மனிதனாக பிறந்தவர் வாழ்வில் பெறவேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நிறைவாக வாழ்ந்து கொண்டிருப்பவர் கலைஞர். மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜர் மட்டுமல்ல வாழும் தலைவர்களான வாஜ்பாய், சோனியா ,மோடி வரை யாரும் அந்த செல்வங்களை நிறைவாக பெறவில்லை.
சில தலைவர்களை போல மர்ம மரணமும் கலைஞருக்கு ஏற்படபோவதில்லை தன் சொந்த நாட்டு மக்களால் அவர் சுட்டு கொல்லப்படப் போவதுமில்லை. அந்நிய நாட்டு மக்களாலும் அவர் சுட்டு சாவப் போவதில்லை. பெரும் விபத்து ஏற்பட்டு தூர் மரணமும் ஏற்படப் போவதில்லை கலைஞருக்கு மரணம் என்ற ஒன்று ஏற்படுமாயின் நூறுசதவிகித இயற்கையான நிறைவான மரணமாகத்தான் இருக்கும் . அவர் தெய்வமும் அல்ல இறந்தால் அவர் மீண்டும் உயிர்தெழுவதற்கு அவர் தலைவர். அதனால்தான் அவர் மரணத்தோட போராடி போராடி வெற்றி பெற்று கொண்டிருக்கிறார் இன்றும் வெற்றி பெற்று இருக்கிறார்.
வாழ்வின் முடிவிலிருந்து எந்த மருத்துவத்தாலும், மருத்துவராலும் காப்பாற்ற முடியாது. நாம் சேர்த்த எதிலிருந்தும் ஓர் குன்றின்மணி அளவுகூட எடுத்துச் செல்ல முடியாது. நாம் பூவுலகிற்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. பூவுலகை விட்டுப்போகும்போது ஏதும் கொண்டு செல்லப் போவதுமில்லை. இது சத்தியமான யதார்த்தமான நிஜம்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
#Great leader #kalaignar #karunanidhi
ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் எனக்கு கலைஞர் ஐயாவை பிடிக்கும். இனி அவர் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மூப்பினால் உண்டாகும் வேதனையை அனுபவிக்கனும். அதனால், இதோடு அவர் மரணித்தால் அவருக்கு நல்லது.
ReplyDeleteஎன் விருப்பமும் இதுதான்.
Deleteஅவரின் நலவிரும்பிகள் கலைஞர் ஐயா வேதனைக்கு ஆளாகாம மரணிக்கனும்ன்னு நினைச்சு மனசை தேத்திக்கனும். இதுதான் அவருக்கு அவர்கள் காட்டும் உண்மையான அன்பின் வெளிப்பாடாகும்.
ReplyDeleteஅவர் தெய்வமும் அல்ல இறந்தால் அவர் மீண்டும் உயிர்தெழுவதற்கு
ReplyDeleteஇது மட்டுமே உண்மை.
ஏற்றுக்கொண்டர்களுக்கே தலைவன்
ஏற்றுக்கொள்ளாதவர்கு தலைவலி.
அவரைத் தெய்வம்னு யாரும் சொன்னதில்லையே.உனக்கு ஏன் திருகு வலி?
ReplyDeleteகலைஞரின் அரசியலை விட அவரது தமிழ்ப்புலமை அதிகம்பிடிக்கும் பள்ளியில் அதிகம்படிக்காஅவிட்டாலும் தமிழ் இலக்கியங்களில் அவரது புலமை ஆச்சரியப்படுத்தும்
ReplyDeleteநலம்பெறுவார் என்னும் நம்பிக்கை இருக்கின்றது
ReplyDeleteஎல்லாம் சரி, ஏன் சார் இந்த ஏகவசனம்?!

ReplyDeleteசம்மந்தமில்லாத ஒரு விசயம்
மதிமாறன்னு ஒரு ஆள் தன்னை பேச்சாளன்னு சொல்லிக்கிட்டு அலைகிறாரு தெரியுமில்ல? அவருக்கு கலைஞர்னு உச்சரிப்பு வரமாட்டேன்கிது. கலைஞ்சர், கலைஞ்சர்னே சொல்றாரு.
ஞ உச்சரிக்கத் தெரியாத ஒரே பேச்சாளர் இவர்தான்னு நினைக்கிறேன். ;)
நலம் பெற வேண்டுமென்பது எல்லாரின் விருப்பமும் .
ReplyDelete