Thursday, July 12, 2018

பெண்கள் மிகவும் விசித்திரமானவர்கள்


பெண்கள் தாங்களை மிகவும் புத்திசாலியாக நினைத்து கொண்டு தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கு தாங்கள் கற்ற அறிவை பயன்படுத்தி வளர்த்து படிக்க வைத்து பையனுக்கு பெண்ணையும் பார்த்து கட்டிவைக்கிறார்கள்.

அந்த பையனை கட்டிக் கொண்ட பெண் கணவணுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றும் அவனை வளர்த்த விதம் சரியில்லை என்று நினைத்து கொண்டு கல்யாணம் பண்ணிய நாள் முதல் கட்டையில் போகிற வரை திருத்த முயற்சிக்கிறார்கள்


இது ஒரு தொடர் பிரச்சனையாகவே இருக்கிறது இதனை தடுத்த நிறுத்த முதலில் கிழவிகள் முதல் இளம் குமரிகள் வரை எல்லோரும் சேர்ந்து  ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு பொது திட்டத்தை வரையறுத்து கொண்டு அதன் படி ஆண் குழந்தைகளை வளர்த்தால் எதிர்காலத்தில் அவர்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் சந்தோஷமாக குறைகள் ஏதும் சொல்லாமல் கணவருடன் வாழ்க்கை நடத்த முடியுமே..

செய்வீர்களா? செய்வீர்களா

இதை படித்த பெண்களின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் இருக்குமோ?


அதிரா : என்னது நாலு பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுப்பதா? அடேய் மதுரைத்தமிழா இப்படி ஒரு திட்டம் போட்டு பெண்கள் அடிதடி சண்டை போட்டு  தெருவில் நிற்பதை வேடிக்கை பார்க்க உனக்கு ஆசையா என்ன?

ஏஞ்சல் : நாங்கள் அப்படியெல்லாம் செய்யமாட்டோம் அப்படி செஞ்சால் எங்க வாழ்க்கை போர் அடிக்கும்

கொசுறு :

ஒரு தாய் பள்ளிக்கு  போகும் மகளிடம் "உன்னிடம் செக்ஸைப் பற்றி பேசும் நேரம் வந்துவிட்டது" என்றார்.
அவள் "சரிம்மா சொல்லு உனக்கு என்ன டவுட்?"

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. கொசுறு கொசுக்கடியாவுல இருக்கு...

    ReplyDelete
  2. பெண்கள் ஒரு புதிர் என்னும் ரீதியில் நிறையவே எழுதி இருக்கிறேன் ஆனால் இப்படி ப்ராக்டிகலாக அல்ல

    ReplyDelete
  3. சிக்கலாய் உள்ள, அதே சமயம் சிந்திக்க வைத்த கொசுறு

    ReplyDelete
  4. ஹையோ ட்றுத்துக்கு பூரிக்கட்டை அடி தாறுமாறா பட்டதில கிட்னி கலங்கிப் போச்சூஊஊஉ என்னென்னமோ எல்லாம் சொல்றார்ர்.. நான் எதையும் படிக்கல்ல.. இல்ல இல்ல நான் இங்கு வரவே இல்லை.. இது அந்த கராஜ் ல இருக்கும் ஃபிரிஜ் மேல ஜத்தியமாக்கும்:)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா ஹா....அதிரா கரீக்டா சொல்லிட்டீங்க. நான் நினைச்சேன்...நீங்க சொல்லிருக்கீங்க. ஹா ஹா ஹா ஹா..(எங்க உங்க பேரு, ஏஞ்சல் பேருக்கு அப்புறம் என் பேரும் போட்டிருப்பாரோனு நினைச்சேன் தப்பிச்சேன் ஹா ஹா ஹா ஹா)

      கீதா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.