Sunday, May 1, 2022

 

@avargal unmaigal

இந்தியாவில் உழைக்காத மக்கள் கொண்டாடும் தினம்தான் உழைப்பாளர் தினம்



பொங்கலுக்குப் பரிசு ,தீபாவளிக்குப் பரிசுத் தரும் தலைவர்கள் எல்லாம் உழைப்பாளர் தினம் அன்று உழைப்பாளர்களுக்கு "வாழ்த்துக்கள் என்ற அல்வாவை' மட்டும் பரிசாகக் கொடுக்கிறார்கள் #


இந்தியாவில் நாளை உழைப்பாளர் தினமாம்  நிச்சயமா பாருங்க உழைக்காமல் வெட்டியா இருக்கிற பய புள்ளைங்க எல்லாம் நாளை சமுக வலைத்தளங்களில் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் என்று பதிவு போடுவார்கள்

பேஸ்புக் பிரபலங்களே பேஸ்புக் பிரபலங்களாக தங்களை நினைத்துக் கொள்பவர்களே

நாளை உழைப்பாளர் தினத்திற்குச்  சமுக இணைய தளங்களில்  வந்து வாழ்த்து சொல்வதற்கு முன்னால் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு உழைப்பாளியின் குடும்பத்திற்குப் பரிசோ அல்லது அவர்களுக்கு ஒரு வேளை நல்ல உணவை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாமே அதைவிட்டு விட்டு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் என்று சொல்வதில் என்ன ஆகிவிடப்  போகிறது.


 தமிழக முதல்வரே இந்த ஆண்டு உழைப்பாளர் தினத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லும் போது அடுத்த ஆண்டிலிருந்து உழைப்பாளர் தினத்திற்கு உழைப்பாளர்களுக்குப் பரிசு கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு செய்யுங்களேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. இதுவும் உண்மைதான்...

    ReplyDelete
  2. நான் பிரபலமும் இல்லை. நான் வாழ்த்தும் சொல்லவில்லை! எனவே எந்த உழைப்பாளியின் வீட்டுக்கும் செல்லவில்லை.  எனினும்,

    எப்போதும்போல எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் ஊதியத்தை ஒன்றாம் தேதியே - இன்றே -  தந்து விட்டேன்.  அதே போல பேப்பர் காசும், பால் காசும் செட்டில்டு!

    ReplyDelete
  3. நல்ல கருத்து. அவ்வப்போது முடிந்த போது பொருளால் அல்லது வேறு வகையில் உதவுவதால் இந்த ஒரு நாளை மட்டும் கணக்கில் கொண்டு என்று இல்லை.

    கீதா

    ReplyDelete
  4. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    துளசிதரன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.