Saturday, June 11, 2022

 

@avargal unmaigal

காலம் மாறிடுச்சு அதனால் நாமும் மாறிக் கொள்ள வேண்டும்

"வாழ்க்கையில் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் எப்போதாவது காயப்படுகிறார்கள் , காயப்பட்டு இருப்பார்கள் . எந்த ஒரு  விதமான போராட்டமும் இல்லாமல் இந்த வாழ்க்கையை யாரும் கடந்து செல்வதில்லை. நம் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்வதற்கும் வளர்வதற்கும் முயன்று கொண்டிருக்கிறோம்.  அப்படி கற்று , வளர்வது என்பது  போராட்டங்களின் மூலம்தான் நடக்கிறது.." அப்படி இல்லாமல் ஏதும் தானாகவே வளராது. யாரிடம் கேட்டாலும் இது உன்மைதான் என்று சொல்வார்கள் .சின்ன சின்ன போராட்டங்கள் மூலம் சிலர் நினைத்ததைச் சாதிக்கிறார்கள் .இப்படி சிலர் சின்ன போராட்டம் மூலம் அடைவதை  அல்லது அதே வளர்ச்சியை, முயற்சியை பெரும் போராட்டத்தின் மூலம்தான் சாதிக்க முடிகிறது.

ரு வசதியான மிடில் க்ளாஸ் குடும்பத்தில் உள்ள சிறுவன் அழுது அடம்பிடித்துப் பெற்றோர்களிடமிருந்து 5 ஆயிரம் ,பத்தாயிரம் கறந்துவிடுகிறார்கள் .அதே 5 ஆயிரம் பத்தாயிரம்  சம்பாதிக்க ஒரு ஏழைக் குடும்பத்தலைவன் தினமும் போராடிதான் பெற வேண்டியிருக்கிறது.

நீங்கள் விரும்பு வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறீர்களா இல்லையா என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. நோ ஒன் ஹிவ்ஸ  எ சிட். அதனால் உங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டியதை நீங்கள் செய்ய வேண்டும்.

ஆம்  Life is not fair அதனால் ஏழைக் குடும்பத்தலைவன் போலக் கஷ்டமான சூழ்நிலையிலே தங்கி விடாமல் , உங்கள் சூழ்நிலைகளைப்  பயன்படுத்தி அதிலிருந்து ஒரு  வழியைக் கண்டறியவும். அல்லது சிறந்த சூழ்நிலைகளை உருவாக்கக் கடினமாக உழைக்க வேண்டும்.


ல்லோருக்கும் காலப் போக்கில் வயது ஏறிக் கொண்டுதான் போகும் ,ஆனால் அதற்கு ஏற்ற முதிர்ச்சியடைகிறோமோ என்பதை யோசித்து பார்க்க வேண்டும். பலர் வயதுக்கேற்ற முதிர்ச்சியடைவதில்லை.நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்குச் சிறப்புப் பாடம் என்பது நமக்குக் கிடைத்த தோல்விகளும் மற்றும் மனவேதனைகளும்தான் அதிலிருந்துதான் நாம் மிகச் சிறப்பாகப் பாடம் கற்றுக் கொள்ள முடியும். அப்படி நாம் கற்ற பாடஹ்தை கொண்டு முன்னேற முயற்சிக்கவேண்டும்.

நாம் கவனித்துப் பேணிக் கொள்ளாத செயல்களுக்கு அதற்குரிய விலை கொடுக்கும் போதுதான் நாம் செய்யும் தவறுகள் புரிகின்றன. உதாரணமாக நம் ஆரோக்கியத்தைப் பேணாமல் இருப்பது, நம் அன்புக்குரியவரைப் புறக்கணிப்பது அதிகப் பணத்தைச் சேமிக்காமல் இருப்பது.. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கல்வி கற்காமல் இருப்பது  போன்றவற்றைச் சொல்லாம்.. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய சமயத்தில் கவனிக்கவில்லை என்றால் அதற்கு ஒரு பெரும் விலையை யாரும் கண்டிப்பாகக் கொடுத்தே ஆக வேண்டும்.. உங்களைக் காப்பாற்ற வேறு யாரும் வரமாட்டார்கள்.  அதனால் உங்களுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக நாம் முயற்சிக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் ஏதும் நீங்கள் பெற முடியாது.

ன்றையக் காலம் மாதிரி இன்று இல்லை .இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமானது இல்லை .எந்த ஒரு நட்பும் நிலையானது அல்ல; அது வெறும் கானல் நீரே அதுவும் சூழ்நிலைகளுக்கேற்ப மாறிக் கொண்டுதான் இருக்கிறது .உங்களின் பெற்றோர்கள் மட்டுமல்ல குழந்தைகள் கூட நிபந்தனையான அன்பினைத்தான் செலுத்துவார்களே ஒழிய நிபந்தனையற்ற அன்பினை வழங்குவதுதில்லை இது கசக்கும் உண்மைதான். அதனால் காலம் மாறிடுச்சு அதனால் நாமும் மாறிக் கொள்ள வேண்டும்

றுதியாக ஒன்றை சொல்ல மனம் விரும்புகிறது மதத்தால்  மத வெறியால் இன்றைய காலத்தில் நாம் முன்னேற முடியாது. மனித நேயத்தால் மட்டுமே சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும். இது மனிதனுக்கும் மட்டுமல்ல  ஒரு நாட்டிற்கும் பொருந்தும்

அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இன்று எனக்கு விடுமுறை என்பதால் மனம் போன போக்கிலே எழுதி கிறுக்கியதுதான் இந்த பதிவு

2 comments:

  1. அனுபவம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்...

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    மனிதநேயம் தான் சிறந்தது.
    மனம் நன்றாக சொல்லி இருக்கிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.