Wednesday, April 27, 2022

@avargal unmaigal

 நிஜம் அல்ல அவைகள் போலியான பிம்பங்கள்


பேஸ்புக்கில் டிவிட்டரில் உங்கள்  "சோசியல் நெட்வொர்க்கில் இருக்கும்  நண்பர்கள்" பதிவிடும் பதிவுகளைப் பார்த்துவிட்டு ஆஹா பாருடா இவர் என்ன மாதிரி வாழ்கிறார் . ஆனந்தமா இருக்கிறார் ,நல்லா வாழ்கிறார் , விலை உயர்ந்த வாகனம் வைத்திருக்கிறார் மிக நல்ல வேலையில் இருக்கிறார். பல  இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று அழகிய படங்களை வெளியிடுகிறார். கணவனை/மனைவியைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசுகிறார். வாழ்ந்தால் இவர்களை  மாதிரி வாழவேண்டுமென்று  என்று  நினைக்காதீர்கள்.. இது அவர்கள் சமுகத்தின் முன்னால் வைக்கும் போலியான பிம்பங்கள்தானே ஒழிய நிஜம் அல்ல.. அப்படிப்பட்டவர்களின் நிஜ வாழ்க்கை அவர்களின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒரு சிலருக்கு மட்டும் தெரியும். உண்மையில் எப்படிப்பட்ட  மோசமான குடும்ப சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் தங்கள் துணையுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது.

அவர்களின் உண்மையான வாழ்க்கையை அறிய நேர்ந்தால் நீங்கள் அவர்களை விட எப்படிப்பட்ட அருமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது  தெரியும்.... அவர்களின் சந்தோஷங்கள் என்பது இப்படி சோசியல் நெட்வொர்க்கில் சந்தோஷமாக இருப்பதாகப் பதிவிடுவது மட்டுமே வாழ்வது அல்ல


இந்து நான் நிஜம்...





அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. உண்மை தான்...

    மெய்ப்பொருள் காண்பது அறிவு...

    ReplyDelete
  2. இதுதான் நிஜம்?  இந்து நான் நிஜம்?

    பேஸ்புக்கில் வருவதை எல்லாம் நம்புவதாக யார் சொன்னார்கள்?  பேஸ்புக் இல்லை, செய்தி ஊடகங்களே அவர்கள் விரும்புவதையும் நினைப்பதையும்தானே செய்தியாக்குகிறார்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.