Saturday, July 21, 2018

@avargal unmaigal
சேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர் ரோகினியின் அதிரடி நடவடிக்கையும்


செய்தி : சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 7.50 மணியளவில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக மேட்டூர் அணை அருகே நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஓமலூர், தாரமங்கலம், கன்னங்குறிச்சி, தீவட்டிப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சில விநாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.மேட்டூர் அணையை சுற்றி உள்ள சில ஊர்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ள இந்த சமயத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது.

இதை கேட்டதும் சேலம் மாவட்ட ஆட்சியாளர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்.  அவர் அதிரடியில் இறங்கிய காட்சியின் புகைப்படம்தான் இது.... மக்களே மற்க்காமல் ஷேர் செய்யுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : சேலத்தில் நில அதிர்வாம்..... என்னடா இன்னும் கலெக்டர் ரோகினி ஒரு ரோட்டு இஞ்சின் மேல் ஏறி நில அதிர்வை சாமளிக்க முயற்சி செய்யும் போட்டோ அல்லது வீடியோ க்ளிப்பை இன்னும் பக்தாள்ஸ் வெளியிடவில்லை..
21 Jul 2018

3 comments:

  1. ஏதோவொரு வகையில் சிலருக்கு லாபம்.

    ReplyDelete
  2. சேலம் நில நடுக்கமும் கலெக்டரின் செயல் பாடுகளும் அமேரிக்காவி;ல் உங்களுக்குத்தெரிகிறது உங்கள் பதிவு பார்த்துதான் சில செய்திகள் அறிகிறேன்

    ReplyDelete
  3. அது சரி இப்படியான செய்தி எல்லாம் என் கண்ணுல படறதே இல்லை..ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.