Friday, May 20, 2022

 

@avargal unmaigal


தமிழகம் மதுவால் அழிந்தால் இந்தியா ?


தமிழக தலைவர்கள் மதுவால் மக்களை மயக்கத்தில் வைத்துச் சாக அடிக்கிறார்கள் ஆனால் தேசிய தலைவர்களோ மதத்தால் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வெறுப்பை வளர்த்துச் சாக அடிக்கிறார்கள் மொத்தத்தில் மதுவும் மதமும் யாரோ ஒரு சிலருக்கு மட்டுமே நன்மையை அளிக்கிறது மற்றவர்களுக்கு எல்லாம் அது தீமையையே அளிக்கிறது.  தமிழகம் மதுவால் அழிந்தால் இந்தியா மதத்தால் அழியும் ஆக மொத்தம் இந்தியாவின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை


அன்றாடம்  சமுக இணைய தளத்தில் தினசரி மக்கள் தங்களின்  தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது ஒரு கலாச்சாரமாகவே மாறி விட்டது. இப்படிச் செய்வது மடத்தனம்தான் .  காரணம்  அந்த தகவல்களைப் படிக்கும் அல்லது பார்க்கும்  பொறாமையுடைய  தீய கண்கள் நிச்சயம்  ஏதாவது ஒரு வகையில்  நமக்குத் தீங்கு  விளைவிக்கும் அல்லது விளைவிக்க நினைக்கும் ஒருவன் நல்லா இருக்கிறதைப் பார்த்துச் சந்தோசப்படும் மனிதர்களை விடப் பொறாமை கொண்டு தீங்கு விளைவிக்க நினைப்பவர்கள்தான் அதிகமாக இன்றைய கால கட்டத்தில் பார்க்க முடிகிறது... அப்படி தீங்கு நினைப்பவர்கள் கூட  உங்கள் தகவல்களைப் படித்து  அது தங்களுக்கு  மிகவும் சந்தோஷம் அளிக்கிறது என்று பதில் கருத்தும் சொன்னாலும்  அப்படிச் சொல்லும் கருத்தில் எந்த வித ஒரு உண்மையும்  இருக்காது என்பது கசக்கும் உண்மையே




மதுரக்காரய்ங்க எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்து முட்டாள்தனமாக ஏதாவது செய்வார்கள் .ஆனால் பேரறிவாளன் விடுதலை ஆன பின் அவருக்காக இன்னும் கோயில் கட்டாமல் அமைதி காப்பதுதான் எனக்கு மிகவும் ஆச்சிரியம் அளிக்கிறது. என்ன நடக்கிறது மதுரையில் ஒரு வேளை மக்கள் திருந்திவிட்டார்களா என்ன?

முன்னோக்கு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வெற்றி பெறுவதில் திமுக தலைவர்களைப் போல இந்தியாவில் வேறு எந்த தலைவரும் செய்து வெற்றி பெற்றதில்லை

 

@avargalunmaigal




உங்களையும் உங்கள் குழந்தைகளையும் 'மதம்' மற்றும் 'கோயில்-மசூதி'க்காக போராடுச் செய்கிறார்கள் ஆனால் போராடத் தூண்டியவர்களின் உறவுகளோ அல்லது குழந்தைகளோ மேலை நாட்டில் படித்துக் கொண்டும் ,வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதை மக்கள் ஏணோ புரிந்துக் கொள்ளவதில்லை.


மோடியின் ஆட்சியில் இந்தியா வலிமை மிக்க நாடாகவும் ,பொருளாதார வளர்ச்சி மிக்க நாடகவும் சமுக இணையதளங்களில் மட்டுமே பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரிகிறது .காரணம் அங்குதான் போலிச் செய்திகள் மிக அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது

 

யோவ் அமித்ஷா  உன்னை பற்றி குறை சொல்லும் அளவிற்கு எங்க தலைவர்கிட்ட என்ன பிரச்சனை... நீ என்ன செய்தாலும் நெடுஞ்செழியன் போல எப்போதும் உனக்கு இரண்டாம் இடம்தானப்பூ

 

  



 





அன்புடன்
மதுரைத்தமிழன்



20 May 2022

1 comments:

  1. மது குடும்பத்திற்கு சீரழிவு... மதம் நாட்டிற்கு சீரழிவு...

    வெங்கோலனுக்கு உண்மை என்றால் என்னவென்றே தெரியாது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.