Saturday, May 7, 2022

 

@avargal unmaigal

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது முக்கியமா?


பெரும்பாலான மக்கள்  தங்களுக்கு ஏற்படும் தோல்வியைக் கண்டு பயப்படுவதில்லை ஆனால் அவர்களின் தோல்விக்கு மற்றவர்களின் எதிர்வினைகளைப் பற்றிப் பயப்படுகிறார்கள். அதாவது தமக்கு ஏற்படும் தோல்வியை  மற்றவர்கள் பார்த்து அதை வைத்து தம்மை என்ன மாதிரி எடை போடுவார்கள் என்று நினைத்துத்தான் மிக அதிக கவலையோ அல்லது பயமோ கொள்கிறார்கள்..



அப்படிக் கவலைப்படாமல் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கவனிப்பதை நிறுத்துவதே வாழ்க்கையின் முக்கிய பாடங்களில் ஒன்றாகும்.  அதை நாம்  செய்யத் தொடங்கினால்,   நம் வாழ்வில் அற்புதமான விஷயங்கள் நடக்கும்


அது மட்டுமல்ல மக்கள் தோல்விக்குப் பயப்பட மாட்டார்கள்,  அவர்களின் ஆசிரியரோ அல்லது தலைவரோ அவர்களுக்குத் தோல்வியிலிருந்து நிறையபாடம் கற்றுக் கொள்ளலாம் அதன் மூலம் மீண்டும் அவர்கள் பெற்றி பெறலாம் என்று கற்றுக் கொடுத்தால் ஆனால் அப்படி கற்றுக் கொடுக்க இன்றைய கால கட்டத்தில் நல்ல ஆசிரியரோ அல்லது தலைவரோ இல்லை என்பதுதான் இன்றைய காலப் பிரச்சனை



தோல்வியை நாம் மிக எளிதாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை எல்லையற்றதாக அழகாக மாறிவிடும் தோல்விக்குப் பயந்து முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயற்சி செய்து தோல்வி அடைந்தால் நாம் நிச்சயம் பெருமை அடைய வேண்டும் என்ற மனப்பான்மை வர வேண்டும்.. அப்போதுதான் நாம் அடுத்த  நிலைக்குச் செல்ல முடியும்

எந்தவொன்றிலும் தோல்வியடையாமல் வாழ்வது சாத்தியமில்லை, நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக வாழ்ந்தால் தவிர, நீங்கள் வாழ்ந்திருக்க மாட்டீர்கள் - இந்த விஷயத்தில், நீங்கள் இயல்பாகவே தோல்வியடைகிறீர்கள்.



வித்தியாசமான விஷயம் என்னவென்றால், கற்றுக் கொள்ளும்போது தோல்வி எப்போதும் சாத்தியமாகும்.  அதனால் நாம் மாற்றி யோசித்துப் பார்த்தால்  நாம் அடைந்த  தோல்வியால் நாம் குறைந்தபட்சமாவது  வெற்று பெற  முயற்சி செய்கிறோம் என்பதை உணரலாம்

 
மீண்டும் ஒரு முறை சொல்லுகின்றேன் நாம் தோல்வி அடைவதால் பயப்படுவதில்லை கவலைப்படுவதில்லை... நம் தோல்வியை மற்றவர்கள்  அறிந்து கொள்ளாவார்கள் என்பதும், அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதும்தான் நம் பிரச்சனை. மற்றவர்கள் என்ன நினைத்தால் நமக்கு என்ன?

நீங்கள் தோல்வி அடைந்தால் ஏளனமாக பார்ப்பார்கள் அல்லது சிரிப்பார்கள்... ஆனால் இன்றைய கால கட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றால் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் பொருமுவார்கள் பொறாமை கொள்வார்கள்...  அவ்வளவுதான் மேட்டர்


மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, ஏனென்றால் அவர்கள் உங்களுடன் வாழ வேண்டியதில்லை.

உங்களுடன் வாழ வேண்டிய ஒரே நபர் நீங்கள்தான். எனவே, நீங்கள் முடிவெடுக்கும் போது மற்றவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல்  உங்கள்  முடிவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்


இப்போது சொல்லுங்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது முக்கியமா அல்லது நாம் நினைத்ததை சாதிப்பது முக்கியமா?


அன்புடன்
மதுரைத்தமிழன்


07 May 2022

7 comments:

  1. தோல்வி, அவமானம், துன்பம் போன்றவற்றை சந்திக்காத மனிதன் இருக்க முடியாது... அது தான் வெற்றிக்கான படிக்கட்டுகள்... ஆனால் அந்த வெற்றியே முடிவு என்று நினைத்தவுடன் தொடங்குவது தோல்வி...!

    ReplyDelete
  2. சிறப்பான சிந்தனைகள்....

    ReplyDelete
  3. நல்ல கருத்துள்ள பதிவு.

    துளசிதரன்

    ReplyDelete
  4. என் மகன் எனக்கு அடிக்கடி வீட்டில் சொல்வது. நல்ல கருத்து. மற்றவர்கள் என்பது நாம் எடுக்கும் முடிவு அலல்து செயல் மற்றவர்களைப் பாதிக்காத வட்டத்தில் இருப்பவர்களாக இருந்தால் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று எடுத்துவிடலாம்தான்.

    நல்ல பதிவு

    கீதா

    ReplyDelete
  5. நல்ல வாழ்வியல் சிந்தனைகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.