Saturday, April 23, 2022

 

@avargal unmaigal

உலக புத்தக தினமும் ,புத்தகங்கள் பற்றிய என் அனுபவங்களும் கருத்துக்களும் 

 நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் புத்தகங்கள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. புத்தகங்களை விட  நமக்குச் சிறந்த துணை இல்லை எனச் சொல்லாம். இது நமது அறிவின் மிகப்பெரிய ஆதாரம்.  எவ்வளவு பயனுள்ள புத்தகங்களை நாம் வாசிக்கிறோம் என்பதைப் பொருத்து நம் அறிவின் வளர்ச்சியும் அளவும் இருக்கிறது..


புத்தகங்கள்  நம்மை வித்தியாசமான கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்கின்றன. என்னைப் பொறுத்த வரையில் ஒரு நல்ல புத்தகம் என்பது அதைப்படித்து முடித்த பின்  நம் மனதில் ஆழ்ந்த தாக்கத்தையோ அல்லது நாம் எதையோ இழந்தது போன்ற ஒரு உண்ர்வையையோ ஏற்படுத்தி இருந்தால் அதை ஒரு நல்ல புத்தகம் என்பேன்.


நான் இளம் வயதில்  பள்ளி கல்லூரிப் புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்களைத் தேடித் தேடி படிப்பேன் எந்த அளவிற்குப் படிப்பேன் என்றால் தாகத்தால் நாக்கு வறண்டு கிடப்பவனுக்குத் தண்ணீர் கிடைத்தால் எப்படிக் குடிப்பானோ அப்படிப் படிப்பேன் தமிழில் பிரிண்ட் செய்தது எதுவாக இருந்தாலும் படிப்பேன்.. அதுதான் என் பொழுது போக்கு


ஒரு சமயம் நான் கல்லூரி படிக்கும் வயதில் மனக் குழப்பம் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து  மூட்டைப் பூச்சி மறந்து கூட வாங்கி வைத்துவிட்டேன் வாங்கி வைத்த பின்னும் குழப்பம் குழப்பம்

அப்போது நான் படித்த ஒரு புத்தகத்திலிருந்த வரிதான் என்னைத்  தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்ததது அதிலிருந்த வரிகள் இப்போது சரியாக ஞாபகத்தில் இல்லை ஆனால் அந்த வரியில் சொல்லி இருப்பது இதுதான் தற்கொலைக்கு முடிவு செய்த பின் அதைச் செய்யாமல் நீ தற்கொலை செய்து கொண்டாய் என்று நினைத்துக் கொண்டு அதன் பின் நீ புதிதாகப் பிறந்தாய் என்று நினைத்து ஒரு புது வாழ்வை ஒரு புது இடத்திலிருந்து தொடங்கு என்பதாக இருந்தது.

அந்த வரி என் மனதிற்கு ஒரு ஆதரவையும் ஒரு புத்துணர்ச்சியையும் கொடுத்தது... அந்த வரி கொடுத்த உத்வேகத்தால் 25 வருடங்கள் கழித்து இன்று  அமெரிக்காவிலிருந்து கொண்டு இப்போது இதை எழுதிக் கொண்டு இருக்கின்றேன்.   எனக்கு எவ்வளவுதான் நெருங்கிய நட்புகள் இருந்தாலும் சிறு வயதிலிருந்து இன்று வரை யாரிடமும் என்னைப் பற்றி என் பிரச்சனைகளைப் பற்றி யாரிடமும் சொல்வதில்லை பகிர்வதில்லை எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அதைத் தனியாகச் சமாளித்து வருகின்றேன்,

புத்தகங்களை வாசிப்பது வாழ்க்கைக்கு புதிய வழியைக் கொடுக்கிறது, வாழ்க்கைக்கு வித்தியாசமான பார்வையைத் தருகிறது. மேலும் வாசிப்பு மன அழுத்தத்தைக் குறைக்கிறது.புத்தகங்கள் அல்லது இணைய தளங்கள் மூலம் தொடர்ந்து படிப்பதால் பலரின் அனுபவங்கள் நமக்குப் பாடமாக இருக்கிறது. சமுக விஷயங்களில் பலரின் கருத்துக்களைப் படிக்கும் போது நமக்கு மிகத் தெளிவு உண்டாகிறது. ஒரு சமுக பிரச்சனையில் பிராச்சனையின் இரு பக்கம் உள்ள விஷயங்களைப் படிக்கும் போதுதான் சில சமயங்களில் நாம் நினைத்தது சரியாகவும் சில சமயங்களில் நாம் நினைத்தது தவறாகவும் இருப்பது  தெரிகிறது. அதன் மூலம் நம் எண்ணங்களைச் சரி செய்து கொள்ள முடிகிறது .அதுமட்டுமல்ல சிலர் சொல்லும் கருத்துக்கள் மூலம் அவர்களைப் பற்றி அவர்களின் சிந்தனைகள் மற்றும் அவர்கள் ஆதரிக்கும் தலைவர்கள் மதங்கள் மற்றும் சாதிய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிவதுடன் அவர்களை நாம் ஒதுக்கி வைக்கவும் முடிகிறது. இதற்காகவே நாம் தினமும்  படிக்க வேண்டி இருக்கிறது.

அமெரிக்க வந்த பின்பு புத்தகப் படிப்பு மிகவும் குறைந்து போய்விட்டது ஆனால் இணையம் மூலம் இப்போது  பல விஷயங்களைத் தேடிப் படித்து வருகின்றேன்

நாம் பெற்று வளர்த்த பிள்ளைகள் நம் வீட்டு போனாலும் நாம் வாங்கி வைத்த புத்தகங்கள் இருந்தால் நம்ம்கு தனிமை உணர்வு தோன்றவே தோன்றாது என்பது நிச்சயம்.புத்தகம் படிக்கும் போது நாம் தனிமையிலிருந்தாலும் தனிமையில் இருப்பது போல ஒரு கூட தோன்றாது.

நாம் அறிவை வளர்த்துக் கொள்ளப் பல  ஊர்களுக்குப் பல மாநிலங்களுக்குப் பல நாடுகளுக்குப்  பயணம் சென்று வளர்த்துக் கொள்ளலாம் ஆனால் இதை எல்லோராலும் செய்ய முடியாது அதற்குப் பணம் அதிகம் வேண்டும் ஆனால் பணம் அதிகம் செலவிடாமல் மிகக் குறைந்த அளவில் செலவு செய்து அறிவை வளர்த்துக் கொள்ள புத்தகங்கள் படியுங்கள்

உண்ண உணவும் இருக்க இடமும் படிக்கப் புத்தகங்களும் இருக்கும் ஒருவன் மட்டுமே மிக சிறந்த செல்வானாக இருக்க முடியும்

அன்புடன்
மதுரைத்தமிழன்


கொசுறு : அறிவை வளர்த்துக் கொள்ள  சங்கிகளால் எழுதும் புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்களை அதிகம் படியுங்கள். சங்கிகளின் புத்தகங்கள் அறிவை மழுங்கச் செய்பவை..





பொது அறிவிற்க்காக :

உலக புத்தக தினம்: வரலாறு, முக்கியத்துவம்

வாசிப்பு, பதிப்புரிமை மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

உலக புத்தக தினம், உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது, இது வாசிப்பு, வெளியீடு மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை மேம்படுத்துகிறது. உலக புத்தக தினத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு 25வது உலக புத்தக தினமாகும்.

"கடந்த ஆண்டில், பெரும்பாலான நாடுகள் சிறைவாசத்தின் காலகட்டங்களைக் கண்டபோது, ​​​​மக்கள் வெளியில் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டியிருந்தது, புத்தகங்கள் தனிமைப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களிடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நமது எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், நமது மனதையும் படைப்பாற்றலையும் தூண்டுவதற்கும் சக்திவாய்ந்த கருவிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது" என்று யுனெஸ்கோ தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
உலக புத்தக தின வரலாறு

1995 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ உலகப் புத்தகத்தை ஏப்ரல் 23 அன்று முக்கிய எழுத்தாளர்களான வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுவல் டி செர்வாண்டஸ், இன்கா கார்சிலாசோ டி லா வேகா மற்றும் ஜோசப் பிளா மற்றும் பிறந்தநாள் மானுவல் மெஜியா வல்லேஜோ, ஹால்டோர் கே ஆகியோரின் நினைவு நாளாகக் கொண்டாட முடிவு செய்தது. லாக்ஸ்னஸ் மற்றும் மாரிஸ் ட்ரூன்.


ஒவ்வொரு ஆண்டும், யுனெஸ்கோ மற்றும் புத்தகத் துறையின் மூன்று முக்கிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நிறுவனங்கள் - வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்கள் - ஒரு வருட காலத்திற்கு உலக புத்தக மூலதனத்தைத் தேர்ந்தெடுக்கின்றன


23 Apr 2022

6 comments:

  1. அருமையான பதிவு மதுரைத்தமிழன்.

    துளசிதரன்

    ReplyDelete
  2. மதுரை, கருத்துகள் அனைத்தையும் டிட்டோ செய்கிறேன். வழி மொழிகிறேன். எனக்கு வாசிக்கப் பிடிக்கும் ஆனால் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. சிறுவயதிலும் அதன் பின்னும். இப்போது கை அடக்கத்தில் இணையம் வந்துவிட்டதால் இணையத்தில் பதிவுகள் புத்தகங்கங்கள் எல்லாமே வாசிக்க முடிகிறது. பதிவு செம. கூடுதல் தகவல்களுக்கும் நன்றி.

    கீதா

    ReplyDelete
  3. புத்தகங்கள் இவ்வுலகின் பொக்கிஷங்கள்.  அந்தப் பொக்கிஷத்தை படிக்காமலேயே என் சமீப காலம் வீணாகிக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  4. புத்தக வாசிப்பை பற்றி அருமையாக சொன்னீர்கள். நல்ல பதிவு.
    உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து புது வாழ்க்கை தொடங்க புத்தகம் உதவியது மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. சிறந்த புத்தகங்கள் - சிறந்த ஆசிரியர்கள்.

    தங்களின் அனுபவம் சிறப்பு - வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.