எனக்கு விடுமுறை கொடுத்து என்னைச் சந்தோஷப்படுத்திய அமெரிக்க நிறுவனம்
நான் வேலைபார்க்கும் அமெரிக்க நிறுவனம் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது .நான் #GOBackModi என்று தொடர்ந்து பதிவிட
இன்று நானும் சங்கியாகிவிட்டேன் அதனால் நானும் #GOBackModi என்று சொல்லுகிறேன்... என்னடா சங்கிகள் வெல்கம் பேக என்றுதானே சொல்லுவார்கள் இவன் என்னடா #GOBackModi என்று சொல்லுகிறான் என்று குழப்பம் அடைய வேண்டாம்.. நான் வரவேற்பு பேக என்று சொன்னால் மோடி அமெரிக்கா வந்துவிடுவார் அதனால்தான் மோடி தமிழகம் செல்லும் போது #GOBackModi என்று சொல்லுகிறேன்.. அதாவது அவர் மீண்டும் மீண்டும் தமிழகம் செல்ல வேண்டும் என்பதால் #GOBackModi என்று சொல்கிறேன் ஹீஹீ என்ன சொல்வது சரிதானே
சுமந்த ராமன் தனது வீட்டில் சொல்லுகிறார். பாஜக தலைவர் மோடி பிரச்சார உரைக்கு வரவில்லை. மாநில மக்களுக்காக பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி வருகிறார். இன்றைக்கு "GOBackModi என்று கூறுவதற்கு ஒருவர் முட்டாளாக இருக்க வேண்டும் என்று
மோடியால் தொடங்கப்படும் எந்த ஒரு புதிய ப்ராஜெக்ட் எல்லாம் மதுரையில் ஆரம்பித்த எய்ம்ஸ் ப்ராஜெக்ட் மாதிரிதான் என்பது சுமந்த ராமன் போல உள்ள படித்த முட்டாள்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன? அதனால் மோடிக்குச் சொல்கிறார்கள் #GOBackModi
ஸ்டாலின் என்னமோ #GOBackModi என்று ட்ரென்ட் செய்வது இது வரை திமுக கட்சி காரங்கள்தான் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்குக் கட்சிக்காரர்களையும் தாண்டி பொதுமக்கள்தான் மோடி மீது உள்ள வெறுப்பால் #GOBackModi ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.
மோடியால் தொடங்கப்படும் எந்த ஒரு புதிய ப்ராஜெக்ட் எல்லாம் மதுரையில் ஆரம்பித்த எய்ம்ஸ் ப்ராஜெக்ட் மாதிரிதான் என்பது தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன? அதனால் மோடிக்குச் சொல்வோம் #GOBackModi
தமிழகத்தில் இன்று பிறக்கும் குழந்தைகள் அழுவதிற்குப்பதிலாக #GOBackModi என்று கத்தியபடிதான் பிறக்குமாம் அதிகாரப் பூர்வ தகவல் சொல்லுகிறது ஹீஹீ
என்னடா ஜப்பானில் கூட #GOBackModi என்று சொல்லி எல்லாம் துரத்திவிட்டாங்களா ஏன் மோடியின் முகத்தில் இத்தனை சோகம்
தமிழ்மக்கள் இன்று வீட்டில் சுடுகிற தோசையில் கூட #GOBackModi யாம் தமிழர்களுக்கு எந்த அளவிற்கு மோடி மீது வெறுப்பு இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி
வழக்கமாக #GOBackModi என்று ட்ரென்ட் செய்யும் எண்ணிக்கையின் அளவை விட இந்த தடவை இன்னும் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே அதன் மூலம் மோடிக்கு மட்டுமல்ல ஸ்டாலின் அவர்களுக்கும் நினைவுபடுத்துவோம் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அரசியலுக்குத்தான் இடம் உண்டு அடிமை அரசுக்கு அல்ல என்று
மிஸ்டர் சுமந்த ராமன் மோடி வருவது அரசியல் பிரச்சாரத்திற்கு அல்ல என்றால் அவர் வரும் பாதை எல்லாம் ஏன் பாஜக கொடி பறக்கிறது. அங்கு இந்தியத் தேசியக் கொடி அல்லவா பறக்க வேண்டும் இப்போது முட்டாள் யார் என்று சொல்லுங்களேன்
##GOBackModi என்று எல்லாம் சொல்லவே வேண்டாம் மோடி ப்ளைட்டில் இருந்து கீழே இறங்கும் போது அவர் காதில் கேமிராமேன் எல்லாம் ப்ளைட் உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொன்னாலே போதும் மோடி ஆட்டோமேடிக்காக உள்ளே சென்றுவிடுவார் ஹீஹீ
மோடியை வரவேற்க ஊடகம் ஆட்களை அனுப்பி வைத்தாலே போதும் ப்ளைட்டில் வந்தவர் கீழே இறங்காமல் ஓ மை காட் என்று சொல்லிப் பறந்துவிடுவார்
இரண்டு நாளுக்கு முன்னால் தொலைப்பேசியில் ஹலோ சொல்வதற்குப் பதில் #ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டார்கள் இன்று தொலைப்பேசி பண்ணினாலே ஹலோ என்று சொல்வதற்குப் பதிலாக #GOBackModi என்று சொல்லுகிறார்கள். ஹும்ம் இந்த தமிழக மக்களை அந்த ஆண்டவனை வந்தாலும் திருத்த முடியாது
#GOBackModi என்று சொல்லாதவர்கள் வீட்டில் எத்தனை பேர் ரத்தம் கக்கிச் சாகப் போகங்களோ
தமிழகத்தில் தேர்தலின் போது தாமரை சின்னதிற்குப் பதில் #GOBackModi என்று வோட்டிங்க் மிஷினில் இருந்தால் பாஜக மிக எளிதில் எந்த வித ஒரு முயற்சி இல்லாமலும் அமோகமாக ஜெயித்து விடும்
கலாச்சார காவலர்கள் எங்கே சென்றார்கள் ?? இது கடவுளை இழிவுபடுத்துவது ஆகாதா ?சிவனை விட மோடி மகா பெரியவர் அதனால் சிவனே மோடியை வரவேற்கத் தெருவிற்கு வந்த கண்கொள்ளாக் காட்சி இது #GOBackModi
பல இண்டர்நேஷனல் பிரபல டிவிட்டர்கள் போட்ட பல ட்வீட்டுகளில் நான் சம்பந்தமில்லாமல் #GOBackModi என்று சத்தமில்லாமல் பதிவிட்டு வந்து இருக்கிறேன். அவர்களும் அது என்னவென்று தேவாலயம்ச் செய்து பார்க்கலாம் அப்ப நம்ம மோடியின் மகிமை அவர்களுக்கும் தெரியவரும் ஹீஹி நாம் இப்படித்தான் மோடியின் புகழ் பாடவேண்டும்
அதுமட்டுமல்ல மேலை நாடுகளுக்குச் சென்றால் மேலை நாட்டுத் தலைவர்கள் முன்னால் ஹிந்தியில் பேசும் பிரதமர் தமிழ்நாட்டில் வந்து ஆங்கிலத்தில் பேசுகிறார்... அது போதுமே நமக்கு
மோடி போடும் திட்டங்கள் எல்லாம் ஒரு மலடன் பெறாத குழந்தைக்குப் பெயர் வைப்பது போலத்தான் அதனால் எந்த ஒரு பலனும் இல்லை
போரில் சென்று வெற்றி பெற்றுத் திரும்பும் வீரனுக்கு உண்டான சந்தோஷத்தை விட இரவு பட்டினி கிடந்தாலும் #GOBackModi என்று சொல்லி ட்ரெண்ட் பண்ணி வந்தது இப்போது தூங்கச் செல்லும் தமிழனுக்கு உள்ள சந்தோஷமே மிக அதிகமாக இருக்கும்
டேய் இது மோடி கட்டிக்கொடுத்த வீட்டிற்கான சாவீடா ஆனால் இந்த வீட்டுக்கு அடியில் சிவலிங்கம் இருக்குன்னு மட்டும் சொல்லிடாதீங்கடா
அன்புடன்
மதுரைத்தமிழன்
வெங்கோலன் ஒரு கேமரா பைத்தியம்...
ReplyDelete