Sunday, June 5, 2022

 வெளிநாடுகளில்  வசிக்கும் இந்தியார்களின் நலனைக் குலைத்து வரும் பாஜக தலைவர்கள்

 

@avargal unmaigal



பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பாஜக தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் முகமது நபிக்கு எதிராக சில கொந்தளிப்பான கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து அரபு நாடுகளில் இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன. புறக்கணிப்பு ட்வீட்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கடுமையான தாக்குதல்களும் அடங்கும்.

இதனால் ஒன்றுல்ல இரண்டு அல்ல 11  அரபு நாடுகள்  இந்திய பொருட்களை தங்கள் கடைகளில் இருந்து அகற்றி வருகின்றனர். வளைகுடாவில் இந்துக்கள் நிம்மதியாக சம்பாதித்து வருகின்றனர். பிஜேபியின் வெறித்தனமான அதிகாரப்பூர்வமற்ற தலைவர்கள் வெளிநாடுகளில்  வசிக்கும் இந்தியார்களின் நலனைக் குலைத்து வருகின்றனர்

இதனை தொடர்ந்து நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக  பாஜக கட்சி தலமை இவர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்துள்ளது  அதுமட்டுமல்லாமல் கீழ்கண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது

  

@avargal unmaigal

தகுதியில்லாத இப்படிப்பட்ட பேச்சாளார்களின் இந்த செய்கைகளால் வெளிநாடுகளில் வாழும் மக்களின் நலனை இந்த செய்கைகள் உருச்சிலைத்துவிடும். பாஜகவினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பு உங்களின்  சொந்த வீட்டை எரித்துவிடுவது போலத்தான். இதனை மக்கள் உணரவில்லை என்றால் எல்ளோரும் நடுத்தெரிவில் நிற்கும் நிலமைக்கு வரக் கூடும்


 
@avargal unmaigal
பாஜக அரசு இந்தியாவில் மூஸ்லீம்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை  அது போல வெளிநாட்டில் உள்ள  இந்துக்களையும் நிம்மதியாக வாழவிடுவதில்லை,


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.