Sunday, July 15, 2018

@avargal unmaigal
மோடியும்  ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )


ஹலோ நான் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பேசுறேன்.. நீங்க யாரு?

நாந்தான் பைனான்சியர் புரோக்கர் மோடி பேசுறேன்...


ஓ.... நிரவ் மோடியா? ஆமாம் எப்படி இருக்கீங்க?



நான் நிரவ் மோடியல்ல நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர்..


ஒகே ஒகே அப்ப ஏன் நீங்க  பைனான்சியர் புரோக்கர் மோடின்னு சொன்னீங்க பிரதமர் என்று சொல்லி இருக்கலாமே?

அதுவா இந்திய மக்களுக்ககு மட்டும்தான் நான் பிரதமர் ஆனால் மற்ற எல்லோரும் என்னை பைனான்சியர் புரோக்கர்ன்னுதான் கூப்பிடுவாங்க... அதனால அப்படி அறிமுகப்படுத்திகிட்டேன்

ஒகே ஒகே புரிஞ்சது.... மோடி நானே உங்களை கூப்பிடனும் என்று நினைச்சேன் நல்ல வேளை நீங்களே கூப்பிட்டுடீங்க... வருகிற நவம்பரில் முதல் நீங்கள் ஈரானில் இருந்து ஏதுவும் இறக்குமதி பண்ணக்கூடாது நல்லா ஞாபகம் வைச்சுகுங்க..

டிரம்ப் அண்ணே அங்க இருந்துதான் நாங்க அதிகமாக பெட்ரோல் இறக்குமதி பண்ணுறோம் அவங்கதான் மிகவும் சீப்பாக எங்களுக்கு ஸ்பெஷல் ரேட்டுல தராங்க வேற யாரிடமும் வாங்கினா விலை அதிகமாக இருக்குமே அது எங்களுக்கு கஷ்டமாக இருக்கும்மே


யோவ் மோடி நீ என்னமோ உன் சொந்தகாசில் பெட்ரோல் போட்டு உலகத்தையை சுற்றி வர மாதிரியல்லவா பேசுற, சொந்த காசுல பெட் ரோல் போடுறவனே பிக் பாஸ் பார்த்துகிட்டு அமைதியா இருக்கிறான் நீ ரொம்ப அலட்டுறே..


இல்லை அண்ணனே  வேற நாட்டில் இருந்து அதிக விலைக்கு வாங்கினால் இந்திய பொருளாதார வளர்ச்சி ரொம்ப கம்மியாகும்ண்ணே


யோவ் சும்மா வாயால வடை சுடாதே உம்முடைய நாளாண்டு  ஆட்சி காலத்தில் என்னமோ இந்திய பொருளாதாரம் அப்படி வானத்தை தொட்டது மாதியல்லவா வடை சுடுறே... சும்மா நான் சொல்லுறதை கேட்டு ஒழுங்காக நட


அண்ணே நான் என் கருத்தைத்தான் சொன்னேன் தப்புன்னா மன்னிசிக்குங்கண்ணே..
அண்ணே இப்ப H1 விசா, க்ரீன் கார்ட் இதனால இந்திய மக்கள் பாதிக்கப்படுகிறாகள் என்று சொல்லுறாங்களே அது உண்மையா?

ஆமாம் அது உண்மைதான் இப்ப அதை பற்றி ஏன் கேட்குறே?

இல்லைண்ணே  உங்கள் புதிய விசா கொள்கையால் என் அமெரிக்க விசாவிற்கு  பிரச்சனை ஏதும் இருக்குமா என்று தெரிஞ்ச்சுக்கத்தான் கேட்டேன்

உம்முடைய விசா பற்றி கவலைப்படாதே நீ பிரதமாராக இருக்கும் வரை பிரச்சனைகள் இருக்காது ...பயப்படாதே

 அப்படியே ஒரு நிமிஷம் லைனில் இருங்க என் உதவியளாரிடம் ஒன்று சொல்லிட்டுவரேன்

ஒகே ஒகே சீக்கிரம் வா..

மோடி உதவியாளரிடம்  உடனே எல்லா ஊடகங்களையும் கூப்பிட்டு மோடி டைரக்ட் லைனில் ட்ரெம்பிடம் பேசினார் இந்திய மக்களுக்கு அமெரிக்க விசா வழ்ங்குவதை பற்றி பேசி அமெரிக்க அதிபரிடம் தன் கடும் கண்டண்த்தை தெரிவித்தார் என்றி எல்லா ஊடகங்களிலும் செய்தி வரும்படி செய் என்று ஃபேக் செய்தியை  சொல்லிவிட்டு மீண்டும் டெலிபோன் லைனுக்கு வந்தார்..

டிரெம்ப் அண்ணே லைலில் இருக்கிறீங்களா?

எஸ் எஸ்... மோடி ஒன்று ஞாபகபடுத்த விரும்புறேன் நான் உங்கள் நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து இருக்கிறேன் அதை தொடர்ந்து நீங்கள் எங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதித்து இருப்பதாக கேள்விபட்டேன் அது சரியல்ல அதனால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் கம்மியானல் மிகவும் கடும் நடவடிக்கை எடுப்பேன்...

ட்ரெம்ப் அண்ணே நான் அதிக வரிவிதித்தது உண்மைதான் ஆனால் உங்களிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவு குறையாது அதற்கு நான் க்கியரண்டி தருகிறேன்


அது எப்படிப்பா வரி அதிகம் விதித்தால் வீற்பனை பாதிக்குமே அப்புறம் எப்படி அதிக பொருட்களை உன்னால் இறக்குமதி செய்ய முடியும் நீ என்னை ஏமாற்ற பார்கிறாயா என்ன?

அண்ணே நான் எங்க நாட்டு மக்களை ஏமாற்றினாலும் ஏமாற்றுவேனே தவிர உங்களை ஏமாற்றமாட்டேன்.. அப்புறம் எங்கள் நாட்டு மக்களை பற்றி உங்களுக்கு தெரியாதுண்ணே

நான் அதிக வரி விதித்து உங்க நாட்டு பொருட்களின் விலை அதிகமானாலும் எங்கள் நாட்டு மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி பெருமைப்பட்டு கொள்ளாவார்களே தவிர அவர்கள் வாங்காமல் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு வெளிநாட்டு பொருட்கள் என்றால் அவ்வளவு மோகம்

ஆஹா ஹா ஹா  மோடி நீ உன் நாட்டு மக்களை நல்லா எடை போட்டு வைச்சிருக்கிறே...

அண்ணே வருகிற ஜனவரியில் எங்க நாட்டு குடியரசு தினவிழாவீர்கு நீங்க கண்டிப்பாக வரணும்...

எதுக்கு என்னை அங்க வர சொல்லுற...


அண்ணே நீங்க வந்து குடியரசு தின இராணுவ அணி வகுப்பை பார்த்துவிட்டு எங்களுக்கு என்னனென்ன தேவை என்று சொன்னால் அதை உங்களிடம் இருந்து நாங்கள் இறக்குமதி செய்து கொள்வோம் அதற்காகத்தானே உங்களை வர சொல்லுகிறேன்...

யோவ் நீ நல்ல மனுசனாக இருக்கிறாய் ஆமாம் பதிலுக்கு உனக்கு என்ன  வேண்டும்
அண்ணே வரும் தேர்தலில் ஒரு வேளை தேர்தலில் தோற்று பிரதமராக முடியவில்லை என்றால் என்னுடைய அமெரிக்க விசாவை மட்டும் கேன்சல் பண்ணிறக்கூடாது. அதுமட்டுல்ல  எங்க்ள் நாட்டுக்கு வேண்டிய ராணுவதளவாடங்களை உங்களிடம் இருந்து இறக்குமதி செய்வதற்காக எனக்கு நல்ல கமிசன் தந்துவிட வேண்டும் அவ்வளவுதானே அதுக்கு மேல் நான் பெரிசா ஏதும் ஆசைப்பட மாட்டேன்


சரி சரி இது வரை நீ எங்க நாட்டுக்கு பல உதவிகள் செஞ்ச சரி ஆனால் நான் அங்கு வந்தால் எனக்கு என்ன செய்வே...... 

நீங்கள் இங்கு வந்தால் தாஜ்மகால் கூட்டிட்டு  போறேன்..
 
யோவ் உனக்கு தெரியாதா நான் அமெரிக்காவிலே தாஜ்மாகால் கேசினோ கட்டி வைத்து இருக்கிறேன் அதனால அது வேண்டாம் வேற் வேற...



நான் காந்தி ஆசிரமத்திற்கு உங்களை கூட்டிட்டு போறேன்...
.

யோவ் யாரு அரை குறையுமா டிரெஸ் போட்டுகிட்டு சுதந்திரத்திற்கு போராடினாராரே அவருடைய இடத்துக்கா உனக்கு புத்தியே இல்லைய்யா... உனக்கு தெரியாதா உங்கள் நாட்டில் சன்னி தியோல் என்ற நடிகை மிக சுதந்திரமாக அரைகுறையாக டிரெஸ் போட்டு இருப்பாளே அவர் இடத்துக்கு கூட்டு போய்யா அதைவிட்டுவிட்டு காந்தி ஆசிரம்ம் அது இதுன்னுட்டு...


ஹீஹீ நிச்சயம் ஏற்பாடு செய்யுறேன்.... அப்படியே ஆந்திராவில் ஸ்ரீரெட்டியையும் பார்த்துடுறீங்களா..
யோவ் மோடி உனக்கு ரொம்ப குறும்புய்யா.....


ஹீஹீ... ஹாஹா


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. //நிச்சயம் ஏற்பாடு செய்யிறேன்//

    இந்த வார்த்தை ஏதோ இடிக்கிறதே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.