Monday, July 30, 2018

கலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா?
கலைஞரின் உடல் நலக் குறைவு காரணமாக காவிரி ஹாஸ்பிடலில் அவரை அட்மிட் செய்து இருக்கிறார்கள், ஒட்டு மொத்த மீடியாவும் ராப்பகலாக அங்கேயே இருக்கின்றனர்... திமுக தொண்டர்களும் எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி கலைஞரின் உடல் நலத்தை மட்டும் நோக்கமாக கருதி தங்களை வருத்தி அங்கே காத்து கோஷமிட்டு, பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்..


ஆனால் கலைஞரை தூற்றியவர்களும் முதுகில் குத்தியவர்களும் அவரது இயக்கத்தை அழிக்க துடித்து கொண்டிருக்கும் தலைவர்களும் வந்து பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.. அவர்களுடன் ஸ்டாலின் கை குலுக்கி  சந்தித்து பேசி வருகிறார் ஆனால் கலைஞரின் நலனே தங்கள் நலன் என்று கருதி இது வரை தங்கள் நலங்களை துச்சமாக தூக்கி ஏறிந்தவர்கள் பல தெருவிலே நின்று வாழ்க கலைஞர் வாழ்க வாழ்கவே என்று கதறி கொண்டிருக்கின்றனர்.

கலைஞர் அட்மிட் செய்து இருக்கும் அறைக்கு அருகாமையில் உள் அறையில் இருந்து மாற்று கட்சி மற்றும் துரோகிகளை கண்டு வரும் ஸ்டாலினோ அல்லது கலைஞரின் மற்ற பிள்ளைகளோ ஒரு அறையில் அமர்ந்து தனது கட்சிகாரகள் பத்து பத்து பேராக உள்ளே அழைத்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து நம்பிக்கை ஊட்டுவதோடுமட்டுமல்லாமல் ஒரு வேளை கலைஞருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கொள்கைக்கு இணங்க கலைஞர் கட்டி காத்த கட்சியை அவரது கொள்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம் என்று பேசி கட்சியை கட்டுக் கோப்பாக வளர்க்கலாமே?


அதை எல்லாம் விட்டுவிட்டு கலைஞரை காறிதுப்பியவர்களையும் புற முதுகில் குத்துபவர்களை சந்தித்து உரையாடுவது என்ன நிலை?

அன்புடன்
மதுரைத்தமிழன்

உயிருடன் இன்னும் இருக்கும்  தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர்களை பேனர்களை சொந்த கட்சிகாரர்களே அடித்து காத்திருக்கும் கொடுமையை என்னவென்று சொல்லுவது..... தமிழர்கள் இப்படி கோமாளியாக ஆகிவிட்டார்களே 




கொசுறு  வாஜ்பாயும் ஒரு நல்ல தலைவர்தான் அவர் உடல் நிலையும் சரியில்லைதான் அவர் சீரியஸாக இருந்த போது ஊடகங்கள் இந்தளவு செய்திகள் வெளியிடவில்லை. ஒரு வேளை அப்படி வெளிட்டால் வாஜ்பாய்க்கு நல்ல பெயர் கிடைத்து தனக்கு அவப் பெயர் வந்துவிடுமோ என்று மோடி கருதியிருக்க கூடுமோ அதனால்தான் என்னவோ செய்திகள் அதிகம் வெளிவராமல் தடுக்கப்பட்டனவா?

தமிழ் டிவி சேனல்களை ஆன் பண்ணலாமா  வேண்டாமா? அதை ஆன் பண்ணவே பயமாகவும் வெறுப்பாகவும் இருக்கு? ஒரு செய்தியை தவிர அவர்களுக்கு வேறு செய்தியே கிடைக்கவில்லையா என்ன?தமிழ் சேனல்களின் நிர்வாக ஆசிரியர்கள் கொஞ்சம் புத்திசாலிகள் என்று நினைத்து இருந்தேன் அவர்கள் இந்த அளவிற்கு முட்டாள்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை

2 comments:

  1. அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் ? என்ற நிலைதான்.

    ReplyDelete
  2. இறப்பது உறுதியாக்கி விட்டார்களோ...!
    பதாகைகளை மறைத்து வைத்துள்ளார்கள்...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.