Wednesday, April 13, 2022

 

@avargalunmaigal

பாவம் மோடி என்ன செய்வாரு?

மோடி இந்தியாவை வல்லரசு நாடாக்கும் சமயத்தில் இப்படி எல்லாம் நடந்திடுச்சு,,,, ஹும்ம் இல்லையென்றால் ,இன்று இந்தியா அமெரிக்காவை விட ,சீனாவை விட, ரஷ்யாவை விட மிகப் பெரிய வல்லரசு நாடாகி இருக்கும்.


 மோடி இந்தியாவை வல்லரசு நாடாக்க டிமானிடைஷேசன் செய்தார்... ஜி.எஸ்.டி வரி விதித்தார். படேலுக்கு  பெரிய சிலை எழுப்பினார் ,ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார்... இப்படி இந்தியாவை வல்லரசாக்கப் பல அருமையான திட்டங்களைச் செய்து, அது வெற்றி பெறும் நேரத்தில் கொரோனா வந்து எல்லாவற்றையும் தலை கீழாக்கிவிட்டது இல்லைன்ன மோடி நினைத்ததை சாதிச்சிறுப்பாரு


ஆனால் இதற்கெல்லாம் மோடி அசந்து போவாரா என்ன? உடனே ஊறுகாய் மாமி நிர்மலா சீதாராமன் கூட ஆலோசித்துப் பல பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்து, மீண்டும் வல்லரசாக்கும் நிலை வந்த போது ,இந்த பாழாய்ப் போன ரஷ்யா உக்ரைன் போர் ஆரம்பித்ததது. அதனால் பெட்ரோல் விலை உயர்ந்து .விலை வாசி கண்ணாப் பின்னா என்று ஏற ஆரம்பித்ததினால் மீண்டும் இந்தியா வல்லரசு ஆவதில் சிக்கல் வந்தது.


இந்த சிக்கலிலிருந்து வெளியே வந்து இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழிதான்  இருக்கிறது என்று நினைத்து அந்த வழியைப் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்.


அந்த வழி வேறு எந்த வழியும் அல்ல .முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டால் இந்தியா வல்லரசாகிவிடும் என்று அவருக்கு யாரோ ஜோசியம் சொல்லிவிட்டார்களாம் .அதை மட்டும் பின்பற்றி முஸ்லீம்களுக்கு எதிராகச் செயல்பட்டால் ராமர் மீண்டும் அவதாரம் எடுத்து மோடி ஆளும் போதே இந்தியாவை வல்லரசாக்கி இந்தியாவை உலகின் முதன்மையான நாடாக்கிவிடுவாராம்.

 இந்திய மக்களே! இந்திய வல்லரசாக ஆகும் போது இப்படிப்பட்ட மதக்கலவரங்கள் வரலாம், அதனால் உங்கள் குடும்பங்கள் அது எந்த மதத்தவாரக இருந்தாலும் பாதிக்கப்படலாம் .ஆனால் அதற்காகக் கவலைப்படாதீர்கள். நமக்கு குடும்பத்தை விட நம் தேசம்தானே முக்கியம் .அதனால்  நமக்கு இழப்பு எவ்வளவாக இருந்தாலும் பொறுமையாக இருந்து  இந்தியா வல்லரசாக மோடிக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்


ஜெய்ஹிந்த பாரத் மாதாகி ஜெய்
 
கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசு தடுப்பூசி கண்டுபிடித்தது போலத்தான் பெட்ரோல் விலையை மறக்கடிக்க மதக்கலவரங்கள் உருவாகின்றன
 
 
பேஸ்புக்கில் பின் தொடர : https://www.facebook.com/avargal.unmaigal/

டிவிட்டரில் பின் தொடர : https://twitter.com/maduraitamilguy

 



அன்புடன்
மதுரைத்தமிழன்


13 Apr 2022

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.