மனிதனுக்கு மனசுன்னு ஒன்று உண்டு.(அப்படினு நாம நம்புறோம்) அப்பிடிப்பட்ட மனிதர்கள் தாங்கள் உயிராக நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்கு ஒரு மனசு இருந்தால்..??அப்படி இருந்து அது ஒரு மனிதனிடம்.. மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! என்ற நினைப்போடு படிக்கவும்
டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க.. (மெசேஜ் ஒன்று வருகிறது.)
செல்போன் மனசு : என்னடா இது நிம்மதியா தூங்கவுடுறாங்களா.. அர்த்த ராத்திரியில யாருக்கு என்ன கொல்லை போகுதுதோ தெரியல.. இந்த நேரத்துல என்ன மெசேஜ் வேண்டியிருக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட்தான். என்ன பொழப்புடா இது! ஆஹா எந்திரிசிட்டான்யா..எந்திரிசிட்டான்யா என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா வொய்ப்தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "வொய்ப்ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..?
"செல்லம் தூங்கிட்டியாடா?"
செல்போன் மனசு : அடிப்பாவி அர்த்த ராத்திரி இரண்டு மணிக்கு தூங்காமல் மெகா சீரியலா பார்த்துகிட்டிருப்பாங்க! நல்ல கேள்விடா
ஆஹா பதில் அனுப்ப தொடங்கிட்டான்யா தொடங்கிட்டான் நம்மை இனி தூங்கவுடமாட்டாங்கயா
"ஆமா செல்லம் இப்பத்தான் தூங்கினேன். நீ தான் என் கனவுல வந்த. இரண்டு பேரும் ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கிட்டிருந்தோம்."
செல்போன் மனசு : டேய்,சத்தியமா சொல்லுடா உன் கனவில் அவளாடா வந்தா! காபி கடையிலிருந்து டாஸ்மார்க் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர்கள் ,வாடகை வீட்டுகாரன்தானடா வந்தாரு! ஏன்டா என்னையும் பொய் சொல்ல வைக்குற.
.
டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க...
செல்போன் மனசு : பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு மேல படுத்துவாளே, என்ன சொல்லியிருக்கா
!
"உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?"
செல்போன் மனசு : ஆமாடி, இதுதான் இப்போ ரொம்ப முக்கியம்! என்ன டிரெஸ் போட்டிருந்த, பவுடர், உதட்டு சாயம் சரியா இருந்திச்சா!
எல்லாம் வரிசையா கேளுங்க
" செல்லம், நீயும் நானும் வொய்ட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்தே.."
செல்போன் மனசு : டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! வொய்ட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!
செல்லம் நீ இன்னைக்கி வழக்கத்தை விட ரொம்ப அழகா இருந்தடி!
செல்போன் மனசு : ஆமாம் இன்னிக்கிதான் அவதலைக்கு குளிச்சா அதனலாதான் ஏதோ பாக்க அழகா இருக்கிற மாதிரி இருக்கா அவ மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளிப்பாங்கிறது உனக்கு இன்னும் தெரியாதாடா டேய் ஸ்டாப் பண்ணுங்கடா வாயில ஏதாவது வரப் போகுது.
அவ என்னமோ அடிக்க ஆரம்பிச்சுட்டாலே இன்னிக்கு சிவராத்திரிதான் நமக்கு
டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க..
செல்போன் மனசு : ஆமாம் இன்னிக்கிதான் அவதலைக்கு குளிச்சா அதனலாதான் ஏதோ பாக்க அழகா இருக்கிற மாதிரி இருக்கா அவ மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளிப்பாங்கிறது உனக்கு இன்னும் தெரியாதாடா டேய் ஸ்டாப் பண்ணுங்கடா வாயில ஏதாவது வரப் போகுது.
அவ என்னமோ அடிக்க ஆரம்பிச்சுட்டாலே இன்னிக்கு சிவராத்திரிதான் நமக்கு
டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க..
நீங்க கூடத்தான் இன்று ரஜினி மாதிரி அழகா இருந்தீங்க..
செல்போன் மனசு : பாத்தியா உனக்கு வயசு ஆயிடுத்துன்னு சொல்லாம சொல்லுராடா உனக்கு எங்க இது எல்லாம் புரியப் போதுடா அது மட்டுமல்லாமல் நீ இரவல் வாங்கி போட்ட டிரெஸ் அவளூக்கு எங்க தெரியப் போகுதுடா. ஏண்டா உங்களுக்கு இப்படி பொய் சொல்லுரத தவிர வேறு ஏதும் தெரியாதா?
இவன் என்ன டைப் பண்ண ஆரம்பிச்சுட்டான்
டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க..
நன்றி செல்லம். எனக்கு ஒரு நாள் உன் கையால சமைச்சு சாப்பிடனும் ஆசை. எனக்கு சமைச்சு போடுவியா செல்லம்?
செல்போன் மனசு : டேய் ஏன்டா இந்த விபரீத ஆசை. அவ சமைச்சா பத்திய சாப்பாடு சாப்பிட்ட மாதிரி இருக்குமடா உப்பு உரப்பு புளிப்பு ஒன்னும் இருக்காதுடா ஏனா அவளுக்கு சமைக்க தெரியாதுடா
டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க.
செல்போன் மனசு : அவ ஏதோ பதில் அனுப்பி இருக்காளே என்னனு பார்ப்போம் தூக்கம் போனது போச்சி இந்த கண்ராவிய பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது
கண்ணா கண்டிப்பா ஒரு நாள் உங்களுக்கு சமைச்சு போடுறேன்.
செல்போன் மனசு : பாத்தியா உனக்கு வயசு ஆயிடுத்துன்னு சொல்லாம சொல்லுராடா உனக்கு எங்க இது எல்லாம் புரியப் போதுடா அது மட்டுமல்லாமல் நீ இரவல் வாங்கி போட்ட டிரெஸ் அவளூக்கு எங்க தெரியப் போகுதுடா. ஏண்டா உங்களுக்கு இப்படி பொய் சொல்லுரத தவிர வேறு ஏதும் தெரியாதா?
இவன் என்ன டைப் பண்ண ஆரம்பிச்சுட்டான்
டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க..
நன்றி செல்லம். எனக்கு ஒரு நாள் உன் கையால சமைச்சு சாப்பிடனும் ஆசை. எனக்கு சமைச்சு போடுவியா செல்லம்?
செல்போன் மனசு : டேய் ஏன்டா இந்த விபரீத ஆசை. அவ சமைச்சா பத்திய சாப்பாடு சாப்பிட்ட மாதிரி இருக்குமடா உப்பு உரப்பு புளிப்பு ஒன்னும் இருக்காதுடா ஏனா அவளுக்கு சமைக்க தெரியாதுடா
டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க.
செல்போன் மனசு : அவ ஏதோ பதில் அனுப்பி இருக்காளே என்னனு பார்ப்போம் தூக்கம் போனது போச்சி இந்த கண்ராவிய பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது
கண்ணா கண்டிப்பா ஒரு நாள் உங்களுக்கு சமைச்சு போடுறேன்.
"டேய் என்செல்ல புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்குதடா! நா என்ன பண்ணடா நாயே?
"
செல்போன் மனசு : ஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீடம்புபேல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா!அடங்குங்கடா!
"என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா!"
செல்போன் மனசு : அடச்சீ.. தூ.. எச்சி எச்சி! உம்மான்னு அடிச்சா போதாதாடா.. அந்த இழவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. மவனே அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால அப்பங்கிட்ட செருப்பு அடிதாண்டா கிடைச்சதுன்னு மெசஜ்தாண்டா வரும் லூசுப்பயல! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.
" ஏய், எனக்கு உன் பேரைச் சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!"
செல்போன் மனசு : எனக்கு வேதனை வேதனையா வருதுடா. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! 'கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவனை விட செல்லைப் படைத்து இலவச எஸ்.எம்.எஸ்ஸை படைத்த மனுசன் தான் கொடியவன்'
போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல!
"செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?"
மோடியின் ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலைவிட அதிகமாப் பிடிக்கும். ஆமாம் என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?"
செல்போன் மனசு : கடன்காரி, உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா, நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.
" .முதல் ப்ளாக், முதல் பதிவு, முதல் கமெண்ட்ஸ் முதல் லைக்ஸ், முதல் செல், முதல் காதல்... இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்"
செல்போன் மனசு : டேய் அளக்காதடா! நீ அண்ட புழுகு பண்றேடா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெசேஜைத் தான நீ அனுப்புன. அதை அதுக்குள்ள மறந்துட்டியாடா ...நடத்து,நடத்து ! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ!
(சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞன் இருபதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு 'சாட்'டை முடிக்கிறான்.)
செல்போன் மனசு : முடிச்சிட்டாங்களா! என்னது இவன் திருப்பி எதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வக்கப் போறானா.. எத்தனை மணிக்கு? அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா! அதுவரைக்கும் 'வொய்ப்' திருப்பி 'சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.
(காலை பதினொரு மணி..)
செல்போன் மனசு : அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ எதோ ரிமைன்டர் செட் பண்ணி வச்சிருக்கான்.
" இன்று திங்கள்கிழமை குளிக்க வேண்டும்."
செல்போன் மனசு : அட நாத்தம் புடிச்சவனே! ரிமைன்டர் சிஸ்டத்தை கண்டுபிடிச்சவருக்கு இந்த விஷயம்
தெரிஞ்சா 'ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான்.விட்டா எதுக்கெல்லாம் ரிமைன்டர் வைப்பிங்கடா ! டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது.எழுந்திரிச்சுத் தொலைடாண்டா நாத்தம் பிடிச்சவனே. அடப்பாவி ரிமைன்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே! அப்ப இன்னிக்கும் குளிக்க மாட்டான் போல!
டேய் நீ குளிக்க வேண்டாம்டா! டேய் என்னை கொஞ்சமாவது கவனிடா....எனக்கு தீனி போடுடா. பேட்டரில சார்ஜ் தீரப்போதுடா! சார்ஜ்ர்ல போடுறா! டேய் உன்னைதாண்டா இவன் காதுல எங்க விழப்போகுது. சோம்பேறி!
(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)
'ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினம்..'(ரிங்க்டோன் ஒலிக்கிறது)
செல்போன் மனசு : அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய! ரிங்டோனைப் பாரு. ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினமுனுட்டு. டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எந்திரிச்சிட்டான்யா....எந்திரிச்சிட்டான்யா
"ஹலோ.. ஆங்.. குட் மார்னிங் சார்.. கண்டிப்பா..சார் இன்னிக்கு கண்டிப்பா முடிச்சி கொடுத்திரலாம் சார்.. இல்ல சார்.. ஆமா சார கொஞ்சம் பிஸி தான்சார்.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்.. ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே சார் நன்றி சார்......
செல்போன் மனசு : தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியிருக்கே! மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு.
அலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல! நீ தூங்கிக்கிட்டே இரு.
நானும் தூ..ங்.....கு.......
(செல் சார்ஜ் இல்லாமல் டெட் ஆகிவிட்டது.)
இது ஒரு மீள் பதிவு.....வலைதளம் ஆரம்பித்த போது எழுதியது அப்போது என்னை பலருக்கு தெரியாது....
https://avargal-unmaigal.blogspot.com/2010/12/blog-post_30.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
செல்பேசியின் நிலைப்பாட்டை எட்டு வருடத்திற்கு முன்பே ரசிக்கும்படி எழுதி இருக்கீங்களே.... ஸூப்பர்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி
Deleteஹா ஹா ஹா இந்த செல்போன் மனசு, ட்றுத்தின் மனதுதானே?:) கண்டு பிடிச்சுட்டேன்ன்ன்:))..
ReplyDeleteநல்ல நகைச்சுவை .. அதிரா வந்தேன் ரசிச்சேன் சிரிச்சுக்கொண்டு போகிறேனெ ந ட்றுத் எழுந்ததும் ஜொள்ளி விடுங்கோ:)
Deleteஎன்மனசை யாரும் அறிய முடியாது என் மனைவி உள்பட
செல் போனுக்கு மட்டும் உசிரு இருந்தா விஜயகாந்த் மாதிரி "தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க "ன்னு சொல்லும் அந்த அளவுக்கு முரண்கள் உள்ள மனிதர்கள் நாம்
Deleteரஜனி அங்கிள் நடிச்ச படத்திலிருந்து ஒரு யங் லிக்:) போட்டோவைப் போடாமல் இப்பூடி மேக்கப் இல்லாத ஃபோட்டோவைக் கஸ்டப்பட்டுத் தேடி எடுத்துப் போட்டமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:))
ReplyDeleteரஜினி மேலே உங்களுக்கு அவ்வளவு ஆசையா என்ன?
Deleteதுளசி: ஹா ஹா ஹா ஹா ஹாஹா ரொம்பவே ரசித்தோம் மதுரைதமிழன்..
ReplyDeleteகீதா: ஹா ஹா ஹா ஹ ஹா ஹா ஹையோ சிரிச்சு முடிலைப்பா..அதுவும் "செல்ஃபோன் மனசு...அந்த உம்மா எனக்கு வேற கொடுக்கணுமா கருமம் கருமாம்...ஹா ஹா ஹா ஹா நெசமாவே செல்ஃபோன் பாவம் தான்...ஹா ஹா ரசித்தோம் மதுரை...ஆமாம் அப்பல்லாம் உங்களுக்கும் எங்களைத் தெரியாது..நாங்க வலைல வரவே இல்லையே.ஹிஹிஹிஹிஹி...
அது சரி அப்ப ஸ்மார்ட் ஃபோன் உண்டா என்ன?!! இம்புட்டு நேரம் மெசேஜ் அனுப்ப..எஸ் எம் எஸ் லியே இம்புட்டுமா...ஆ ஆ ஆ ஆ....அப்ப எல்லாம் மோடி எங்க வந்தாரு??!!!
இப்ப எல்லாம் செல்போனில் உம்மா கொடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் யாகூ காலத்து ஆட்கள் சாட்லதான் உம்மா கொடுப்போம்
Deleteஅப்ப மட்டுமில்லை இப்பவும் என்னை உங்களுக்கு தெரியாது என் டூப்பை மட்டும் உங்களுக்கு தெரியும்
அப்ப 2 ஜி ராசா வந்தார் மறுபதிவில் மோடி வந்து இருக்கிறார்
செம்ம காமெடி பாஸ் நல்லாவே ரசிச்சோம்...
ReplyDeleteரசித்தது கருத்துகள் இட்டதற்கு நன்றி
Deleteசெல்போனுக்கு உயிர்க்கொடுத்த வள்ளலே வாழ்க :)
ReplyDeleteஎப்டியோ நீங்க நினைச்சதையெல்லாம் போனை சொல்ல வச்சிட்டீங்க
Deleteஉஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
ஹாஹா... நல்ல கற்பனை. இப்போது இன்னும் நிறைய பிரச்சனைகள் தரும் விஷயங்கள் வந்துவிட்டது!
ReplyDelete