Sunday, May 22, 2022

 பெரியாரின் சிந்தனைக்கும் செயலுக்கும் பேரறிவாளனுக்கும் என்ன சம்பந்தம்? 

 

@avargal unmaigal

 
@avargal unmaigal


 
@avarhal unmaigal



பெரியாரின் சிந்தனைக்கும் செயலுக்கும் பேரறிவாளனுக்கும் என்ன சம்பந்தம். இன்று பெரியார் வாழ்ந்து இன்றைய பெரியார் இயக்கத்தின் செயல்களை பார்த்தால் பெரியார் இவங்களுக்கு போய் நாம் சீர்த்திருத்தம் பற்றி பாடம் எடுத்தோமே என்று நினைத்து தற்கொலை செய்து கொண்டிருப்பார்

மக்கள் : ஏய்யா பெட்ரோல் விலையேத்துறீங்க?

பக்தால்ஸ் : மத்திய அரசுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இல்லை. உலக எண்ணெய் மார்க்கெட் நிலவரங்களை  பொருத்து எண்ணெய் நிறுவனங்கள் தான் அதன் விலையை முடிவு செய்யும்.

மக்கள் : அப்ப விலை குறைவிற்கு காரணம் அந்த உலக எண்ணெய் மார்கெட்டும் அதனை வாங்கி விற்கும் எண்ணெய் நிறுவனங்கள் மட்டும்தானே காரணமாக இருக்க முடியும்

பக்தால்ஸ் :உங்களுக்கு சரியாக புரியலைன்னு நினைக்கிறேன் எண்னெய்விலை கூட்டுவதற்கு நீங்கள் சொன்ன காரணங்கள் சரியாக இருக்கலாம். ஆனால் எண்ணெய் விலையை குறைக்க மோடி அரசால் மட்டுமே முடியும்


இந்தியாவின் இன்றைய & முன்னாள் பிரதமர்களைப் பார்க்கும் போது அவர்கள் படித்தவராக இருந்தாலும் படிக்காமலிருந்தாலும் இருவரும் சுயபுத்தியின் படி செயல்படாமல் சொல் புத்தி கேட்டுச் செயல்படும் பிரதமராகவே இருக்கிறார்கள் இருந்து வந்து இருக்கிறார்கள். படித்த மன்மோகன் சிங் சோனியாவின் சொல் கேட்டுத் தலையாட்டிக் கொண்டு இருந்தார் படிக்காத மோடி R.S.S இயக்க தலைமையின் சொல் கேட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி இல்லாமல் எந்த ஒரு பிரதமர் சுயபுத்தியைக் கொண்டு ஆட்சி செய்வாரோ அன்று மட்டும்தான் இந்தியா வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும்



செய்தி : தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிபடி பெட் ரோல் விலையை குறைக்கவில்லை என்றால் கோட்டை முன்பு போராட்டம் நடத்துவோம்.- அண்ணாமலை பாஜக தமிழக தலைவர்.

அண்ணாமலை நாங்க விலைகுறைக்க ரெடி ஆனால்  நீங்கள் மதுரையில் கட்டி தருவதாக சொன்ன எய்மஸ் மருத்துவமணை திறந்த பின் நிச்சயம் நாங்கள் அந்த விலை குறைப்பை கண்டிப்பாக செய்வோம் அதனால் உங்கள் போராட்டத்தை டெல்லியில் உள்ள கோட்டை முன்பு நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்


கோட்டை முன் தமிழக அரசு பிரியாணியை அன்று இலவசமாக வினியோகித்தால் வந்த கூட்டம் சந்தோஷமாக முதல்வருக்கு நன்றி சொல்லிவிட்டு கலைந்துவிடும்

அந்த காலத்தில் பாட்டி வடை சுட்ட கதையை கேட்டு வளர்ந்தவர்கள் இந்த காலத்தில் மோடி வாயில் வடை சுடுவதை கேட்டு கொண்டிருக்கிறார்கள்,

ஒரு மதத்திற்காக ஒரு தேசத்தை அழிப்பது வொர்த்தா என்று மக்கள் என்று சிந்தித்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் இந்தியாவின் வளர்ச்சி தொடங்கும்



இலங்கை இனத்தால் பிரிக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டது. அது இப்போது பொருளாதாரத்தால் இணைந்து பிரித்தாள்பவர்களுக்கு எதிராகப் போராடித் தூக்கி எறிந்ததை நாம் இன்று கண்கூடாக காண்கிறோம். அது போல இப்போது மதத்தால் பிரிக்கப்பட்டு நாசம் செய்யப்படும் இந்தியா இலங்கை போலப் பொருளாதாரத்தால் நாசமாக்கியவர்களைத் தூக்கி ஏறியும் நாள் ஒன்று வந்தே தீரும்.  அது இயற்கை அதில் மாற்றம் ஏதும் இருக்காது


அகண்ட பாரத கனவை மோடியும், அவர் சார்ந்த  ஆர்.எஸ்,எஸ் இயக்கமும் கனவு கண்டு கொள்ளும் நேரத்தில் இருக்கும் பாரதத்தின் ஒரு சிறு பகுதியைச் சீனாவிற்குப் பறி கொடுத்து ,அதில் சீனர்கள் கட்டிய வீடுளையும் பாலங்களையும் பார்க்க இயலாமல் இருக்கிறார்கள் இப்படித்தான் பகல் கனவு கண்டு இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்


மோடிஜி 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பதாகத் தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தார். இப்பத்தான சைனீஸ் 2 வில்லேஜ்ஜையும் 2 பாலங்களையும் கட்டி இருக்கின்றனர். இன்னும் 98 சிட்டிகளுக்காக சைனீஸ் ஏப்ப இடம் பிடிக்கிறது சிட்டியை உருவாகுவது. அடேய் சைனீஸ்காரர்களா சீக்கிரம் கட்டி  முடித்து மோடிஜி சொன்ன வாக்கை காப்பாத்துங்கடா

ஒரு முட்டாள் பேசும்போது, ​​மிகவும் கவனமாகக் கேளுங்கள். ஏனென்றால் முட்டாளிடம் கேட்பது முக்கியம். ஏனென்றால், எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவதும், என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவதும் முக்கியம்.


இன்றையக் காலகட்டத்தில் பேசும் பொருளாக இருக்கும் அனைத்து கட்சியையும் அதனைச் சார்ந்த கட்சி தலைவர்களையும் கலாய்த்து  நையாண்டி செய்து இங்கு கருத்துக்கள் பதியப்படும். படித்து ரசிக்க வருகை தாருங்கள்

வலைத்தள முகவரி https://avargal-unmaigal.blogspot.com/
பேஸ்புக் முகவரி :https://www.facebook.com/avargal.unmaigal/
டிவிட்டர் முகவரி : https://twitter.com/maduraitamilguy

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. பலமுறை தடை செய்யப்பட்ட இயக்கம்... இன்றைய நாட்டின் நிலை :

    மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
    கையொன்று உடைமை பெறின்

    ReplyDelete
  2. ஏற்கனவே அருணாச்சல பிரதேசம் (தானே?) எங்களுடையது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சீனர்கள்.  இன்னும் என்னென்ன தொல்லை தருவார்களோ..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.