ஏ ஆர் ரஹ்மான் தமிழன்னையை வணங்குவாரா ?? கோயிலின் புனிதத் தன்மையைப் பிரதமர் சீர் குலைப்பது சரிதனா?
நேரடியான கேள்வி.
ஏ ஆர் ரஹ்மான் தமிழன்னையை வணங்குவாரா ??
#ARRahman #Tamil #தமிழ்_தாய்
இப்படி ஒரு பதிவை பாஜக ஆதரவு பெண்மணி ஒருவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். உடனே அங்கு வருகை தந்த மற்ற சங்கிகள் எப்படி பதில் தந்து இருப்பார்கள் என்று உங்களுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை,
நீங்கள் அவரை நேரில் சந்தித்தால் உங்களைப் பார்த்து வணங்குவார் அது போலத் தமிழ் அன்னையையும் வணங்குவார்.. ஆனால் அந்த தமிழ் அன்னையைக் கடவுள் போல நினைத்து வணங்கமாட்டார் ஒரு அன்னையை வணங்குவது போல வணங்குவார் கடவுளை வணங்குவதற்கும் மற்றவர்களை மரியாதை நிமித்தம் வணங்குவதற்கும் வித்தியாசம் உண்டு அது எல்லாம் உங்களுக்குப் புரியாது
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரைப்
படைத்தவனை வணங்கு...
படைப்பினங்களை வணங்கக்கூடாது ...
வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே..
என்பதே இஸ்லாம்...
ரஹ்மான் இதைச் சொல்லி எல்லா புகழும் இறைவனுக்கே. என்றுதான் அவர் பதில் தருவார்...
கோயிலின் புனிதத் தன்மையைப் பிரதமர் சீர் குலைப்பது சரிதனா?
எனக்கொரு சந்தேகம்
நான் பல கோவில்களுக்குச் சென்று வந்து இருக்கின்றேன்.. அப்படி கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் என் கண்ணில் படுவது இங்குப் புகைப்படம் அதாவது போட்டோ எடுக்கக் கூடாது என்று அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்குப் பொறுப்பில் உள்ள சிலரிடம் கேட்டதற்குக் கோயிலின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதால்தான் நாங்கள் அப்படி அறிவிப்பு செய்து இருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.
உண்மையில் கோயிலின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்றால் மோடிஜி செல்லும் போது அவருடன் பல கேமிராமேன் கள் உடன் சென்று அவர் சாமிக்குப் பூஜை செய்யும் போது கடவுளை மறைத்து மோடிஜியை சுற்றி வளைத்துப் போட்டு எடுக்கும் போது அந்த கோயிலின் புனிதம் கெட்டுவிடாதா என்ன?
கோயிலின் புனிதத் தன்மையைப் பிரதமர் சீர் குலைப்பது சரிதனா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
நாடு நாடாக இருக்க வேண்டுமானால், சங்கிகள் ஒழிய வேண்டும்...
ReplyDelete