Tuesday, July 17, 2018

தினசரி செய்திகளும்  நையாண்டி பதில்களும்

//திமுக வின் கடைக்கோடி தொண்டன் என்பது எனக்கு பெருமை - உதயநீதி//

திமுகவில் மட்டும்தான் கடைக்கோடி தொண்டன் மேடை ஏறுவது மட்டுமல்ல தலைவர் & தளபதியின் வீட்டிலும் உண்டும் உறங்கவும் செய்வான். இதை வேற எந்த கட்சியிலும் நீங்க பார்க்க முடியாது



ஒரு படத்துக்கு 100 கோடி சம்பளம் வாங்கி கொண்டவர் பெண்டாட்டி பேரில் இருக்கும் கடனை அடைக்க உதவாதவர்.. இப்ப தமிழக மக்களை காப்பாற்ற போறதாக நடித்து கொண்டிருக்கிறார்

இப்படி பொண்டாடிக்கு உதவாதவர் ஊருக்கா உதவ போறார். ஆமாம் அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?

இன்றைய செய்தி மதிமுக தொண்டர்கள் ஸ்டாலினை விமர்சிக்க கூடாது...மீறி செய்தால் கட்சியில் இருந்து  நீக்கப்படுவார்கள் - வைகோ

நாளைய செய்தி :திமுக தொண்டர்கள் மோடியை விமர்சிக்க கூடாது...மீறி செய்தால் கட்சியில் இருந்து  நீக்கப்படுவார்கள் -ஸ்டாலின்



8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பது தொடர்பாக ஆட்சேபனை மனு கொடுக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதி வரை ஆட்சேபனை மனுவை விவசாயிகள் அளிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதன் பின் ஆட்சேபனை மனு கொடுத்தவர்கள் மீது சமுக விரோதிகள் என்று பட்டம் குத்தப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்படும்

வரும் பாராளுமன்ற தேர்தலில் 90% பாஜக வேட்பாளர்கள் தோல்வியை சந்திப்பார்கள்- அரியானா மாநில பாஜக எம் பி ராஜ்குமார்.

ஹீஹீ நிச்சயம் இவன் சமுக விரோதியாகத்தான் இருப்பான் . நிச்சயம் கிறிஸ்துவ மிஷினிரி குருப்பிடம் இருந்து பணம் வாங்கி இருப்பான்

திமுக மற்றும் அதிமுக ஆன்மீக கட்சியாக மாறினால் கட்சியின் பெயர் இப்படித்தான் மாறும்
திமுக (திருச்செந்தூர் முருக கடவுள் )
அதிமுக  (அருள்மிகு திருச்செந்தூர் முருக கடவுள் )


அரசுகளுக்கு எதிராக இருப்பவர்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அரசியல்தலைவர்கள் அழைக்கிறார்கள் ஆனால் மக்களுக்கு எதிராக செயல்படும் அவர்களை பன்னிகள் என்று அழைக்கலாமா?

போட்டோசாப் மென்பொருளால் ஏமாந்த மக்கள் இந்திய மக்களாகத்தான் இருக்க வேண்டும்


அம்பானிக்கு செகரட்டரியாக வேண்டுமென்றால் முதல் தகுதி அவர் இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கபட்டு இருக்க வேண்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்
17 Jul 2018

4 comments:

  1. இப்படியாகிட்டுதே தமிழர்களின் நிலை!!!

    ReplyDelete
  2. எங்கிருந்துதான் செய்திகள் சேகரிக்கிறீர்களோ

    ReplyDelete
  3. கட்சியின் பெயர் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  4. ரசிக்கவைக்கும்படியான சிந்தனை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.