Saturday, May 14, 2022

 

@avargalunmaigal

இந்தியக் கோதுமை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டமும்  ஏழைகளுக்கான பிரதமரின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு விழுந்த பெருத்த அடியும்

நாட்டில் எழும் பிரச்சனைகள் காரணமாக ஒரு  அத்தியாவச பொருளுக்கு தட்டுப்பாடு எழும் என்ற சூழ்நிலை வரும் போது ஒரு நல்ல குடும்பத் தலைவன் அதை வாங்கி ஸ்டாக் வைத்து குடும்பத்திற்கு அதனால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்..  ஒரு குடும்பத் தலைவனை அப்படி நினைத்து  இப்படிச் செயல்படும் போது ஒரு நாட்டை ஆளும்  நல்ல தலைவன் என்ன செய்து இருக்க வேண்டும்? அவன் நல்ல தலைவனாக இருந்தால் வரும் முன் காக்கும் செயலில் இறங்கி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்... ஆனால் நமக்கு அதாவது இந்தியாவிற்கு வாய்த்த தலைவரோ அப்படிச் செய்து இருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்து இருந்தால் நீங்கள் வடிகட்டிய முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்.

நம்மை ஆளும் தலைவருக்குக்கோ மக்களின் பஞ்சம்~பற்றாக்குறையை விட  அவருக்கு வேண்டிய முதலாளிகளுக்கு லாபமும் மற்றும் அரசுக்கும் அந்நிய செலாவணியும் அதற்கு ஏற்றுமதியும்தான் எப்போதும் முக்கியம்.

இதன்படி  இந்தியக் கோதுமை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்டு அடித்த அதே சமயத்தில், பிரதமர் கரிப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY  இதை ஆங்கிலத்தில் எல்லா மக்களுக்கும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால்  Prime Minister's Food Security Scheme for the Poor என்றும் தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ஏழைகளுக்கான பிரதமரின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் )கோதுமைக்கான ஒதுக்கீட்டில் மிகப் பெருத்த சரிவு ஏற்பட்டும் அதற்குக் கிடைக்கும் கோதுமையின் அளவு குறைந்திருக்கிறது.


இந்திய அரசு, நாட்டின் கோதுமை உற்பத்தி மதிப்பீட்டை 2022-23 நிதியாண்டில் 111 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து (எம்எம்டி) 105 மிமீ டன்னாகக் குறைத்துள்ளது. புதுதில்லியில் மே 4-ஆம் தேதி நடைபெற்ற உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டேவின் செய்தியாளர் சந்திப்பில் இது அறிவிக்கப்பட்டது. இது மே 4 ம் தேதிதான் ஊடகங்களுக்குச் சொல்லி இருக்கிறார். ஆனால் குறைந்த உற்பத்தி மற்றும் கொள்முதல் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரின் காரணமாக இந்தியக் கோதுமைக்கான அதிக உலகளாவிய தேவை இந்த தகவல்களை முன்பே தெரிந்து கொண்ட வியாபார பெரும் புள்ளிகள் பல ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் போட்டு வெகு வேகமாக ஏற்றுமதி செய்து செய்து லாபத்தை அள்ளி சம்பாதித்து இருக்கிறார்கள். விவசாயிகளும் அரசாங்க கொள் முதல் நிலையங்களுக்கு தங்கள் கோதுமையை விற்காமல் வெளிச் சந்தையில் அரசாங்கம் நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்று இருக்கிறார்கள் அதை வாங்கிய வியாபார புள்ளிகள் அதை வெளிநாடுகளுக்கு மேலும் அதிகவிலை வைத்து ஏற்றுமதி செய்துவிட்டார்கள்


மும்பை (மகாராஷ்டிரா) மற்றும் காண்ட்லா (குஜராத்) துறைமுகங்களில், இந்திய விவசாயிகளிடம் இருந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-க்கு உள்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்ட கோதுமை, 330-335 அமெரிக்க டாலர்களுக்கு (ரூ. 25,424 - ரூ. 25,810) ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரியம்), இது முந்தைய ஆண்டின் விலையான 260-270 US$ (ரூ. 20,031 - ரூ. 20,802) எஃப்ஓபியை விட 27 சதவீதம் அதிகமாகும். இந்தத் தகவலை புனேவைச் சேர்ந்த சிவாஜி ரோலர் மாவு ஆலையின் நிர்வாக இயக்குநர் அஜய் கோயல் காவ்ன்  பகிர்ந்து கொண்டார்.


தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் வெப்ப அலைகளின் ஆரம்ப வருகையால் இந்தியாவில் கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது பெரும் லாபத்தில் இருக்கும் கோதுமை ஏற்றுமதியாளர்களுக்குப் பயனளித்ததாகத் தெரிகிறது. ஆனால்,  உணவு உரிமை நிபுணர்கள், அரசின் உணவு தானியத் திட்டத்தைச் சார்ந்திருக்கும் ஏழைகளின் உணவுப் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.


இந்நிலையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா (பிஎம்ஜிகேஒய்) திட்டத்தின் கீழ் தானியங்களின் மறு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. மே 4 செய்தியாளர் சந்திப்பின் போது, ​​உணவுத்துறை செயலாளர் பாண்டே, மத்திய திட்டத்தின் கீழ் கோதுமைக்குப் பதிலாக 5.5 மிமீ டன் கூடுதல் அரிசி ஒதுக்கப்படும் என மறு ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கிடையில், உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு மத்திய திட்டத்தின் கீழ் இலவச கோதுமை இனி கிடைக்காது என்று சொல்லுகிறார்கள்

பிரதமர் நரேந்திர மோடி, கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, ஏழைகளுக்கான உணவு தானியங்களின்  பொது விநியோகமாக மார்ச் 2020 இல் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவைத் தொடங்கினார். ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு ஐந்து கிலோ கிராம் (கிலோ) கோதுமை அல்லது அரிசி மற்றும் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ இலவச முழு சனாவுடன் மாதம் ஒன்றுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு இந்த ஆண்டு செப்டம்பர் வரை செல்லுபடியாகும் என்ற போதிலும் அதில் பெருத்த அடி  சரிவு ஏற்பட்டதால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்லுகிறார்கள்.


ஒடிசாவை தளமாகக் கொண்ட உணவு உரிமை ஆர்வலர் சமீத் பாண்டா, 199.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் (UP) போன்ற மாநிலத்தில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் கோதுமையைப் பூஜ்ஜியமாக ஒதுக்குவது சிக்கலை உருவாக்கும் என்று குறிப்பிட்டார். "உ.பி. போன்ற மாநிலத்தில், கோதுமை பிரதான உணவின் ஒரு பகுதியாகும். இது முதன்மையாக ரொட்டி உட்கொள்ளும் மாநிலமாகும்,

இவ்வளவு விஷயங்கள் நடந்து இருந்தாலும் நம் தலைவர் ஒன்றுமே நடக்காதது மாதிரி இருந்து விட்டு இப்போதுதான்  தான் தூக்கத்திலிருந்து எழுந்த பின் செய்தி அறிந்த  மாதிரி நடித்து இப்போது கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்து இருக்கிறார்..



இப்படிப்பட்ட தேச தலைவர்தான் மீண்டும் மூன்றாவது முறையாகப் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று சங்கிகளும் மோடி ஆதரவாளர்களும் விரும்புகிறார்கள்.. அவர்கள் மட்டும் அல்ல நானும் மோடியின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.. அதுதான் இந்திய மக்களுக்குக் கிடைக்கும் நல்ல பாடம் என நான் நினைக்கிறேன். குழந்தைகளிடம் தீயில் கை வைத்து விடாதே என்று அடிக்கடி எச்சரிக்கைதான் விட முடியும் அப்படியும் அவர்கள் கேட்கவில்லை என்றால் தீயில் விட்டுப் பார் அதன் பின் தானாகவே அறிந்து கொள்ளட்டும் என்ற மனநிலைதான் எனக்கும் .அதனால்தான் சொல்லுகின்றேன் மோடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் அதைப் பார்த்து நான் மகிழ வேண்டும். ஜெய்ஹிந்த்


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. மயிலுக்கு உணவு அளிப்பதே முக்கியம்...! அதையும் இங்குள்ள புல்லறிவாளர்கள் மாய்ந்து மாய்ந்து பாராட்டுகிறார்கள்...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.