Sunday, May 1, 2022

 

@avargal unmaigal

பாய் வீட்டிலிருந்து பிரியாணி வரவில்லையென்றால் என்ன?

பாய் வீட்டிலிருந்து பிரியாணி வரவில்லையே என்று நினைப்பவர்களே..... எல்லாப் பாய்மார்களுக்கும் பிரியாணி செய்யும் அளவிற்கு வசதிகள் இருப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. அவர்களும் மோடி ஆளும் தேசத்தில்தான் வாழ்கிறார்கள்,  முடிந்தால் நீங்கள் பிரியாணி செய்தோ அல்லது உணவகங்களில்  வாங்கியோ அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை அவர்களின் பண்டிகை நாட்களில் நீங்கள் சந்தோஷப்படுத்தலாமே

கொரோனோவால் அவர்களின் வேலைகளும் வருமானமும், இந்துத்துவாவாதிகளின் செயல்பாடுகளால் அவர்கள் செய்யும் தொழிலில் பெரும் நஷ்டமும்  அவர்களுக்கு ஏற்பட்டுத்தானே இருக்கிறது. பாய்யை உங்கள் சகோதரனாக நீங்கள் கருதினால் அவர்களின் பண்டிகை நாட்களில் நீங்களும் அவர்களுக்கு கை கொடுத்து உதவலாம்தானே

வாழ்க சகோதரத்துவம் வளர்க மனித நேயம்


இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஏதோ ஒரு சிறுபிரிவினர் வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள் என்பதற்க்காக நாம் பதிலுக்கு அப்படியே செய்யாமல் அன்பை விதையுங்கள் அது நிச்சயம் பெருகி பலனளிக்கும் அதை இஸ்லாமியர்களின் கடமையாக கொண்டு செயல்படுங்கள்

இஸ்லாமிய அன்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்
 



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. ஈத் பெருநாள் வாழ்த்துகள்.  பிரியாணி தேவை இல்லை.  நினைவில் வைத்திருந்தால் போதும்.

    ReplyDelete
  2. எல்லோருக்கும் ரம்ஜான் தின வாழ்துகள், மதுரை சகோ

    கீதா

    ReplyDelete
  3. மனித குல விரோதி இந்துத்துவா...

    ReplyDelete
  4. உண்மைதான். எத்தனை பேருக்குத்தான் கொடுக்க முடியும்? சூழ்நிலை உணர்தல் நன்று
    இனிய ரமலான் வாழ்த்துகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.