Wednesday, May 18, 2022

 பேரறிவாளன் விடுதலை என்பது அவன் குற்றமற்றவன் என்பதால் விடுதலை ஆகவில்லை... அவன் குற்றவாளிதான் ஆனால் அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டான் என்பதால் கிடைத்த விடுதலையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.. அவரின் விடுதலை ஒன்றும் கொண்டாடப்படக் கூடிய ஒரு நிகழ்வு அல்ல.. அவரின் உறவான அவரின் அம்மாவிற்கு மட்டுமானால் அது கொண்டாடப்படக் கூடிய நிகழ்வாக இருக்கலாம்.

தண்டனைகள் என்பது மனிதன் திருந்தி வருவதற்காகத்தான். அவர் செய்த தவற்றுக்கான பாடங்களை அவர் சிறையிலிருந்த காலங்களில் நன்கு கற்று இருப்பார்  பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தொடர்புடையவராகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவரை நம் நாட்டின் சட்டம் மன்னித்திருக்கிறது. சட்டத்திற்குத் தண்டனை கொடுக்க மட்டுமல்ல மன்னிக்கவும் தெரியும் என்று நிரூபித்து இருக்கிறது...


இப்போது பேரறிவாளன் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் தனக்காகப் போராடிய அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்து விட்டு ஒரு புதிய வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க வேண்டியதுதான். அதைவிட்டு வீட்டு அதிகம் வாயைத் திறந்தால் எழும் பிரச்சனைகளுக்கு மீண்டும் இந்த சமுகம் அவருக்கு ஆதரவுதராது என்பதுதான் நிச்சயம்.


எது எப்படியோ இவரது விடுதலைக்காகப் பலர் போராடி இருக்கலாம் , இவர் விடுதலைக்குத் தீர்ப்பை நீதித்துறை வழங்கி இருக்கலாம் ஆனால் இதற்குத் தீர்ப்பு எழுதி முடிதுது வைத்த இந்தியப் பிரதமர் மோடிக்கு அவர் நன்றியுள்ளவனாக இருக்க  வேண்டும் . என்னைப் பொருத்தவரை மோடி எழுதிய தீர்ப்பை வாசித்தவர் நீதிபதிதானே தவிர ,நீதிபதி ஒன்றும் தீர்ப்புக் கூறவில்லை என்றே நான் கருதுகின்றேன்



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. இங்குள்ள சங்கி ஆளுநருக்கு தீடீரென தமிழ்ப் பற்று வருகிறது... என்னமோ நடக்கப்போகுது... மிக விரைவில் ஆபத்து...

    ReplyDelete
  2. வரும் நாடாளுமன்றத்தேர்தலில் திமுக சார்பிலோ மதிமுக சார்பிலோ ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து போட்டியிடக்கூடிய வாய்ப்பு கிட்டலாம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.