Friday, July 6, 2018

@avargal unmaigal
This is my 2,000th Blog Post சமுக வலைத்தளங்கள்  குடும்ப உறவுகளை சிதைக்கின்றதா?


சமுக வலைத்தளங்கள்  குடும்ப உறவுகளை சிதைக்கின்றது என்று பரவலான ஒரு பொது கருத்து ஒன்று நிலவிவருகிறது அதிலும் பேஸ்புக் போன்ற தளங்களால் பல உறவுகள் சிதைந்து விட்டது என்ற குற்றச்சாட்டை பலரும் வைக்கிறார்கள்.

பாவம் பேஸ்புக் ஒனர் மார்க், இழந்த நட்புகளையும் உறவுகளையும் இணைக்க அவர் ஒரு இலவச தளத்தை அமைத்து கொடுத்தார்.. நல்லது செய்பவரை குறை சொல்லவதுதானனே மனிதனின் இயலபு அதனால்தான் என்னவோ மிக எளிதாக  சமுக வலைத்தளங்கள் உறவுகளை சிதைக்கின்றது என்ற குற்றசாட்டை வைக்கிறார்கள்.

உண்மையில் பார்க்க போனால்  நமது நேர்மையின்மை (Dishonest)   கள்ளத்தனம் (Sneakiness)தான் நம் உறவுகளை சிதைத்து கொண்டிருக்கிறது ஆனால் அதை ஒத்துக் கொள்ள நம் மனம் இடம் கொடுக்கவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை


மேலும் பலர் சமுக வலைத்தளங்களில் தங்களது பெர்ஷனல் பிரச்சனைகளை பதிவிடுகிறார்கள்...நமது பெர்ஷன்ல் பிரச்சனைகளுக்கு பெர்ஷனல் தீர்வுதான் வேண்டும் அதைத்தான் நாம் தேட வேண்டும் ஆனால் நாம் செய்வதோ சமுக வலைத்தளங்களில் பதிந்து மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கிறோம் அதனால் நமக்கு தீர்வு கிடைப்பததில்லை என்பது பலருக்கும் புரியவில்லை... சமுக வளைத்தளங்களில் உங்களை தொடரும் நண்பர்கள் உங்களுக்கு சாதகமாகத்தான் அறிவுறை வழங்குவார்களே தவிர பிரச்சனைகளை  நியாமாக தீர்க்க அறிவுறை தருவதில்லை.... உங்களுக்கு சாதகமாக உங்கள் மனம் நோகாமல் தரும் அறிவுறை அந்த நேரத்தில் சந்தோஷத்தை தரலாமே தவிர நிரந்தர சந்தோஷத்தை தருவதில்லை.

இதுதான் இன்றைய செய்தி... அதோடு இன்னுமொரு செய்தி ; எனது பொழுது போக்கிற்காக ஆரம்பித்த இந்த வலைத்தளம் உங்கள் ஆதரவுடன் இன்னும் தொடர்கிறது...



ஆமாம் இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் இது என்னுடைய 2000 ஆம்வது பதிவு......கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பெர்ஷனல் பிரச்சனைகளாளும்  சில சமயங்களில் மனச் சோர்வினாலும் பதிவுகள் எழுதுவது குறைந்துவிட்டது.. ஆனாலும் முடிந்த வரையில் நான் என் மனதில் பட்டதை  யாரிடமும் எதையும் எதிர்பாக்காமல்  சொல்லி வருகிறேன்.


நான் பிரபலமான ஆள் இல்லை பிரபலமாக ஆக ஆசைப்படும் ஆளும் இல்லை இருந்தும் எனக்கு இது வரை எனக்கு ஆதரவு தந்தவர்களுக்கும் இனிமேல் ஆதரவை தொடர்ந்து தருபவர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

நன்றி வணக்கம்

என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய மதுரைத்தமிழன் (டி.ஜே,துரை)

28 comments:

  1. நல்லதொரு தகவலோடு உங்களது இரண்டாயிமாவது பதிவுக்கு வாழ்த்துகள் நண்பரே....

    ReplyDelete
  2. உங்களின் ஆதரவிற்கும் வாழ்த்துக்க்கும் என்றும் என் நன்றிகள் கில்லர்ஜி

    ReplyDelete
  3. இரண்டாயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதரவிற்கும் வாழ்த்துக்க்கும் என்றும் என் நன்றிகள் ஸ்ரீராம்

      Delete
  4. 2000 பதிவு .. வாழ்த்துக்கள் மதுர.. தொடர்ந்து எழுதவும். என்னை பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் ஒவ்வொருவரின் உபயோகத்தை பற்றியது. இந்த தளத்தினால் என் தனிப்பட்ட வாழ்க்கை சிதறாது என்றாலும். இதில் செலவிடும் நேரத்தை ராசாதிக்களோடும் அம்மணியோடும் செலவழிக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி வரும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விசு

      Delete
  5. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுரேஷ்

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரமேஷ்

      Delete
  7. மிகவும் உண்மையான கருத்து.(3 அது பந்தி) நல்லதொரு தகவல். உங்க 2000 ஆவது பதிவுக்கும்,தொடர்ந்து எழுதவும் என்னோட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ப்ரியசகி

      Delete
  8. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்கர்

      Delete
  9. 2000 மாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
    ஸ்வீட் காரம் ஏதுமில்லையா :)
    //நமது நேர்மையின்மை ,நமது கள்ளத்தனம் ,நமது முட்டாள்தனம் ,எதிராளியின் குள்ளநரித்தனம் இப்படி எத்தனையோ சொல்லலாம் :)
    இது பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன்

    நான் fb யில் இல்லியே இல்லியே யே :)
    ஆனால் நல்ல புரிதல் உள்ள கணவன் மனைவியரிடம் எந்த பாச்சாவும் பலிக்காது :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஏஞ்சல்

      Delete
  10. ஆஹா 2000 வது பதிவா...சூப்பர்!! எங்கள் இருவரது வாழ்த்துகள் மதுரை தமிழன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி துளசி & கீதா

      Delete
  11. கத்தியின் பயன்பாடு எப்படியோ அப்படித்தான் சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்தும் முறையில் இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

    எங்கள் இருவரின் கருத்தும் இதே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி துளசி & கீதா

      Delete
  12. 2000 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி கோமதிம்மா

      Delete
  13. அருமையான தலைப்பு
    தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    பல்லாயிரம் பதிவுகளைத் தொடர வாழ்த்துகிறேன்.
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் பாஸ்கர் வாழ்த்திற்கும் நன்றி ஜிவலிங்கம்

      Delete
  14. இரண்டாயிரத்துக்கு வாழ்த்துகள்....

    பிரச்சனையின் கோணம் ஆளுக்காள் மாறும். அதனால, எல்லார்க்கிட்டயும் சொல்வது சரிப்படாது என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ராஜி

      Delete
  15. எட்டு ஆண்டுகளாக எழுதிவரும் நான் இன்னும் ஆயிர்ம்பதிவுகளை தொடவில்லை 2000 ஒரு சாதனையே வாழ்த்துகள்

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜ்.எம்.பாலசுப்பிரமணியன் சார்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.