சாக்லேட் பேபியை வாட்ஸ் அப் அங்கிளாக மாற்றிய பஞ்சாங்கம்
ஏண்ணா இப்படியே சும்மா இருக்காதேள் உங்காத்து பெரியவாளைக் கூப்பிட்டு அப்படியே நம்ம வாட்ஸ் அப் அங்கிள் பஞ்சாங்க #மாதவனை ஒரு எட்டு பார்த்துட்டு வாங்கோ
அடியே உனக்கு கல்மனசுடி எங்காத்து பெரியவாளைச் சீக்கிரம் அனுப்ப இப்படியா வழி சொல்லுவே
அம்பி பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் மிக எளிதாகச் சந்திரனை அடைய வழி சொன்ன நீ, இந்த டிராபிக் ஜாமிலிருந்து விடு பெற்று சீக்கிரம் ஆபிஸ் செல்ல ஒரு வழி இருக்கான்னு பஞ்சாங்கம் பார்த்து சொல்லேன்.
மாமா என்னை நம்பி வந்துட்டேள் .உங்களுக்கு நல்ல வழி சொல்லுறேன் கேட்டுகோங்கோ, உங்க வாகனத்தில் ஒரு எலும்பிச்சம் பழம் கட்டிண்டு வாகனத்தின் முன்னேயும் பின்னேயும் ஆம்புலன்ஸ் என்று எழுதி விடுங்கோ, அதுக்கு அப்புறம் நீங்க சீக்கிரமாகச் சென்றுவிடலாம்
ஏண்டா அம்பி பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டுத்தான் பிள்ளை பெற்றுக் கொள்ளனுமா ? எந்த நேரத்தில் உறவு கொண்டால் பத்தே நாளில் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பஞ்சாங்கத்தில் வழி ஏதாவது இருக்கான்னு பார்த்து சொல்லுடா?
உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் பஞ்சாங்கத்தில் சொல்லியவற்றை அப்படியே ஒரு எலக்ட்ரானிக் கருவியில் புகுத்தி அதைத்தான் GPS என்று மேலைநாட்டுவர்கள் அழைக்கிறார்கள். நல்லா தெரிஞ்சுக்கோங்க நம்ம முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல
பஞ்சாங்கப் பலன் சொல்லும் #Rமாதவன்! இதை எம்பிக்கள் எலக்ஷனுக்கு முன்னால் சொல்லி இருந்தாலாவது பாஜக சார்பாக ஒரு எம்பியாக ஆகி இருக்கலாம்...# இப்ப வாட்சப் அங்கிளாக மாறியதுதான் மிச்சம்

கொசுறு :இனிமேல் சாகித்திய அகாடமி விருது வாங்குபவர்கள். இது மாலன் வாங்கிய விருதாயிற்றே .இதை அரசாங்கம் நமக்கு கொடுத்து நம்மை இழிவுபடுத்துகிறதா என்று கொஞ்சமாவது யோசிப்பார்கள்
மாதவன் சொன்ன இந்த செய்திக்காகத்தான் சமுக வலைதளங்களில் அவரை நெட்டிசங்கள் கலாய்த்து பதிவிட்டார்கள்.
செய்தியாளர் ஒருவர், உலகத்தில் பல நாடுகள் இருந்தாலும், நம் நாட்டில் மட்டும் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், கோள்கள் உள்ளிட்டவற்றை அந்தக் காலத்திலே கணித்திருந்தார்கள். அதுக்கும் இப்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மாதவன் “நிச்சயமாக தொடர்பு இருக்கு. 'மார்ஸ் மிஷன்' என்பது பூமியிலிருந்து, செவ்வாய் கிரகம் வரை அந்த செயற்கைகோள் சென்று சேருவதுதான். அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து 30-வது தடவை, 32-வது தடவை தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள். அதிநவீன இன்ஜின் (3 விதமா சொல்வாங்க) தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும்.
இருந்தாலும் இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து செலஸ்டியல்னு சொல்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினாங்க. நம்பி நாராயணின் மருமகன் அருணண், அவர் தான் மங்கள்யான் (செவ்வாய்) திட்டத்தின் இயக்குநர். அவர் இந்தக் கதையை சொல்ல சொல்ல அப்படியே புல்லரிச்சு போயிருச்சு. பஞ்சாங்கம் வானியல் வழிமுறை வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது.
மின்சாரம் இல்லாமல், சின்ன பட்ஜெட்டில் செயற்கைகோள் அனுப்பப்பட்டதற்கு காரணம் இந்த பஞ்சாங்கம் தான். இந்த மாதிரி நம்ம நாட்டிலேயே பல விஷயங்கள் இருக்கு. ஹாலிவுட்ல ‘கிராவிட்டி’, ‘இண்டர்செல்லர்’, ‘இன்செப்ஷன்’, ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ போன்று படம் பண்ணும்போது, அவங்கதான் மேதைங்கனு உலகமே நம்பிடுது. ஆனா அவங்கள விட பல விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருக்காங்க. இங்க சாதிக்க முடியலனு அங்க போய் சாதிக்கிறாங்க. உலக நாடுகளில் டாப் கம்பெனிகளில் 13 தலைமை செயல் அதிகாரிகள் நம் இந்தியர்கள் தான். முக்கியமாக தமிழர்கள்” இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
இதற்கு தவறாக சொல்லி விட்டதாக மறுப்பும் தெரிவித்து உள்ளார்...
ReplyDeleteநானும் அவர் மன்னிப்பு கேட்டு டிவிட்டரில் வந்த செய்தியை பார்த்தேன்... அவருக்கு தவறு என்று புரிந்து கொள்ள இத்தனை நாள் ஆகியதா என்ன? அவர் தெரிந்துதான் பேசி இருக்கிறார். அவரின் இமேஜ் அதிகம் டேமேஜ் ஆன பின்தான் அவருக்கு அது தவறு என்று புரிந்ததா என்ன?
Deleteசங்கிகள் மன்னிப்பு கேட்பது சகஜம்தானே