்லன் தான் செய்யப் போவதை முன்னாலேயே க்ளூ கொடுப்பது போல அவனும் கொடுத்திருக்கிறானே...!!

  கீதா

  ReplyDelete
 2. கட்டுப்பாடு கொண்டு வரலாம் என்றாலும் அதற்கு எதிர்ப்பு இருக்கிறதாமே... கொடுமையான நிகழ்வுகள்.

  ReplyDelete
 3. வேதனையான நிகழ்வு. மீண்டும் மீண்டும் நடப்பதும் அதிகமாக வேதனை அளிக்கிறது.

  ReplyDelete
 4. மிகவும் மனவருத்தம் தரும் செயல் . தொடர்வதுதான் கொடுமை.

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.