Sunday, July 22, 2018

@avargalunmaigal
இந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்

தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு கவிதையை மேற்கோள் காட்டியதற்காக 'புதிய தலைமுறை' நெறியாளர் கார்த்திகேயன் மீது வக்கிரத் தாக்குதலைத் தொடுத்துள்ளது இந்த இந்து பக்தாள்ஸ் கும்பல்.. நல்லா கவனிச்சுங்க இந்து மத பெரியவர்களோ இந்து மதத்தை தெய்வீகமாக கருதி வழிபாடு செய்து வரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் யாரும் இந்த தாக்குதலை தொடுக்கவில்லை அவர்கள் அமைதியாக தொடரந்து தங்கள் வழிபாடும் தெய்வங்களை வழிபாட்டு வருகிறார்கள்... ஆனால் இந்த பக்தால்ஸ் மட்டும் துள்ளி குதிக்கிறார்கள்


இந்த பக்தால்ஸ் எப்போதும் மதத்தை இழிவு படுத்தி எழுதியவர்களை விட்டு விடுவார்கள் & அதை வெளியிட்டவர்களையும் விட்டுவிடுவார்கள் ஆனால் அதை மேற்கோள் காட்டி பேசியவர்களை அதையும் அதே மதத்தை சார்ந்தவர்கள் மேற்கோள் காட்டி விளக்கம் கேட்டவர்கள் மீது மட்டும் வக்கிரத் தாக்குதலை தொடர்கிறார்கள்..


கார்த்திகேயன் மேற்கோள் காட்டி விளக்கம் கேட்டது ஆனந்த விகடனில் வெளிவந்த பொன்மலர் என்பவர் எழுதிய கவிதையோ அல்லது கண்டராவியையோத்தான்... இந்து மதத்தை சார்ந்த கார்த்திகேயன் விளக்கம் கேட்கும் போது அதற்கு தகுந்த பதிலை தருவதுதான் உண்மையான இந்து மதத்தை சார்ந்தவர்களின் கடமையாகும் ஆனால் அதைவிட்டுவிட்டு கருத்தை கேட்டவரை மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்பது எனக்கு புரியவில்லை

ஒருவேளை கார்த்திகேயன் அப்படி என்னிடம் கேட்டிருந்தால் தீட்டு என்பது கடவுளுக்கும் மனிதர்களுக்கிடையே மட்டும்தான் உண்டு கடவுள்களுக்கிடையே இல்லை என்றும் அல்லது ஒரு உயிரை தன் வயிற்றில் சுமந்திருக்கும் தாய்க்கு எப்படி மாதவிலக்கு வருவதில்லையோ அது போல உலக மக்களை எல்லாம் காக்கும் தேவிகளுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் கிடையாது என்பது இந்து மத நம்பிக்கை என்று எனக்கு தெரிந்த அறிவை வைத்து பதில் சொல்லி இருப்பேன் அல்லது பெரியவர்களிடம் விளக்கம் கேட்டு பதில் கொடுத்திருப்பேன் அப்படித்தான் கார்த்திகேயன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்க வேண்டும்

அல்லது காஞ்சிமட பெரியவர் இது போன்ற கேள்விகளுக்கு நிறைய விளக்கம் கொடுத்து இருக்கிறார் அல்லது கொடுத்து இருப்பார். அதை படித்தவர்கள் இதற்கு அழகான பதிலை சொல்வதுதான் மத பெரியவர்களுக்கு அழகு அதைவிட்டு விட்டு மிரட்டுவது அழகா என்ன?

 இந்து மதத்தை மட்டுமல்ல இஸ்லாமிய கிறித்துவ மதங்களை நோக்கி இப்படிப்பட்ட கேள்விகள் வைக்கும் போது அப்படி கேள்வி வைப்பவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கோபப்பாடமல் அல்லது வன்முறையில் இறங்கி வெட்டுவேன் குத்துவேன் என்றில்லாமல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் தருவது மதத்தை மேன்மைபடுத்துமே தவிர எந்த வகையிலும் இழிவு படுத்தாது..

ஆனால்  மதவெறியர்கள் மதக்கோட்பாடுகளை வேதங்களை பற்றி முழுமையாக படித்து இருக்கமாட்டார்கள் அப்படி படித்து இருந்தால் இப்படி கம்பு சுற்ற மாட்டார்கள் தகுந்த விளக்கம் அளித்திருப்பார்கள் அவர்கள் தங்கள் மதம் சார்ந்த கொள்கைகளை கோட்பாடுகளை படித்து இருந்தால் விளக்கம் அல்லவா சொல்லி இருப்பார்கள் இவர்கள் குறை குடங்கள் போல உள்ளவர்கள் அதனால்தான் சத்தம் அதிகமாக இருக்கிறது

எந்த மதத்தையும் நோக்கி கேள்விகள் கேட்பது தப்பில்லை ஆனால் அதற்கு தகுந்த பதில் சொல்லாமல் வன்முறையில் இறங்குவதுதான் தவறு


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :

Karthikeyan
July 20 at 9:43 PM ·

காயப்படுத்தும் எண்ணமில்லை: வருந்துகிறேன்

இரண்டு நாட்களுக்கு முன் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய ஒரு கவிதை சிலரின் மனதை காயப்படுத்தியிருக்கிறதை அறிகிறேன். ஒரு வார இதழில் வெளிவந்த அந்தக் கவிதையை குறிப்பிட்டதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. யார் உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணமும் இல்லை. எனினும் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக முழு மனதுடன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
22 Jul 2018

2 comments:

  1. இந்த தீட்டு நம் நாட்டில் மட்டுமல்லஎனக்கு நாடு சரியாக நினைவில்லை யுதர்களிடையேயு உண்டு என்று படித்தநினைவு கேரளத்தில் கொடுங்கல்லூர் பகவதிக்கும் மாதவிடாய் வருவதாகக் கூறி துணி மாற்றுவார்களாம் வயதகி விட்டதால் படித்ததுசரியாக நினைவுக்கு வருவதில்லை இடமும் பெயரும் தவறாக இருக்கலாம் ஆனால் செய்தி சரியே

    ReplyDelete
  2. நரசிம்மன் என்பவர் பேஸ்புக்கில் மிக அருமையாக விளக்கம் தந்து இருக்கிறார்...அது இங்கும் வாசகர்களுக்காக மறுபதிவு செய்யப்படுகிறது



    வேதத்தின்படி,தெய்வங்களின் தேகங்கள் சுத்த சத்வத்தினால் ஆனவை. நம்மை போன்ற ஸ்தூல தேகம் இல்லை. சுத்த சத்வதேகங்களில் மலம் உருவாகாது. மாதவிடாய் கிடையாது.

    எவ்வித வெளியேற்றமும் கிடையாது. அதனால் தான் மடப்பள்ளி இருக்கும் கோவில்களில் கழிப்பிடம் இருக்காது. கடல் எல்லா நதிகளையும் ஏற்கும், கூவத்தையும், ஏற்கும், காவிரியையும் ஏற்கும், கங்கையையும் ஏற்கும்.

    மலநீர், சுத்த நீர் எல்லாம் கடலில் கலந்தாலும், கடல் சுத்தமாகவே இருக்கும். கடல் எதனை வெளியேற்றுகிறது.?

    அசுத்தம் கடலில் கலந்தாலும் கடல் கடலாவே இருப்பது போன்று, சுத்த சத்வ உடலில் கசமலங்கள் கலந்தாலும் வெளியேற்றங்கள் கிடையாது. கடவுள் கடலை போன்றவன் என்பதால்தான் அவன் கடலில் கிடப்பதாக காட்டபட்டிருக்கிறது.

    அவன பாலை போன்று சுத்த சத்வம் உள்ளவன் என்பதால்தான் அந்த கடல் பாற்கடலாக காட்டப்பட்டிருக்கிறது.
    இதுதான் எங்கள் வைதீக நம்பிக்கை.

    இது புரியாமல் அந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் எங்கே போகும் என்று கேட்கும் புத்திஹீனர்களுக்கு இதுதான் பதில்.

    ஐம்பது வயதை கடந்த உங்கள் வீட்டு பெண்மணிகள் அந்த மூன்று நாட்களுக்கு எங்கு செல்கின்றனரோ,

    அங்குதான் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னமே தோன்றிய வேதம் போற்றும் எங்கள் தெய்வநாயகிகள் செல்கின்றனர். உங்கள் வீட்டு மூதாட்டிகளுக்கே இல்லாத ஒன்று, எங்களது யுகங்களை கடந்த நாயகிகளுக்கு எங்கனம் இருக்கும்.?பூப்பெய்தாமல் முதிர்ந்து விட்ட ஸ்தூல தேக உடல்களே உண்டு. அவர்களின் சோக கதையை நான் அறிவேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.