Tuesday, June 21, 2022

 

@avargal unmaigal

#அக்னிபத் : இது இராணுவத்திற்கு  ஒப்பந்த அடிப்படையில்  ஆட்கள் சேர்க்கும் திட்டமல்ல. #RSS உறுப்பினர்களுக்கு மறைமுகமாக  இலவச இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம்'அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிப் பல இடங்களில் வன்முறை வெறித்தாடுவதை பலரும் அறிந்திருப்பீர்கள். இந்த திட்டம் நல்லதொரு திட்டம்  இந்திய அரசிற்கு மட்டுமல்ல இளையர்களுக்கும் நல்லதொரு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும்  ஒரு நல்ல திட்டம் என்று அரசாங்கம் சொல்லி வந்த போதிலும் பொதுமக்கள் அதற்கு எதிராக பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  இது ஒரு குறுகிய காலதிட்டமே ஒழிய நீண்டகாலத்திற்கு அதில் சேர்ந்து பணியாற்றியவர்களுக்குப் பலன் அளிக்காத திட்டம் என்று ஒரு தரப்பால் நினைக்கப்பட்டு போராட்டங்கள் செய்கிறார்கள்.

இந்த #அக்னிபத்  திட்டம் இராணுவத்திற்கோ அல்லது அதில் சேர்ந்து வேலை பார்ப்பபவர்களுக்குகோ நீண்டகால பலன் அளிக்கும் திட்டம் அல்ல அதுதான் உண்மை .இது  #RSS உறுப்பினர்களுக்கு மறைமுகமாக  இலவச இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம்' இதில் உள்ள நுட்ப அரசியலை ஊடகங்களில் உள்ள பலரும் அரசியல் தலைவர்கள் பலர் அறிந்திருந்த போதிலும் அதைப் பற்றி யாரும் பேசாமல் அதைத் திசை திருப்ப மக்கள் அதை எதிர்ப்பது போல இரயில்களை எரித்து  திட்டத்தில் உள்ள உண்மைகளை மறைத்து திசை திருப்புகிறார்கள் என்பதுதான் உண்மை. மக்களும் இந்த நுட்ப  அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அவர்களும்  தங்களுக்குத் தோன்றியதை இணைய தளங்களில் எழுதி வருகிறார்கள்.

  
@avargal unmaigalஇந்த அக்னிபத் திட்டத்தில் ஒழிந்து கிடக்கும் நுட்ப அரசியலைப் பற்றி தெரிந்தால்  இந்த திட்டத்தில் ஒழிந்திருக்கும் உண்மை பட்டவர்த்தனமாக வெளியே தெரியும்


இந்த திட்டம் பற்றி நாம் பேசுவதற்கு முன்னால்     #ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh,) என்று அழைக்கப்படும் ஆர் எஸ் எஸ் பற்றி சிறிது தெரிந்து கொண்டால் இந்த திட்டத்தின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதசமி அன்று நிறுவியவர்கள் கே. பி. ஹெட்கேவர், பாலகிருஷ்ணா சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆவர். பலவித கடவுள்களை வழிபட்டு வந்த பல பிரிவுகளை ஆங்கிலேயர்கள் எப்படி அழைப்பது என்று சிந்தித்து அவர்களை இந்துக்கள் என்ற அடையாளத்தைச் சுட்டி அழைத்து வந்தனர்...  அவர்கள் அப்படி அழைத்து வந்த போதிலும்  இந்துக்கள் என்ற அடையாளத்திற்குள் வராமல் பலரும் அவரவர்களின் தெய்வங்களை மட்டும் வணங்கி  வழிப்பாட்டு வந்தனர்.


இந்த சமயத்தில் ஆர் எஸ் எஸ்  இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள்  இப்படி பல பிரிவாக  இருந்து வந்தவர்களை எல்லோரையும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி #"இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்த்து விட வேண்டும் என்ற  முக்கிய நோக்கத்துடன் செயல்பட்டு வந்தனர்.


இயக்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வட இந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். அப்படிச் செயல்பட்டவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் அதை இந்துக்களின் நாடாக மாற்ற வேண்டும் என்று முயற்சித்தனர். அப்படி முயற்சித்த  வந்த போது வெண்ணெய் திரண்டு வரும் போது  தாழி உடைந்த கதையாக நாடு சுதந்திரம் பெற்று வந்த போது இந்தியா இந்துஸ்தான மாறவேண்டும் என்று தேசியவாதிகள் நினைத்த போது அதற்குக் காந்தி முட்டுக்கட்டையாக இருந்து  இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்று அறிவித்தார்.

தங்களின் முயற்சிக்குக் காந்தி பெருந்தடையாக இருந்ததால் ஆர் எஸ் எஸ்ஸில் உள்ள கோட்சே வால் அவர் படுகொலை செய்யப்பட்டார். (இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் எங்கு ஒரு தலைவர் கொல்லப்பட்டாலும் கொன்றவரை பற்றிப் பேசாமல் அவர் சார்ந்த இயக்கத்தையும் சமுகத்தை மட்டுமே குறை சொல்லிப் பேசுபவர்கள் இங்கு கோட்சேயை மட்டும் பேசும்படி செய்துவிட்டு அவர் சார்ந்த இயக்கத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து மடை மாற்றம் செய்யப்பட்டார்கள்.) இந்த காந்தி கொலைக்குப் பின் சிறிதுகாலம் அவர்களின் வளர்ச்சியில் கொஞ்சம்  தடைகள் ஏற்பட்டது ஆனால் அவர்களின் நோக்கத்தில் எந்தவித ஒரு மாற்றமும் இல்லை

தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால் தங்களுக்கு வேண்டியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று  முயற்சிகள் மேற்கொண்டு  70 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்துவிட்டார்கள் அடுத்தது அவர்களின் நோக்கம் இந்தியாவை இந்துஸ்தானாக அதாவது இராம் ராஜ்யமாக மாற்ற  சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால் வேறுபட்டு இருக்கும் இந்துக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் .அப்படி அவர்கள் வர வேண்டுமானால் மாற்றுமத துவேஷத்தை அவர்களின் மனதில் விதைத்து . அதன் மூலம் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற முயற்சித்து வருகிறார்கள். மேலும் மாற்று மதத்தினருக்கு எதிராக இந்துக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவரப் பல சதித் திட்டங்கள் தீட்டி அதிலும் சிறிது சிறிதாக முன்னேறிவருகிறார்கள்...


இப்படி அவர்கள் இன்று நேற்று அல்ல ஆண்டாண்டு காலமாகச் செய்து வந்து அதிலும் சிறிது சிறிதாக முன்னேறி இன்று நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளார்கள். ஆரம்பக்காலத்தில் அவர்களின் டார்கெட்டு கிறிஸ்துவமதமாகவே இருந்து வந்தது  .பழைய செய்திகளைத் தேடிப்படித்தால் கிறிஸ்துவ பாதிரியார்களை, கிறிஸ்துவ கண்னியாஸ்தீரிகளை அல்லது சர்ச்சுகளை இடித்தும் தீக்கிரையாக்கியும் தங்களது வெறுப்பை விதைத்து வந்தனர். அப்படிச் செய்தவர்கள் 911  அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தரைமக்கப்பட்டு இஸ்லாமியச் சமுகத்தின் மீது உலகப் பார்வை திரும்பியதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இஸ்லாமிய வெறுப்புகளைத் தீவிரமாக விதைக்கத் தொடங்கி அதில் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்து வருகின்றனர்

.அதன் விளைவாக நடந்ததுதான் சமீபத்தில் நடந்த நிகழ்வு .பல அரபு நாடுகளின் ஒன்று திரண்டு கண்டனம் தெரிவித்தனர்... பின்னும் அதுபற்றி இதுவரை ஒரு வார்த்தையைக் கூட இந்தியப் பிரதமரோ ஜனாதிபதியோ கருத்துகளாகக் கூட தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.  இதிலிருந்து மத்திய அரசு கற்றுக் கொண்ட பாடம் இந்திய முஸ்லீம்களைக் கொன்று குவித்தாலும் மற்ற நாடுகளுக்கு  ஏன் அரபு நாடுகளுக்குக் கொஞ்சம் கூட கவலை இல்லை. ஆனால் அதே நேரத்தில் முகம்மது நபியைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகக் கூறினால் தங்களுக்கு மிக ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டனர்.

அதன் விளைவாக எழுந்ததுதான் இந்த  அக்னிபத் திட்டம், இது அரசிற்கான திட்டம் என்று சொல்லப்பட்டாலும் இதன் மூலம் பயிற்சி பெற்றவர்களை பக்தால்ஸ்களாக்கி அவர்களை  இந்திய முஸ்லிம்களுக்கு எதிராகக் களம் இறக்கிவிடுவதுதான் ஆளும் அரசின் நோக்கம் இதற்கு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் ஆளும் அரசு இந்த திட்டத்தைக் கண்டிப்பாக விலக்கிக் கொள்ளாது என்பதுதான் உண்மை, இப்போது அரைடவுசர்கள் போட்டு  சிலம்பாட்டம் ஆடுவது போல ஆடி பொதுமக்களின் கேலிக்கு உரியவர்களாக ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் இப்போது இருக்கிறார்கள் ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் இளம் வயது   கொண்ட  அதிலும் முக்கியமாக ராணுவப் பயிற்சி பெற்ற மூளைச் சலவை செய்யப்பட்ட இந்துத்துவா வாதிகள் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களாக மொதுமக்கள் மத்தியில் ஒரு வேட்டை நாயைப் போல உலா வருவார்கள் அதற்கு அப்புறம் நிலவும் சூழல் வேறு மாதிரியாக இருக்கும்

இதைத்தான் நான் ஆர் எஸ் எஸ்ஸின் அடுத்த கட்ட முயற்சியாக தங்கள்  இயக்கத்தினருக்கு இராணுவத்திற்கு இணையான பயிற்சி அளிப்பது என்பது என்று சொல்லுகிறேன் அதன் விளைவே அக்னிபட் திட்டம்.

இதற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும்  மத்திய அரசு  எதிர்பார்க்கும் அளவிற்குப் பொதுமக்கள் போர்வையில் அவர்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கண்டிப்பாகச் சார்ந்து பலன் அடைவார்கள் அதில் மிகச் சிறப்பாக பணியாற்றுபவர்களில் 25 % சதவிகிதம் மக்கள் இராணுவத்திற்குள் நுழைவார்கள் , மற்றவர்கள் மூளை சலவை  செய்யப்பட்டு பொதுமக்களிடையே உலவி வருவார்கள்.. அந்த சமயத்தில்  இப்போது நடை பெற்ற மாதிரி மாற்று மதத்தவர்கள் அல்லது அவர்களது  மதக் கடவுளை இழிவுபடுத்திச்  செயல்படும் போது இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்துவர்களோ  வெகுண்டு எழும் போது இந்த அக்னிபத் திட்டத்தில் பங்கு ஏற்றவர்கள் அவர்களுக்கு  எதிராகக் களம் இறங்குவார்கள் அப்படி அவர்கள் இறங்குகையில் பயிற்சி பெறாத மாற்று மதத்தினர்கள் சக்தி இழந்து போவதோடு மிக அதிக  உயிர்ப் பலிகளையும் எதிர் நோக்க நேரிடும்

இப்படிச் செய்வதால் உலகிற்கு இது  இரு மத பிரிவினர்களால் ஏற்படும் கலவரங்களாக மட்டுமே  பார்க்கப்படும்  இதன் மூலம் அரசு நேரிடையாக இறங்காமல் இருப்பதால் உலக நாடுகளிம் மத்தியில் அரசிற்கு இழிவு நிலை ஏற்படாது  அதிக அளவு எதிர்ப்பும் ஏற்படாது என்று இப்போது இருக்கும் அரசு எண்ணுகிறது.இப்படித்தான் நடக்கும் அதுமட்டுமல்ல மாற்று மதத்தினர் இங்கு இரண்டாந்தர குடி மக்களாக்கபடுபாவர்கள் .இந்தியா இந்துஸ்தானாக அல்லது இராம ராஜ்யமாக மாறும். அதன் பின் பழமைவாதிகளால் ஆளப்படும் ஆப்கானிஸ்தான் போல இந்துஸ்தானினும் பழமைவாதிகளால் ஆளப்படும். அதன் பின் மக்கள் இப்படித்தான் உண்ண வேண்டும் உடுத்த வேண்டும் வணங்க வேண்டும் வாழ வேண்டும் படிக்க வேண்டும் என்று  இந்துத்துவாதிகள் கட்டளை இடுவார்கள்


 
@avargal unmaigal
அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. வெங்கோலன் அழிவிற்கு பின் அனைத்தும் அனைவரும் அறிவார்கள்... அதற்கான காலக்கணக்கு விரைவில் வரும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.